(Reading time: 28 - 55 minutes)

அவள் முகத்தில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. இரு ஆண்களும் பதறி விட்டனர். என்ன அச்சு கீர்த்தி என்றான் வினோத்

நீங்க எப்பவுமே இப்படி சிரிச்சு கிட்டே இருக்கணும். நீங்க சிரித்தால்  மனத்துக்கு சந்தோசமா இருக்கு அண்ணா. அந்த நொடி கார்த்திக்கின் மனத்தினுள் இன்னும் ஆழமாக புதைந்தாள் . தன்  மனைவியை ரசித்தான்.  இந்த காமெடீ பீஸ் அழுதா  நல்லாவே  இல்லை இவளை ஆழ  வைக்க கூடாது என்று நினைத்தான் கார்த்திக்.

உன்னை  மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் மா. இப்போது உன் மூலம் தான் அபார்ணவும் கிடைத்தாள் . இது எல்லாவற்றுக்கும்   காரணமான தன்  நண்பனை தழுவி கொண்டான் வினோத்

கார்த்திக்கின் கண்களிலும் கண்ணீரின் சாயல்.

ஒரு வழியாக எல்லாருடைய அழுகையும் முடிந்த பின்னர்  கிளம்பலாமா டா  என்றான் கார்த்திக்

இல்லை  கார்த்திக் நான் வரலை அம்மா அப்பா வை  பார்க்க போகிறேன்.

ஏய்  நல்ல விசயம் டா  போய்ட்டு வா. நாங்க ரொம்ப விசாரிசோம்னு சொல்லு. அடுத்த முறை நாங்களும் வருகிறோம். ஆனா இன்னைக்கு  என்ன  திடீர்னு. லீவ் சொல்லணுமே  டா.

லீவ் சொல்ல தான் நண்பன் நீ இருக்கியே. அப்பு வீட்டில சரி சொல்லி விட்டார்கள்  டா  நானும் வீட்டில பேசணும். இன்னைக்கு  ஃப்ரைடே தான இன்னைக்கு  லீவ் போட்டால்  இன்னும் ரெண்டு நாள் அம்மா அப்பா கூட இருக்கலாம் அதான் . சரி டா  கிளம்புறேன் வரேன்  கீர்த்தி என்று சொல்லி கொண்டு விடை பெற்றான்.

அவன் போன பின்பு அமைதியாக அமர்ந்திருந்த கணவனை பார்த்தாள் . மாமா கிளம்பளையா நீங்க

ஹ்ம் போகணும் ஆனால் அதற்கு  முன் ஒரு வேலை பாக்கி இருக்கிறதே

என்ன வேலை என்று கேட்டு கொண்டிருந்தவளை நெருங்கியவன் கண்ணிமைக்கும் முன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சிலையாக அவள் நின்றிருந்தததை கூட கவனிக்காமல் ஓடி  விட்டான்

முதல் முத்தத்தில் உடம்பில் ஒவ்வொரு அணுவும் சிலிர்த்தது கீர்த்திக்கு.கார்த்திக்கும் மனம் முழுவது லேசான மனதுடன்  வேலைக்கு சென்றான்

சிறிது நேரத்தில் தன்னுனர்வு  வந்தவள் தான் மொபைல் எடுத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு கிளம்பும் போது ஒரு மெஸேஜ் வந்தது. அதில் அபர்ணாவிடம்  வினோத் ஊருக்கு சென்றதை சொல்ல வேண்டாம் என்று அனுப்பி இருந்தான் கார்த்திக்.

இவளும் காரணத்தை  அறிந்தவள்  சரி என்று பதில் அனுப்பினாள்

அதற்கு  ஸாரீ என்று பதில் அனுப்பினான்

ஏன்  என்று  அவள் அனுப்பினாள்.

உன்னை கேக்காமல் உன் அனுமதி  இல்லாமல் முத்தம் குடுத்தத்துக்கு என்று அனுப்பினான்.

எனக்கு கோபமே வரல என்று அனுப்பினாள்.

புரிய வில்லை என்று பதில் வந்தது. மக்கு மாமா நான் கோப பட்டிருப்பேன்  என்று நினைத்து தானே ஸாரீ என்று அனுப்பினீங்க. அதற்கு  தான் கோபம் இல்லை என்று அனுப்பினேன் புரிந்ததா

புரிந்தது.

என்ன புரிந்தது

எத்தனை முத்தம் குடுதாலும் எங்கே கொடுத்தாலும் என் கீர்த்திக்கு கோபமே வராது  என்று புரிந்தது  என்று  அனுப்பினான்.

என் கீர்த்தி என்ற வார்த்தையில் கண்களில் நிரம்பிய நீருடன் அவனுக்கு வெவ்வ வெவ்வ  நான் காலேஜ் போறேன் என்று அனுப்பி விட்டு சிரித்து  கொண்டே சென்றாள் கீர்த்தி.

ன்று முழுவதும் அபர்ணா வை  கிண்டல் செய்து கொண்டே இருந்தாள்  கீர்த்தி எழலிருக்குமே  அன்றைய  நாள் இனிய நாளாக இருந்தது

காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வீட்டுக்கு வந்து நின்ற மகனை கவலையுடன் பார்த்த மங்கலம் சீனிவாசன் அவன் முகத்தில் இருந்த சந்தோசத்தில்  நிம்மதியாக  விசாரிததனர்.

மறுபுறம் காதல் என்று சொல்கிறானே  என்ற கவலை வந்தாலும் பெற்ற மனம் அவனை குடும்ப மாக பார்க்க ஆசை பட  தானே செய்யும். எல்லாவற்றையும் சொன்னவன் அவர்களை அழைத்து கொண்டே சென்னை நோக்கி புறப்பட்டான்.

கல்லூரியில் இருந்து வந்த கீர்த்தி அபர்ணா சொல்லி தந்த செய்முறையை நினைத்த படி எப்படி இந்த சமையல் செய்வது என்று ப்ளான் செய்து கொண்டிருந்தாள். இன்று வினோத் அண்ணா வருவாங்களா என்று தெரிய வில்லையே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி ஒலித்தத்து யாராய் இருக்கும் என்று எண்ணி கொண்டே கதவை திறந்தவள் அங்கு இருந்த மங்களத்தை கட்டி கொண்டாள் வாங்க அப்பா வாங்க அம்மா எப்படி இருக்கீங்க

நாங்க நல்லா தான் இருக்கோம் மா ஆனா எங்க பொண்ணு கல்யாணத்தை கூட பார்க்க முடியாமல் போய் விட்டதே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.