(Reading time: 14 - 28 minutes)
Couple

'நான்', 'எனது' என்னும் ஈகோ உணர்ச்சி! நீங்கள் வேறு, உங்கள் ஈகோ வேறுதானே! உங்களுடைய ஈகோ என்று சொல்லும்போதே, உங்க உடல், உங்க மனம், உங்க பணம், உங்க கௌரவம் என்பதுபோல, உங்க ஈகோ வேறே, நீங்க வேறே இல்லையா? .இழப்பு உங்கள் ஈகோவுக்குத்தானே! உங்களுக்கில்லையே............நீங்கள் எதையுமே இழக்காதபோது, ஏன் புலம்பவேண்டும்?"

 சரஸ்வதி என்னை நெடுநேரம் உற்றுப் பார்த்தாள். அவள் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது.

 " சார்!...."

 " திருமகன்னு பெயர் சொல்லி கூப்பிடுங்க!"

 " இப்ப நான் சொல்லப்போகிற புதிய உண்மையை கேட்டீங்கன்னா, என்னை அச்சு அசல் பைத்தியம் என்று நீங்களே பட்டம் கட்டிவிடுவீர்கள்......"

 " ஏன் அப்படி சொல்றீங்க? ஒருநாளும் நீங்க பைத்தியமில்லே, அறிவாளி!"

 " அவசரப்படாதீங்க! நான் இப்ப இந்த ஆஸ்பத்திரிக்கு எதுக்கு வந்திருக்கேன்னு தெரியுமா? ரேடியம் ட்ரீட்மெண்ட்டுக்காக! ஆமாம், நான் ஒரு கேன்சர் பேஷண்ட், இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிர் வாழ்வேன்னு டாக்டர் போன வருஷமே எச்சரிக்கையா

சொல்லிட்டார். அதனாலே என் திருமணத்தைக்கூட கைவிட்டேன். அந்த ஆறுமாதம் வாழறதுக்கும், இந்த ரேடியம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும், இப்ப சொல்லுங்க, ஆறுமாதங்களிலே எல்லாவற்றையும், உயிரையே விடப்போகிற நான் நகைக்காக புலம்பறது, பைத்தியக்காரத்தனம் இல்லாமல் வேறென்ன?"

 நான் வாயடைத்துப் போனேன்!

 ஒவ்வொரு மனிதனிடத்திலும்தான் எத்தனை ரகசியங்கள்! புரியாத புதிர்கள்!

 " திருமகன்! என் அறிவுக்கண்களை நீங்கள் திறந்து வைத்துவிட்டீர்கள். நான், எனது, எனக்கு போன்ற உடைமை உணர்வு, நம்மை மனதுவழியாக ஆட்டிப்படைத்து, சோகத்தில் ஆழ்த்துகிறது எனும் சத்தியத்தை எனக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள். திருமகன்! நீங்கள்தான் எனது குரு! நான் உயிர் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருக்கிற இந்த அதிகபட்ச ஆறுமாதங்களும் நீங்கள் என்னுடனேயே இருக்கவேண்டும், இது எனது வேண்டுகோள், உங்கள் சகோதரியின் வேண்டுகோள்!"

 அவளுக்கு ரேடியம் ட்ரீட்மெண்ட் முடிந்ததும், அவளை ஓலா வாடகைக்கார் வைத்து அவளுடைய வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தேன்.

 " திருமகன்! நீங்கள் என்னுடனேயே இருக்கிறீர்களே, நீங்கள் இங்கு வந்த காரியத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.