(Reading time: 28 - 55 minutes)

தனிமை சிறையில் இருக்கும் பிள்ளைகள்  அன்புக்காக  ஏங்குகிறார்கள் . ஒரு பாராட்டுக்கு  தவிக்கிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு   ஏய்  குட்டி மா இந்த ட்ரெஸ் உனக்கு அழகா  இருக்கு டா  என்று ஒரு அப்பா பாராட்டினால்  அவள் காதல் ஒன்றை நினைத்து கூட பார்க்க மாட்டாள். அது கிடைக்காத தருணத்தில் யாராவது இந்த ட்ரெஸ் ல நீ  ஏஞ்சல்  மாதிரி இருக்க செல்லம் என்று யாராவது சொன்னால்  மனம் அவனிடம் செல்லாமல் இருக்குமா. கெட்டவன்  என்று தெரிந்தாலும் அன்பு கொள்ள  இந்த வார்த்தைகள் போதாதா.

கடைசியில் பணத்தை சம்பாதித்து விட்டு வந்து உனக்காக தான் மா  நாங்க உயிர்  வாழ்கிறோம் என்று பெற்றோர் உருகிகீறார்கள். ஆனால் சொன்ன  நேரம் கடந்து விட்டதே. அப்போதும் அந்த அன்பை ஏற்று  கொண்டு அவர்களையும் மீர  முடியாமல் தனக்கு சந்தோசத்தை  தந்தவனையும் மறக்க  முடியாமல் சிதரவததை தான் அந்த பெண்ணுக்கு. ஏனோ  என் நல்ல  நேரம் எனக்கு நல்ல  பெற்றோர்கள்.

எங்க வீட்டில எதிர்ப்பு சொல்ல  மாட்டங்கணு  தெரிஞ்சு தான் நான் உங்களை விரும்பினேன். என் பெற்றவர்களால் காதலுக்கு எதிர்ப்பு வரும் என்று தெரிந்தால் நான் கண்டிப்பாக விலகி போயிருப்பேன்.

என் முடிவு சுயநலமாக  கூட இருக்கலாம். காதல் சுயநலம் பார்க்காது  என்று தத்துவம் பேசலாம். ஆனால் அந்த காதல் பிரச்சனை   இல்லாமல்  இருந்தால் மட்டும் தான் அப்படி இருக்கும். புரியாமல் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து  காதலித்து விட்டு நீயா  அவர்களா என்று நான் யோசிக்க விரும்ப வில்லை. ஆனால்  என் காதலும் உண்மையான காதல் தான். உனக்காக மட்டும் இப்போது உயிரையும் குடுப்பென்.

என்ன ஆயிற்று சத்தமே  இல்லை தூங்கிடியா  வினோ  ரொம்ப நேரம் பேசிவிட்டேனா .

இல்லை டா  வாழ்க்கையை சரியா  புரிந்து வச்சிருக்கானு பிரமிப்புல இருக்கேன். என்னை பற்றி எல்லாத்தையும் நானும் சொல்லிவிடுகிறேன்  அப்பு.

ல்லூரி கடைசி வருடம் படிக்கும் போது நித்யா  என்னுடன் படித்தவள் தான் என்னை காதலிக்கிறேன் என்று வந்து சொன்னாள்.

 முதலில் நான் பெரியதாக எடுத்து கொள்ள வில்லை ஆனால் தினமும் தொல்லை செய்தாள் கடைசியில் காதலை ஏற்கவில்லை  என்றால்  செத்து விடுவேன் என்று மிரட்டினாள்  உடனே தான் சரி என்றேன்.

ஆனால் என்னுடைய கவனம் முழுவதும் படிப்பில்  தான் இருந்தது ஏன்  என்றால்  என் குடும்பம் கிராமத்தில் கஸ்ட  பட்டு  கொண்டிருந்தார்கள். அவர்களை நல்ல நிலையில் ஆக்குவது  தான் என் குறிக்கோள் என்ற முடிவில் இருந்தேன்.

