(Reading time: 28 - 55 minutes)

பக்கத்துல இவ உக்காந்து பல்ல  காட்டி கிட்டு இருக்கா  அப்றம் என்ன ஒரே திட்டு  தான். அம்மாவும் அப்பாவும் கழுவி கழுவி ஊதுறங்க இவ பல்ல காட்டிக்கிட்டு இருக்க வந்துச்சு பாரு கோபம் சப்புனு  ஒண்ணு  கன்னத்தில்  வச்சேன். ஆனா அடுத்த நிமிசம் எங்க அப்பா என் கன்னத்தை பதம்  பாத்துட்டாரு.

அண்னைல  இருந்தே இவளிடம்  ஒதுங்கி தான் போவேன் . ஆனா அதை  விட கொடுமை என்ன தெரியுமா  அந்த பிள்ளை நான் என்னமோ காதலுக்கு சரி சொன்ன மாதிரி  பின்னாடியே சுத்துனது. அதை  கலட்டி  விடுரத்துக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு . இப்ப வரைக்கும் ஏன்  இவ அப்படி செய்தானு  தெரில.

ஏன்  கீர்த்தி இப்படி மாட்டி  விட்ட. உனக்கு தான் சின்ன  வயசுல இருந்தே அண்ணாவை  பிடிக்கும் தான. அப்றம் ஏன்  அவங்கள மாட்டி  விட்ட. அவங்க கஸ்ட  பட்டால்  உனக்கும் ஃபீல் தான.

அது வந்து நல்ல  யோசிச்சு பாரு அப்பு அப்ப  எனக்கு அதிக வயசு எல்லாம் இல்ல மெச்யூர் ஆ யோசிக்கவும் தெரியலை. ஏதோ நாம பொருள் நம்மள  விட்டு போகும்னு ஒரு பயம் வந்ததா. நான் அவங்களை பிரிக்காலனா  மாமாக்கு  அவளை பிடிச்சிரும்னு ஒரு பயம் அதான்.

அவள் பதிலில் எல்லாருமே  நெகிழ்ந்து விட்டனர். கார்த்திக்கின் இதயம் அந்த நேரத்திலே அவளை உள் வாங்கி கொண்டது. அந்த வயசுலே எனக்காக தவிச்சிருக்கா.

அடுத்து கீர்த்தியே தான் பேசினாள். என்ன அமைதியா  ஆகிவிட்டீங்க . அதான்  இப்ப மாமா எனக்கே சொந்தமாய்டாங்க. இன்னொரு காமெடீ  விசயம் சொல்ல வேண்டி இருக்குது  என்னனு மாமாட்ட  கேளுங்க.

ஆமா ஆமா அடுத்து என்ன கார்த்திக்.

ஐயோ  அது இதை விட கொடுமை. ஒரு நாள் சன்டே  பக்கத்துல இருக்குற  கிராமத்துக்கு என் எஸ் எஸ்  காம்ப்  கூட்டிட்டு போனாங்க. இந்த எருமை வெள்ளி கிழமையே வந்துது. சனி கிழமை இது கூட இருந்தால் சண்டை

தான் வரும்னு நினைச்சு வெளிய போய்ட்டேன். நைட் வீட்டுக்கு  வந்தால் என் ரூமில்   இருந்தாள்.

அய்  இப்ப எதுக்கு இங்க இருக்க வெளிய போனு திட்டுனேன்  போ மாட்டேனு  சொல்லி  வம்பு செய்துட்டு  நின்னா . ஒழுங்கா போய்ருநு  சொல்லிட்டே  என் புக்ஸ் எடுத்து வச்சிட்டு  இருக்கும் போது தான் பாத்தேன் ரெகார்ட் நோட்  மேல இங்க்  ஊத்தி  வச்சிருக்கா

உங்களுக்கு தெரியும் தான அப்பா ரெகார்ட் நோட்  எவ்வளவு முக்கியம்னு   விட்டேன் பாரு ஒண்ணு  அழுதுடே  போனாள் . ஆனா அதுக்கு  பழி வாங்குறதா  நினைச்சு அடுத்த நாள் ஆப்பு  வச்சா. எனக்கு அம்மா தான் ட்ரெஸ் எடுத்து வைப்பாங்க. நானும் சன்டே  எடுத்து போட்டுட்டு போனேன்  எதையுமே  கவனிக்காமல் . அங்க போய் வைட் கலர் சட்டை  அழுக்காஆகும் கழற்றி விடுங்க என்று சொன்னாங்க.

சரினு சொல்லிவிட்டு  கலட்டுறேன்  என் ப்ரண்ட்  ஒரு மாதிரி பார்த்தான்  என்னடா னு கேட்டா  இந்த பணியன் எங்க டா  வாங்கின  டிசைன்  போட்டிருக்கு னு கேட்டான். அவன் சத்தத்தை  கேட்டு இன்னும்  ரெண்டு பேர் பாக்க  அதுல ஒருத்தன் கிண்டல் அடித்தான்  டேய்  இது பொண்ணுங்க போட்ற ஜிம்மீஸ் என்று

அப்றம் என்ன அன்னைக்கு  என் மானமே போச்சு சட்டையை  போட்டுட்டே வேலைய பார்த்து  வீட்டுக்கு அழுக்கா  வந்து வீட்டில அம்மாகிட்ட  திட்டு  வாங்கி இங்க பாருங்க அவ செஞ்சு வச்சிருக்க வேலையைனு  காட்டினால்  குடும்பமே கும்மி அடிக்குது. எங்க வீட்டு  கிழவன் பாத்தியா என் பேத்தியோட  அறிவைனு  ஸர்டிஃபிகேட் வேற. இதான்  டா  நடந்தது.

கேட்டுட்டு  எல்லாரும்  விழுந்து விழுந்து சிரித்தனர்.

மாமா ஓவரா  சிரிக்காதீங்க. அப்றம் அதே மாதிரியான விசயம் இப்ப நடந்தால் இன்னும் மோசமா இருக்கும் அப்ப  ஸ்கூல் படிக்கும்  பையன் இப்ப ஆஃபீஸ் போகணும் ஞாபகம் இருக்கு தான.

ஆமா மா உன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும். ஆனால்  எதுக்கும் கொஞ்சம் திரும்பேன் பின்னாடி  உனக்கு வால்  இருக்கானு பாக்கணும் என்று அவளை கிண்டல் அடித்தான்.

ஆனால் அவன் கவனமாக இருந்தும் அடுத்த வாரம் அவளால் ஒரு இடத்தில் மாட்டி  கொண்டு பலருடைய கேலிக்கு ஆளாக பார்த்தான். வினோத்  இல்லை  என்றால்  அன்று என்ன காமெடீ ஶோ ஆய்ருக்குமோ.

சுவடுகள் பதியும்....

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.