(Reading time: 22 - 43 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

பிறக்கப்போகிறது தங்கச்சி!

"கேசவ்! அழுதிட் டிருக்கியா?"

"ஆமா ... இல்லெ. வா அக்கா! பானுவைப் பாத்தியா என்ன வேலை ..."

"ஆமாம், என்ன வேலெ செய்துட்டாப்பா? கடிதங்கள்ளே என்ன எழுதினா?"

"காரணம் ஒண்ணும் எழுதல்லே. எழுத முடியாதது ஏதோ நடந்திருக்கணும். இல்லேன்னா எனக்குத் தவறாமெ எழுதுவா."

அக்கா திகிலோடு நின்றுகொண்டிருந்தாள்.

"பாபு தூங்கறானா?" "அசெஞ்சிக்கிட்டிருந்தா முதுகெத் தட்டிட்டு வந்தேன். நீ கொஞ்ச நேரம் படுத்துக்க கூடாதா?"

"உக்காந்திருந்தாலும், படுத்திட்டிருந்தாலும் ஒண்ணுதான்கா! கண்ணு மூடமாட்டேங்குது. மனசெல்லாம் என்னவோ மாதிரி இருக்குது."

"பானு தனக்கு எந்த அதிர்ஷ்டமும் இல்லேன்னு நினெச்சிட்டாளே தவிர, உன்னெப் போலெ அண்ணன் போதும்! அதுக்காகவே அவ உயிரோ டிருக்கணும்."

"அக்கா! நம்ம வேதனெயிலே நாம் என்னவோ நினெச்சிக்கிறோமே தவிர, பானுவெப் போல ஒருத்திக்கு வேறெ வழியில்லே. அது எனக்குத் தெரியும்." சற்று நேரம் பேசிவிட்டு, அக்கா----மகள் எழுந்ததால் போய்விட்டாள். நான் மெதுவாகச் சென்று நானியின் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். வீடெல்லாம் ஒரே அமைதியாக இருந்தது. ஆனால் ஒருவரும் தூங்கவில்லை.

காலை வந்தது. பாபு மறுபடியும் அழுகையைத் தொடங்கினான். மறுபடியும் ஏதோ பூசி மெழுகப் போனேன். நம்பவில்லை. அவனுக்கு அறிவு அதிகம். "எங்க அம்மா ........ வருவான்னு சொன்னே ............ மாமா! எங்க அம்மா எங்கே?" என்று நேரடியாகக் கேட்கிறான்.

"கண்டிப்பா வருவாப்பா! சொந்தகாரங்க சீக்கிரமா அனுப்பிச்சாத்தானே! ரெண்டு நாள்ளே வந்துடுவா. அதுவரெ உன்னெயும் என்னெயும் விளையாடச் சொன்னா."

"ஊஹூம்! நான் ஆதமாத்தேன், மாமா! ....... என்ன எங்கம்மா கித்தே கூத்தித்துப் போமாத்தே...?" பாபுவின் கண்களில் நீர் திளிர்த்தது. நான் ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறேன். அவன் கேள்விகளுக்கு நான் என்ன சொன்னாலும் அவன் கேட்பதாக இல்லை. குழந்தைகள் எல்லாரையும் அழைத்துக் காட்டினால் அவர்களோடு சேர்வதில்லை. என்னை விட்டு எங்கேயும் போவதில்லை. "அம்மா!" என்று மிகமிகப் பரிதாபமாக அழுது கொண்டே இருக்கிறான். அன்று அவன் சரியாகச் சாதம் சாப்பிடவில்லை. இரவு நான் பக்கத்தில் போட்டுக் கொண்டு படுத்தேன். அழுது அழுது தூங்கி விட்டான். தூக்கத்தில் கூடத் தேம்புகிறான். திடீரென்று துள்ளி எழுந்து அழத் தொடங்கினான். அவனை எப்படிச்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.