கேம்பஸ் இன்டர்வ்யூ வில் வேலையும் கிடைத்தது. கடைசி வருடம் ப்ராஜெக்ட் வேலை இருப்பதால் கல்லூரி ஒழுங்காக நடக்காது அதனால் நித்யாவை அடிக்கடி பார்க்க முடியாது.

எப்போதாவது அருகில் வந்து சிரித்து  விட்டு சென்று விடுவாள் நானும் இன்னும் ஒரு மாதம் தானே கல்லோரி முடிந்த பிறகு வேலையில்  சேர ஒரு இரண்டு மாதம் அடுத்து கல்யாணம் பற்றி வீட்டில் பேசுவோம் அது வரைக்கும் அவளிடம் பேசி மற்ற நண்பர்களுக்கும் ஏன்  தெரிய வேண்டும் என்று விட்டு விட்டேன்.

இன்னும் சொல்ல போனால் நான் அவளை பற்றி நினைப்பதே அதிகம் தான். செத்து விடுவேன் என்று மிரட்டி காதலிக்க வைத்ததால் என்னவோ என் மனம் அவளை அதிகமாக தேட வில்லை. செத்து விடுவாளோ என்று பயத்தினால் மட்டும் தான் சம்மதம்  சொன்னேன்.

அவன்  பேசுவதை கேட்டு அங்கு அபர்ணா சந்தோசத்தில்  அழுது கொண்டிருந்தாள் . பின் இவன் காதல் என்று சொல்லி கொண்டிருப்பத்துக்கு பெயர் காதலா. அவள் அழுவதை  கூட அறியாமல் அவன் தொடர்ந்து கொண்டே இருந்தான். கல்லூரி கடைசி நாள் எல்லா நண்பர்களும் இருக்கும் போது என் அருகில் வந்து ஆட்டொ  கிராப்  எழுதி தர சொன்னாள் நான் என்னிடம் எதுக்கு  வாங்குற  நீ தான் என் கூடவே தானே இருப்பே என்றான். அப்போது திடீரென்று கத்தி சிரித்தாள் எல்லாருடைய கவனமும் எங்கள் பக்கம் திரும்பியது.

அவளே  பேச ஆரம்பித்து விட்டாள்  இவன் என்னை விரும்புரானாம். என்னுடைய வசதி தெரியுமா உனக்கு என் லெவெல் என்ன  என்னை நீ விரும்புராயோ என்று என்னை பற்றி பணம் இல்லாததால் என் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினாள்.

எல்லார்  முன்னிலையிலும் கூனி குறுகி நின்றேன் நீ தானே என்னிடம் காதல் சொன்ன என்று கேக்கும் மனநிலையில் கூட நான் இல்லை. என் அமைதியை அவள் சாதகமாக்கி கொண்டாள். எல்லாரும் சென்ற பின்னர் அவளுடைய தோழியிடம் சொன்னாள் எப்படி இவனை வளைச்சு  காட்டி விட்டேன் பாத்தியா என்று அப்போது தான் தெரிந்தது அவள்  என்னை ஏமாற்ற  தான் இப்படி செய்தாள் என்று.

அந்த அவமானத்தை என்னால் ஜீரணிக்க முடிய  வில்லை. அப்போது தான் வீட்டுக்கு போன உடன் அங்கு இருந்த வீட்டு  நிலமையும் அசிங்க பட்டதும் சேர்ந்து என்னை தட்கொலைக்கு தூண்டியது.

எங்கள் வீட்டில் என்னை காப்பாற்றி விட்டார்கள். என் கூடவே இருந்து அம்மா என்னை பார்த்து கொண்டார்கள். வேலைக்கு சேர லெட்டர்  வந்தது. ஒரு மாற்றம் வேண்டி இங்கே வந்தேன் ஆனால் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டு தான் அனுமதித்தார்கள். இங்கு வந்தவுடனும் என் கூட்டுக்குள் இருந்த என்னை வெளியே கொண்டு வநதது  கார்த்திக் தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.