(Reading time: 14 - 28 minutes)
Couple

வளர்த்துக்கணும்!"

 " அது சரிங்க, இந்தம்மாவுக்கு இந்த நிலைமை வந்திருக்கிறது, பரிதாபமாகத்தான் இருக்கு...... "

 " திரும்பவும் சொல்றேன், இந்தம்மாவுக்கு ஏற்பட்டமாதிரி அதிர்ச்சி, யாருக்கு வேணுன்னாலும், இல்லை, வேண்டான்னாலும், ஏற்படலாம்....இந்தம்மா வீட்டிலே வேலை செய்துவந்தவங்க, ஒருநாள் இந்தம்மாவுடைய வைரத்தோடுகளை திருடிக்கிட்டு ஓடிட்டாங்க போலிருக்கு, அந்த அதிர்ச்சியைத்தான் இவங்க மனசு ஏற்றுக்கமுடியாம, புலம்பித் தவிக்குது......."

 " சார்! இந்தம்மா யார், எந்த வீடு, எல்லாம் எனக்கு தெரியுங்க......."

 " அப்படியா?"

 " ஆமாம், சார்! இவங்க பெரிய பணக்காரங்க! மூன்றுமாடி பங்களாவிலே வசிக்கறாங்க! என்னோட ஷேர் ஆட்டோவிலே அஞ்சோட ஆறாவது பேரா சவாரி பண்றாங்களேன்னு ஏமாந்துறாதீங்க!"

 " அப்படியா? சொல்லு, சொல்லு! சுவாரசியமா இருக்கே.........."

 " இந்தம்மா பரம்பரையா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவங்க! நிறைய படிச்சவங்க! காலேஜிலே புரொபசரா வேலை பார்க்கறாங்க!"

 " என்ன சொல்றே, தர்மன்! என்னாலே நம்பவே முடியலியே......"

 " பாவம் சார்! இவங்க வாழ்க்கையே ஒரு சோகக் கதைங்க!"

 " இந்தம்மா, நல்லவேளையா நாம பேசறதை கவனிக்காம, தனக்குத்தானே, புலம்பிக்கிட்டிருக்காங்க! நீ கதையை சொல்லு!"

 " இந்தம்மாவை பெற்ற தாயின் பரம்பரை சொத்துக்காக, அவங்களை ஒருத்தன் அவங்களை கல்யாணம் செய்துகிட்டு, இந்தம்மா பிறந்தபிறகு, கிடைத்த பணத்தை சுருட்டிக்கிட்டு வேறு ஒருத்தியோட ஓடிட்டாங்க!"

 " அடப்பாவி!"

 " ஒருவேளை, அவங்களும் இவங்களைப்போல பைத்தியமோ என்னவோ, யாருக்குத் தெரியும்? அதனாலே, புருஷன்காரன் தாங்கமுடியாம ஓடிட்டானோ என்னவோ, உண்மை தெரியாம நாம அவனை குற்றம் சொல்வது தப்புங்க!"

 " பலே! பலே! நான் சொன்ன பாடத்தை எனக்கே திருப்பிட்டியே, கெட்டிக்காரன்யா நீ!"

 " தப்பு, தப்பு, நீங்க நிறைய படிச்சவங்க! நான் பத்தாங் கிளாஸ் ஃபெயில்!"

 " தர்மன்! படிப்புக்கும் அறிவுக்கும் எப்பவுமே நேரடி தொடர்பு இருக்கும்னு சொல்ல முடியாது, ஏன்னா படிப்புங்கறது, உலக ஞானம், விஷயங்களை தெரிந்துகொள்வது, நடைமுறை பழக்கங்களை கற்றுக்கொள்வது, ஆனால் அறிவு வேறு!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.