(Reading time: 14 - 28 minutes)
Couple

 " அதெப்படிங்க?"

 " விஷயங்களை தெரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும், வேறே! அந்தப் புரிதலை பயன்படுத்தி நடைமுறையில் நடப்பதை ஏற்றுக்கொண்டு ஏமாற்றம், கோபம், ஆத்திரம், வருத்தம், ஏற்படாம தன்னைக் காத்துக்கொள்வதும் வேறே!"

 " சார்! நீங்க பெரிய பெரிய விஷயங்களை பேசறீங்க, விடுங்க! கதையை முழுசும் கேளுங்க! புருஷன் ஓடிப்போனபிறகு, குடும்பச் சொத்துக்கள் நிறைய இருந்ததினாலே, அந்தம்மா இவங்களை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினாங்க!"

 " நீதான் சொன்னியே, இந்தம்மாவும் நிறைய படிச்சு புரொபசரா வேலை பார்க்கறாங்கன்னு......."

 " அப்படியா சொன்னேன், தப்பு, பார்த்தாங்க! ஆமாம், வேலையை விட்டுட்டாங்க, போன வருஷம்!"

 " ஏன்?"

 " அது ஒரு தனிக்கதைங்க! இந்தம்மாவின் அழகுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு, பசங்க நிறையபேர் சுற்றிச் சுற்றி வந்தாங்க! அதிலே அம்சமான ஒரு ஆளை இந்தம்மாவும் லவ் பண்ணி மாசக்கணக்கிலே ஊரைச்சுற்றி, நெருங்கிப் பழகி, இந்தம்மா கழுத்திலே அவன் தாலிகட்ட சம்மதம் சொன்னபோது, இந்தம்மா அவனை வேண்டான்னு தள்ளிட்டாங்க!"

 " அடிப்பாவி!"

 " பார்த்தீங்களா, மறுபடியும் தப்பு பண்றீங்களே, என்ன காரணம்னு தெரியாம, இவங்களை 'பாவி'ன்னு சபிக்கலாமா? தப்புங்க!"

 " தர்மன்! உன் பெயரை 'கிருஷ்ணன்'னு மாற்றிடலாமா? என்னை திரும்பத் திரும்ப பேச்சிலே மடக்கிடறியே!"

 " சார்! எனக்கேதுங்க அத்தனை அறிவு? ஊரிலே யாருக்குமே இந்தம்மா அவனை ஏன் கட்டிக்கலைங்கற காரணம் தெரியாது! ஆனா ஏதோ ஒரு காரணம் இருக்குங்கறது மட்டும் தோணுது...."

 " இவங்களைப்பற்றி எல்லாம் தெரிந்து வைச்சிருக்கியே, இவங்க வீடு, இல்லை இல்லை, பங்களா, உன் ஆட்டோ ஸ்டாண்டுக்கு பக்கத்திலேதான் இருக்கா?"

 " பக்கத்திலேயா, அவங்க பங்களா காம்பௌண்டிற்கு வெளியிலேதான் எங்க ஸ்டாண்ட்!"

 திடுமென, அந்தப் பெண்ணின் புலம்பல் நின்றுபோனதை உணர்ந்து, அவள்பக்கமா பார்த்தோம்.

 " நாம இறங்கவேண்டிய இடம் வந்ததுதெரியாம, பேசிக்கிட்டே இருக்கீங்களே, ஏதோ ராணுவ ரகசியத்தை!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.