Kandathum kadhal is a Family / Romance genre story penned by Sasirekha.
This is her seventeenth serial story at Chillzee.
சில்சி வாசகர்களுக்கு,
நான் முதல் முதலில் சில்ஸிக்கு அறிமுகமானதே ஆதிபனின் காதலி என்ற கதையின் மூலமாகதான். அந்த கதையின் வெற்றியை தொடர்ந்து பல கதைகளை எழுதினேன் சில்ஸியில் எனது கதைகள் இடம்பெற்றன சில்ஸி குழுமமும் மற்றும் வாசகர்களாகிய நீங்களும் எனக்குத் தந்த ஆதரவை நான் என்றுமே மறக்க மாட்டேன்.
ஏற்கனவே நீங்கள் படித்த ஆதிபனின் காதலி என்ற கதையின் அடுத்த பாகம்தான் இந்த ”கண்டதும் காதல்” கதையாகும்.
இதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும்.
முதல் பாகம் போலவே இப்பாகமும் அன்பு பாசம் குடும்பம் காதல் என அனைத்து அம்சங்களுடன் எழுதியுள்ளேன்.
இதில் புதிய கோணத்தில் ஆதிபனையும் ஆதிராவையும் காட்டியுள்ளேன். இக்கதை அனைவரையும் மகிழ்விக்கும் என நம்புகிறேன்
முதல் பாகத்தைப் போல இக்கதைக்கும் வாசகர்களாகிய நீங்கள் ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
சசிரேகா