(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

கூட்டிட்டுப்போனா...என்னெ என் புருஷன் இல்லேன்னா வேற யாரு கூட்டிட்டுப் போய்க் காட்டுவாங்க? எனக்காகன்னெ புறப்படச் சொல்லலியே! எப்படியும் அவரு போறா ரில்லியான்னு கேட்டேன். அதுக்கென்ன பதில் வந்ததுன்னு சொல்ல வேண்டிய தேவெ யில்லே- ஆயிரத் திரநூறு கடனாச்சான்னு நீ ஆச்சரிய மடைஞ்சா அதுக்காகச் சொல்றேன்."

"சரி, என்னாச்சி? உன்னெப் பணம் கேட்டாரா?!"

"முழுசும் கேளு! 'எனக்கு ஒண்ணும் தோணல்லே பானூ! நினெச்சிக்கிட்டா இதயம் வெடிச்சிடும் போல இருக்குது. இந்தக் கவலெயிலெ என் உடம்புகூடத் கெட்டுப் போயிட்டுது. என்ன செய்யச் சொல்றே சொல்லு!' என்ன உலக அறிவு!

எவ்வளவு விசித்திரமான மாற்றம்! பணத்துக்காக மனிதன் எவ்வளவு ஈனமான நிலெக்கு இறங்கி விடுகிறான்! எவ்வளவு கீழ் மட்டத்துக்குப் போய்விடுகிறான்! எல்லாத்தையும் விட அடுத்த மனுஷனெ ஊதனா பறந்து போற புல்லுன்னு நினெக்கற்து இன்னும் விசித்திரம் இல்லியா?

'என்ன யோசிக்கிற? என்னெ என்ன செய்யச் சொல்றியோ சொல்லு பானூ!'

'அதெ என்னெக் கேக்க வேண்டிய தேவெ யில்லே. நீங்க கடன் பண்ணப்பொ எந்த ஒரு ரூபாய்க்கும் என் ஆலோசனெயெக் கேக்கலெ. அதெத் தீத்துக்கவேண்டிய நாள்ளேயும் என் உதவி தேவெ யில்லே.'

'அப்படிச் சொல்லாதே பானூ! இப்பொ எவ்வளவு வாதிச்சாலும் கடன் தீக்கணு மில்லியா! என் கிட்டெ இருக்குதா சொல்லு?'

'உங்க கிட்டெ காசு எப்பொ இருக்கப் போவுதுன்னு, எப்படித் தீக்க முடியும்னு கடன் வாங்கனீங்க?'

'அப்பொ அவ்வளவு யோசிக்க முடியாத பைத்தியக் காரனா இருந்தேன்.'

'அதிருக்கட்டும், வீட்லெ தாங்கிக்க முடியாத செலவுங்க என்ன இருக்குதுன்னு அவ்வளவு கடன் வாங்கனீங்க? இதுவரெக்கும் எனக்கு எங்கம்மா அவங்களெ துணி வாங்கித் தர்றாங்க. வேலெக்காரியே இல்லாம வேலெ செஞ்சிக்கிட் டிருக்கறேன். சினிமா, ஊர் சுத்தற்து எல்ாம் என்னக்கோ நிறுத்தியாச்சி. மாசாமாசம் நூத்தி அம்பது ரூபா வந்திட் டிருந்தா...?'

'அதெ யெல்லாம் இப்பொ இழுக்காதே பானூ! இப்பொ நீ எவ்வளவு சொன்னாதான் என்ன லாபம்? என் கஷ்ட சுகங்கள்ளெ உனக்கு அக்கறெ இல்லியா? இந்தக் குடும்பக் கடமெங்க உனக்கு மட்டும் இல்லியா?'

நான் எத்தனையோ விஷயங்க மொத்தமா நினெவு வந்து வேதனெயுடன்--' கஷ்ட சுகங்க! நிறெஞ்ச கர்ப் பிணியா--கொதிக்கற காய்ச்சல்லெ, சோடா குடிக்கணும்னு நினெச்சா ஒரு அரை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.