(Reading time: 24 - 47 minutes)

"ஷ்.. உள்ளே வா தமா.. பாரு எதிர்வீட்டுத் தம்பி என்னமோ ஏதோன்னு நம்மை வெறிச்சி பார்க்கிறான்.. எங்கையோ போகிறான் போல.."

"ம்.. ஏன் பார்க்க மாட்டாங்க?.. இந்தப் பொண்ணு காலேஜ் போறதுகுள்ள எத்தனை சலம்பல் பண்ணுது.. ஆனாலும் பார்த்தாலும் பார்த்தேன்.. இப்படிப்பட்ட திமிர்பிடித்தவளைப் பார்க்கலை.. எப்படிச் சொல்லிட்டுப் போறா பாருங்க.. நீங்க ராத்திரி சாப்பிடுவீங்களாம்.. வரட்டும்.. அவளுக்கு அதையே ராத்திரி வைக்கிறேனா இல்லையா பாருங்க.." தமயந்தி பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப..

"அட உள்ளே வாம்மா.. போதும் எப்போ பார்த்தாலும் செல்லத்தைக் குறை சொல்லிட்டு.. அவ விருப்பபடித்தான் சந்தோஷமா இருக்கட்டுமே.. அவளும்தான் இப்ப அனுபவிக்காமல் எப்ப அனுபவிப்பா சொல்லு.. இதெல்லாம் அந்த அந்த வயசில அனுபவிக்கணும் தமா.. தவமா தவமிருந்து பெத்த ஒத்தைப் பிள்ளைடி.. நீ அந்தக் காலத்தில் உன் காலேஜ் கேண்ட்டீல்ல சாப்பிடலையா சொல்லு.." ஜெயராமன் மனைவியைச் சமாதானம் செய்தபடி மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார்.

"என்னங்க நீங்க புரியாமப் பேசறீங்க.. எனக்கென்ன அவள் மேல பகையா என்ன?.. அவ நான் தவமிருந்து பெத்தப் பொண்ணுன்னு எனக்குத் தெரியாது பாருங்க?.. அந்தக் காலத்தில அவ பிறக்க நான் என்னெல்லாம் செய்திருக்கேன்னு எனக்குத்தானே தெரியும்?.. ஆனா அதுக்காக அவளைப் பொறுப்பில்லாமல் விட்டுட முடியுமா என்ன?.. பாருங்க ஆளு வளர்ந்த அளவிற்கு இன்னும் அவளுக்கு முதிர்ச்சி வரலை.. எல்லாம் விளையாட்டுத்தனம்.. இவ்வளவு வேகமா வண்டி ஓட்டுகிறா?.."

"எல்லாம் எடுத்துச் சொல்லுவோம் தமா.. கொஞ்சம் விட்டுப்பிடிச்சிதான் பிள்ளையை நம் வழிக்குக் கொண்டு வரணும்.."

"இங்கப்பாருங்க.. நீங்க என்ன வேணா செய்யுங்க.. இனி அவளைக் கொஞ்சம் வெளியில் கண்டதையும் சாப்பிடாமல் வாயைக் கட்ட வைக்கணும், எப்பப்பாரு பிட்சா, பர்கெர் இல்லைனா அந்த வீணாப் போன மேகி அப்புறம் பாஸ்தான்னு கொழகொழன்னு வாயில வைக்க விளங்காத ஒரு சாப்பாடு.. இதில என்னங்க சத்து இருக்கும் சொல்லுங்க.. வெறும் உடம்புதாங்க வெயிட் போடுது.. எதையாவது சொன்னா எதையாவது எடுத்தெறிந்து பேசறா.. கொஞ்சம் கூடக் காசோட அருமையும் தெரியலை.. நாளைக்கு வேற வீட்டுக்கு வாழப் போறப் பொண்ணுங்க.. யாராவது குத்தம், குறை சொல்லிடக்கூடாதுங்க.. அதுக்குத்தான் தலையா அடிச்சிக்கறேன்.." தமயந்தி அலுத்துக்கொண்டே கணவனுக்கு மதிய உணவை எடுத்து வைத்தாள்.

"ஷ்.. தமா.. கொஞ்சம் விஷயத்தை ஆறப்போடும்மா.. சும்மா எதையாவது செல்லத்தைச் சொல்லாதே.. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.. அப்புறம் என்ன சொன்னே?.. எம் பொண்ணு வேற வீட்டுக்கு வாழப் போவாளா?.. ஹாஹா.. இங்கப்பாரு நானும் உனக்கு எத்தனையோ முறைச் சொல்லியாச்சு.. அவ ஆளப் பிறந்தவடி.. யார் வீட்டுக்கோ போய் வாழ வேண்டிய அவசியமென்ன?.. வீட்டோட ராஜகுமாரனை நான் பார்ப்பேண்டி.. என் பொண்ணு இங்கத்தான் நம்மளோடு சேர்ந்து இருக்கப் போறா.. பிறகு யாருக்காக நாம் கவலைப்படணும்.. விடு அவள் சந்தோஷமா இப்போ வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.. நேரம் காலம் வரும்.. வீட்டோடு இருக்க நல்ல மாப்பிளையை நானே பார்க்கிறேன்.."

மேலே ஏதோ சொல்லிக் கொண்டே போனவர் கடையிலிருந்து மேனேஜரின் போன் வர, மனைவிக்குப் பிறகு பேசலாம் என்று தலையாட்டிவிட்டுக் கடைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு, டிபன் டப்பாவுடன் தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தார் ஜெயராமன்.

செல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்த தமயந்திக்கு ஏனோ எதுவும் சரியாகப்படவில்லை.. கணவன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நன்றாகத்தான் இருக்கும்.. ‘ஆனால் பெண் என்பவள் அடுத்த வீட்டுக்கு வாழப் போவதுதானே முறை.. நடைமுறை வாழ்க்கைக்கு இதெல்லாம் சரிவருமா.. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்றே நினைத்துக் கொண்டவர்.. எது எப்படியிருந்தாலும் தன் செல்ல மகள் வாழ்க்கையில் என்றும் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று பூஜையறைக்குள் நுழைந்து தன் வேண்டுதலை வைத்தார்.

காலம் பதில் சொல்லுமா?.. தந்தை நினைத்தது நடக்குமா?.. இல்லை தாயின் பிரார்த்தனையாவது பலிக்குமா?..

அங்கே கல்லூரிக்குச் சென்ற சுந்தரியோ தன் வாழ்க்கையை முறைப்படி வாழ்ந்து கொண்டிருந்தாள் தன் தோழிகளுடன் கைகோர்த்துக் கொண்டு.......

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1138}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.