(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

யிடெயே அன்புணர்ச்சிக்கே பஞ்சம் வந்துட்டுதா? அந்த அம்மா அனு பவிக்கற விஷயங்களே எழுதற்தில்லே இல்லியா? அதனாலே அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

' உங்கள் கதைகளை நான் நிறையப் படித்தேன். எதிலே பார்த்தாலும் அளவில்லாத அன்பு, எல்லையில்லாத மகிழ்ச்சி நிறைந்து இருக்கின்றன. இவற்றை நீங்கள் உண்மையை அடிப்படையாக வைத்தே எழுதுகிறீர்களா? இல்லை, குடும்ப வாழ்க்கையை வெறும் கற்பனையி லிருந்து வடித்தெடுக்கிறீர்களா? உங்கல் கதைகளில் இருக்கும் அழகை யெல்லாம் நீங்கள் நூற்றுக்கு நூறு பங்கு அனு பவிக்கிறீர்களா? இல்லை, அப்படி அனுபவிக்கிற தம்பதிகளைப் பார்க்கிறீர்களா? தயவு செய்து மனம் திறந்து பதில் எழுதுங்கள்.' பதில் வந்தது. அதெப் பாத்தா எனக்குச் சிரிப்பு வந்தது. ' நான் பெரும்பாலும் கற்பனையையே அடிப்படையாக வைத்து எழுதுகிறேன். ஓரளவு சுற்றி இருக்கும் குடும்பங்ளைப் பார்த்து வருகிறேன். எங்கேயும் எனக்கு, என் கற்பனைக்கு எதிரான 'உண்மை நிலை' புலப்பட வில்லை. இருக்குமென்று கூட நான் நினைக்கவில்லை. இந்தக் கால மனிதர்கள் எல்லாரும் மிகவும் மென்மையான மனமுள்ளவர்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் என்றைக்கும் கடுமை காணப்படாது. எது எப்படியானாலும் எந் கதைகளில் --அழகுகளை நான் அனுபவித்து மட்டும் எழுதுவதில்லை. இன்னும் நான் மணமாகாதவள்.'

அந்தப் பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் குடுத்தது. எனக்கு அவமேலே இரக்கம் கூட வந்தது. திரும்பி ஒரு கடிதம் எழுதினேன்.----'அனுபவம் இல்லாத எழுத்தாளத் தங்கையே!

வாழ்க்கையிலே அடியெடுத்து வைக்காத உனக்கு அந்த வாழ்க்கை அனுபவத்தை ஒரு சகோதரியாக உன் மேன்மையை விரும்பும் ஒரு பெண்ணாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.! இனிமேலாவது கண்களைத் திறந்து, கற்பனை உலகத்தி லிருந்து வெளியே வந்து உண்மை வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயற்சி செய். உண்மையை மறைக்கும் உன் கதைகளால் இன்னும் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்காத அப்பாவிகள் தவறான எண்ணங்களை உண்டாக்கிக் கொண்டு, எதிர் காலத்தில் அவர்கள் கற்பனைகள் தகர்க்கப்படும்போது எத்தகைய ஆறுதலும் தேடிக் கொள்ள முடியாமல் போவது தவிர வேறு பயன் இல்லை. உன் கற்பனைகள் கற்பனைகளே என்றும், உன் கனவுகள் கனவுகளே என்றும், உன் விருப்பங்கள் நிறைவேறாதவைதாம் என்றும், நீ வெறும் பொய் என்றும் தெரிந்து கொள்ளும் நாள்----உன் வேதனை வர்ணிக்க இயலாதது தெரியுமா! வாழ்க்கையிலே தோல்வி யடைந்த நான் சொல்லும் இவை ஒருநாள் உனக்கு நினைவு வரும். அவற்றுக்குத் தேவையும் வரும். காரணம் நீ ஒரு பெண்தான்! எழுத்தாளராக, தூய்மையான இடத்தில் இருக்கும் உன்மேல் கனமான கடமை சுமத்தப்பட்டுள்ளது. என்றைக்கும் உண்மை நிலையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.