(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

வெளியேறினேன். தெருவில் நடக்கும்பொழுது அழுகை பொங்கி வந்தது. பானுவுக்கு எந்த உதவியும் செய்ய இயலாம லிருந்தது போக, கண்ணால் பார்ப்பதற்கும் இல்லாமல் தூரமாகிக் கொண்டிருக்கிறேன். பானு அழுகிறாள். எனக்குத் தெரியும். நான் என்ன செய்வேன்?

பானுவின் கணவன்! அன்று நான் விடுதிக்கு ஓடிச் சென்று பார்த்து தந்த ராஜசேகரம்! எதைப் பார்த்து அவ்வளவு அகமகிழ்ந்தேன்! இந்தக் கண்களால் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் மிகக் குறைவு இல்லையா!

ஒரு வாரம் கடந்தது. என் மனம் ஒன்றும் நன்றாகவே யில்லை. இரவுகளில் சரியாகத் தூக்கம் வருவதில்லை. எதையும் சாப்பிட விருப்பம் இல்லை. எந்நேரமும் பானுவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. கண்களில் நீர் கசிந்து கொண்டே இருந்தது.

அன்று இரவு தூக்கம் வருவதற்குள் கெட்ட கனவு வந்தது. பானு பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். திடுக்கிட்டு எழுந்தேன். இனம் தெரியாத பயம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பானு அழுகிறாளோ என்னவோ? இந்த நள்ளிரவில்!.... தனியாக அவள்..... நீண்ட நேரம் இருட்டில் சிந்தித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ஒரு முறை சென்று வரலாமா என்று தோன்றியது. அந்த நேரத்தில், அந்த நள்ளிரவில் சென்றால் அவர் என்ன சொல்வாரோ என்று தயங்கினேன். ஆனால், அப்போது துணிந்து போயிருந்தால் பானு பிழைத்திருப்பாள். என் பானுவை என் கைகளாலேயே நழுவ விட்டுவிட்டேன்! கடவுளே! என் பானு என்னை விட்டுப் போய்விட்டாள். தாயில்லாத இந்தப் பச்சைக் குழந்தையை நான் என்ன செய்வேன்?

பானு நிரந்தரமாகத் தூக்கத்திலிருந்து விடுதலை பெற்றாள். முடிவில்லாத கடலின் அடிமடியிலே, நாள் தோறும் புதுமையுடன் வரும் புது வெள்ளத்திலே எழுந்து எழுந்து விழும் அலைகளிலே எங்கேயோ.....எங்கேயோ.... உயிரை விட்டு, எல்லாவற்றையும் மறந்து போய்க் கொண்டிருக்கிறாள். அய்யோ தங்கச்சி........!

தொடரும்

Go to Kaagitha maaligai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.