(Reading time: 28 - 55 minutes)

வேலையில்  சேர்ந்த முதல் நாள் முதல் இன்று வரை உடன் இருப்பவன். எனக்காக தான் தனியே வீடு எடுத்து தாங்கி கொள்ள சம்மதிதான். அதன் பிறகு தான் இரு குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்ரானது. என்னை பற்றிய வரலாறு இது தான். இதை எல்லாம் ஏன்  உன்னிடம் சொல்கிறேனு உனக்கு தெரிந்திருக்கும்

உன்னை அன்று பார்த்ததில் இருந்தே மனத்தினுள் ஒரு சலனம் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று. ஆனால் நானே அதை பற்றி அடுத்து யோசிக்க வில்லை. ஆனால் இன்று உன் முகம் பார்த்ததும் தான் நான் நானாக  இல்லை. உன் அருகில் நான் என்னை தொலைத்து கொண்டிருந்த போது தான் மனம் மறுபடியும் ஏமாறாதே  என்று கூச்சலிட்டது. உன்னை விட்டு விலக நினைத்தேன் முடியவில்லை அபர்ணா.

அப்போது நான் படிப்பில்  கவனம் செலுத்தாமல் என் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று நினைக்க விட்டால் கண்டிப்பா அவள் மேல் என் முழு கவனமும் திரும்பி இருக்கும். அது நடக்காமல் போனது எத்தனை நல்லது. அந்த விசயத்தில் கடவுள் காப்பாற்றி விட்டார். ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டாள்  என்ற வலி  மட்டும் இன்னும் இருக்கு டா  என்று சொல்லி முடித்தான்

ருவருமே மௌனமாகவே இருந்தனர்.

ஆழ்ந்த மௌனத்தில் வினோத் என்ற கிசுகிசுபான  அபார்னவின் குரல் அவன் காதில் விழுந்தது.

அவள் குரலில் தன்னிலைக்கு  வந்தவன் அப்பூஊஊஊஊஉ என்றான். எனக்கு இப்ப உன் மடியில்  படுத்துக்ணும்னு தோணுதுடீ .

ஹெலோ ஸர்  முதலில் உங்க மீசை மாமனரிடமும் என்னுடைய மாமனரிடமும் அனுமதி வாங்குங்கள் அதன் பின் வந்து மடியில் படுத்து  கொள்ளலாம். அவனை சகஜமாக ஆக்க  அவ்வாறு  பேசினாள்.

அவனும் தெளிந்து விட்டான்.

ஏன்  அபர்ணா உன்கிட்ட நான் ஒண்ணு கேக்கனுமே

என்ன வினோ

மடியில்  படுக்க ரெண்டு அப்பாவிடமும்  சம்மதம்  வாங்க சொல்ற ஆனால் முத்தம் குடுத்தத்துக்கு சம்மதம்  வாங்க சொல்லவே இல்லை  ஏன்  அப்பு

இப்படி விவகாரமா  பேசுநா நா வச்சிறுவேன்

சரி அப்பு நீ  சிரிச்சுகிட்டே பேசுற இந்த கோபம் வேண்டாம் . அங்கிள் ஆண்டி  என்னை தப்பா நினைப்பாங்க தானே வீட்டுக்கு வந்து நல்ல சாப்பிட்டு விட்டு இப்படி ஒரு காரியம் செய்து விட்டான் என்று அவங்க முகத்தில் எப்படி விழிப்பேன் நான்

அதெல்லாம் கவலை இல்லை நாளைக்கே நீங்க வீட்டுக்கு வாங்க

எதுக்கு அடி வாங்கவா

இல்லை உங்களை மாப்பிள்ளை பார்க்க  அப்பா வர சொன்னார்

ஏய்  என்ன சொல்ற அவங்களுக்கு தெரியுமா அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவனுக்கு.

நீ  போன உடனேயே அப்பா என்னிடம் பேசணும்னு சொன்னாங்க. நான் லூசு மாதிரி உன்னையே பார்த்து இருக்கேன் போல. அதில் கண்டு பிடிச்சிடாங்க . பிடிச்சிருக்கானு கேட்டாங்க. ஆமாம்னு சொன்னேன்  ஆனால்  நீ என்கிட்ட பேசாமல்  விலகி போறதையும்  சொன்னேன்.  அவங்களும் உன்னை  கவனிச்சு  இருப்பாங்க போல. அவர்களுக்கு உன்னை பிடித்து விட்டது  அதனால் சம்மதித்தார்கள் இனி அத்தை  மாமாவிடம் சொல்லி நீ தான் முடிவு செய்ய வேண்டும்

நான் அப்படியே சந்தோசத்தில்  மிதந்து கொண்டு இருக்கேன் அப்பு.

சரி சரி மிதந்தது போதும் இன்னும் மிதந்தா நாளைக்கு இருவரும் தூக்கத்தில் மிதப்போம் தூங்குவோமா

தூங்கனுமா

ம்ம்ம் ஆமா வினோ

அதுக்கு ஏன்  குசு   குசுனு பேசுற எப்படியோ  இருக்கு டீ

எப்படியாம்

அப்படியே உன்னை கடிச்சு தின்னலாம்  போல இன்னும்  என்னெனவோ

அது வரைக்கும் எங்க கை சும்மா இருக்குமோ

இன்னைக்கு  மேடம்  பக்கத்தில் வரும் போது தான் பார்த்தோமே உங்க கை என்னை எப்படி தடுத்தது என்று

வினோத் கிண்டல் செய்யாத நான் வைக்கிறேன்

சரி டா  குட் நைட் லவ் யூ

டுத்த நாள் ப்ரெட் ஆம்‌ப்லெட்  செய்து வைத்து விட்டு கார்த்திகையும் வினோத்தையும்  சாப்பிட அழைத்தாள் கீர்த்தி. வினோத் முகமே அவனின்  மன நிலையை பறைசாற்றியது. இருவருக்கும் அவனை பார்த்து சந்தோசமாக இருந்தது.

கீர்த்தி சொன்ன மாதிரியே வேணும் வேணும் என்று சாப்பிட கேட்டான் வினோத். கார்த்திக் வினோத்தையும்  கீர்த்தையும் பார்த்து கொண்டிருந்தான்.

வினோத் தட்டை  பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான் அபர்ணாவை  பார்க்கும் ஆவலில் ஆனால் அண்ணா  என்று கண்ணீர் குரலில்  அழைத்த கீர்த்தியை பார்த்து திடுக்கிட்டு அவளை பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.