(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

மறைக்காதே. வாசகர்களுக்குத் தவறான எண்ணங்களை உண்டாக்காதே. இன்றையி லிருந்து உண்மையைத் தெரிந்துகொண்டிருந்தால் நாளை வரப்போகும் நிலைமைகள் உன்னை ஒன்றும் செய்ய இயலாது. இது அனுபவத்தி லிருந்து வெளிவரும் அறிவுரை, சகோதரி!'

"எப்படி இருக்குது?" என்று கேட்டாள் பானு சிரித்துக்கொண்டே.

"சிறப்பா ஒண்ணு மில்லே----நாம் அனுபவிக்காதது யாருக்கும் கிடைக்காதுன்னு நினெக்கற்து தப்பு. குடும்ப வாழ்க்கெயிலே சுகமே இல்லாத நாள் கல்யாணங்களே நடக்காது. நாம் என்பது எவ்வளவு? நாம் பார்த்த உலகம் எவ்வளவு? பானுமதி வீட்டுப் பக்கத்தலேயே சரோஜாதேவி குடுத்தனம் பண்ணிக்கிட் டிருக்கா. மனு ஷங்கள்ளே பல ரகங்க எப்பவும் இருக்கும். இல்லியா?"

பானு பேசவில்லை----சிரித்தாள்.

"அது அப்படி இருக்கட்டும், குளிக்கணும் பானூ! துண்டு கொண்டு வந்து வை. அப்புறம் பேசிக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே எழுந்தேன். குளித்து விட்டு வருவதற்குள் மாமா வந்திருந்தார்.

பார்த்ததும் பேச்சுக் கொடுத்தேன்.-

"நல்லா இருக்கீங்களா மாமா?"

"ஹூம்" என்று சொல்லிவிட்டு வீறாப்பாகப் போய் விட்டார். எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. குளியலறையிலிருந்து துண்டுக்காகச் சத்தம் போட்டார். பானு என்னிடமிருந்து துண்டை வாங்கிச் சென்று கொடுத்தாள். அதைக் கையில் வாங்கியதும் தூக்கி எறிந்தார். "ஈரத்துணியெக் கொடுத்தா எப்படித் தொடச்சிக்கற்துண்ணு, உன் திமிறு? தெருவுலே போற முண்டங்களும் சேந்து ... வெக்கமில்லாத முண்டங்க!"

நான் பேரதிர்ச்சி யடைந்தேன். வெட்கத்தால் இடிந்து போனேன். அவமானத்தால் குறுகிப் போனேன். அவர் தெளிவாக என்னையே திட்டுகிறார். நான் இன்னும் அஸவர் வீட்டு வாயிற்படியில் நின்று கொண் டிருந்தால் வெட்கமில்லாதவன் இல்லையா? வேகமாகத் துணிகளை அணிந்து கொண்டேன். அவர் அறைக்கு முன்னால் சென்று----

" மன்னிச்சுடுங்க மாமா! இத்தனெ நாளா நான் வந்து போறதாலே உங்களுக்குக் கஷ்டம் கொடுத்துட்டேன். இருந்தாலும் அடுத்த மனுஷங்ககிட்டே அவமானப் பட வேண்டிய அளவு நான் மோச‌மானவன் இல்லே. போறேன்!" என்று சொல்லிவிட்டுத் தெரு வாயிற் படியை நோக்கி நடந்தேன்.

" அண்ணா!....."

பானு உள் வாயிற்படியில் நின்று கொண்டிருந்தாள். திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஒண்ணும் நினெச்சிக்காதே தங்கச்சி! போய்ட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.