(Reading time: 28 - 55 minutes)

அதை விடுங்கள் அம்மா அது திடீரென்று முடிந்து விட்டது காரணம் எங்களுக்கே தெரிய வில்லை.

எப்படி மா இருக்கிற கார்த்திக் எப்ப வருவான் என் பையன் ரொம்ப தொல்லை செய்யுராணா என்றார் சீனிவாசகம்

ஆமாம் அப்பா ரெண்டு தடியான்களும்  சேர்ந்து எனக்கு ஒழுங்கான சமையலே செய்து தர வில்லை அதனால் தான் இன்று நானே சமையல் செய்ய கிளம்பி விட்டேன்.

அதில் அவர் பலமாக சிரித்தார். வாய் விட்டு சிரித்த தன் பெற்றோர்களை பார்த்தவன் மனம் கீர்த்தியை நினைத்து பெருமை பட்டது.

கல்யாணம் ஆனதும் பொறுப்பு வந்து கார்த்திக்கு நீயே செய்து தருவ என்று நினைத்தால் இன்னும் அவனை செய்து தர வைக்குற கொஞ்சம் பொறுப்பாய் நடந்து கொள்ளனும் கன்ணமா என்று பெரியவராய் அதட்டினார் மங்களம்

அதெல்லாம் குழந்தை பொறுப்பா தான் இருப்பாள் மா என்று அப்பாவும் நல்லா சமைப்பாள் கீர்த்தி என்று வினோத்ஊம் ஒன்றாக சொன்னார்கள்.

அப்பாவும் பிள்ளையும் போய் சொல்கிறார்கள் அத்தை உங்கள் பொண்ணு எனக்கு ஒழுங்கவே சமையல் செய்து கொடுப்பதில்லை என்ற படியே அங்கே ஆஜர் ஆனான் கார்த்திக் அவனை கண்டதும் அனைவர் முகமும் மலர்ந்தது. ஆனால் கீர்த்தி மட்டும் அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் ஏற்கனவே அவனை ஸைட் அடிப்பது தான் அவளது வேலை இன்று இப்படி சிரித்த முகத்துடன் அழகாய் இருந்தவனை பார்க்காமல் இருப்பாளா

அதை கண்டு கொண்டவன் மனதில் மின்னல் அடித்தது எப்படி பார்க்கிறாள் பார் கண்ணை புடுங்கணும் என்று நினைத்து கொண்டே அவளை பார்த்து கண்ணடிதான் அதில் அவள் முகம் மலர்ந்து விட்டது

அவளையே இமைக்காமல் பார்ப்பது இவன் முறையானது. அப்போது எல்லாருடைய கவனத்தையும் அவன் பக்கம் திருப்பினான் வினோத் எல்லாரும் உடை மாற்றி கொண்டு வாருங்கள் போய் விட்டு வரலாம்

எங்கு அண்ணா என்று தெரியாத மாதிரி கேட்டாள் கீர்த்தி அவள் கேள்வியில் அனைவரும் சிரித்து கொண்டே அவனை பார்த்தார்கள் அவன் சிறிது வெக்கதுடன்  உன் தோழியின் வீட்டுக்கு என்றான். அவனை கிண்டல் செய்து கொண்டே கிளம்பி சென்றார்கள்.

ழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு யாரு இந்த நேரத்தில் என்ற யோசனையில் இருந்தனர் அபர்ணா வீட்டில். போய் கதவை திற  மா என்றார் அப்பா. ஒரு வழியாக மூவருக்கும் வாக்குவாதம் முடிந்து கதவை திறந்த அபர்ணாவின்  முகம் விளக்கென்னை  குடித்தது  போல் ஆனது.

வினோத்தையும்  கீர்த்தியையும் முறைத்து கொண்டே அவர்களை வர வேட்றாள்  பின்ன வீட்டில் அணியும் நைட்டி யுடன்  காட்சி அளித்தால்  அவளுக்கு எப்படி இருக்கும்.அதுவும் வருங்கால மாமனார் மாமியார் முன்னிலையில்.

ஆனால் அவர்கள் அவ்வாறு நினைக்கேவே இல்லை. இருவருக்கும் அபர்ணா வை  பிடித்து விட்டது.வினோத் பார்வை தான் இவளுக்கு விவகாராமா தோன்றியது.

இந்த நேரத்தில் இப்படி ஒரு தரிசனம் கிடைத்தால் அவனும் தான் என்ன செய்வான். பிறருக்கு தோன்றாத எண்ணம் காதலனுக்கு மட்டும் தோன்றுவது இயற்கை  தானே அதுவும் அவனுக்கு பிடிக்காத அந்த கண்ணாடி வேற அணியாமல் அவள் அழகு அவன் கண்களுக்கு விருந்தாக தான் தோன்றியது

ஒருவருக்கொருவர் அறிமுகம் முடிந்ததும்  அபர்ணா உடை மாற்றி  கொண்டு வருவதுக்கும்  சரியாக இருந்தது. அபர்ணாவை  பார்க்க தான் வந்தோம் என்று ஆரம்பித்தார் சீனி வாசன் ஒரு வழியாய்  அவர்கள் திருமணம் படிப்பு  முடிந்த பின் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அவர்கள் வீட்டிலே இரவு உணவையும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தனர்.

வீட்டுக்கு வந்தவுடன் எல்லாரும் உறங்க சென்ற உடன் தன்  அறைக்குள் வந்த கார்த்திக் அங்கு தூங்காமல் தனக்காக காத்திருக்கும் மனைவியை பார்த்தான்

இன்னும்  தூங்கவில்லையா  கீர்த்தி

இல்லை மாமா உங்களை  காணும் என்று  பார்த்தேன்.

ஏன்  நான் இல்லாமல் தூங்க மாட்டியா

தனியா இருக்குறா மாதிரி தோணும் அதனால தான்.

கீர்த்தி எனக்கு ஒரு சந்தேகம் நைட் என்னை கட்டி புடிச்சு தூங்குற  மாதிரி தான் முன்னாடி  தூங்குவியா யாரு அந்த ஆள்

அங்க எல்லாம் அப்படி இருக்க மாட்டேன் தனியா தான் படுத்திருப்பேன் எனக்கு உங்ககிட்ட மட்டும் தான் இப்படி இருக்க பிடிக்கும்  என்று உளறின பிறகு தான் உரைத்தது.இப்ப கிண்டல் செய்வானே.

அவன் ஏதோ கேக்க வரவும் எனக்கு தூக்கம் வருது  மாமா என்று சொல்லி விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டாள்

அவனும் அடுத்து ஒன்றுமே கேட்க  வில்லை. நாளை விடுமுறை  தான் அதனால்  நேரம் கழித்து தூங்கினாலும் பரவா  இல்லை இவள் எப்போது நம்  அருகில் வருகிறாள் என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று அமைதியாய் படுத்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.