(Reading time: 14 - 28 minutes)
Couple

உங்களுக்கு சொந்தமாயிற்றா?"

 " ரெண்டு வருஷம் முன்பு வரை, எங்கம்மாவிடம்தான் இருந்தது, இப்போதுதான் என்னுடையதாயிற்று......"

 " அதாவது, இந்த நகை ரெண்டு வருஷம் முன்பு வேறு ஒருவருக்கு சொந்தமாயிருந்தது, கொஞ்சகாலமா உங்களுடையதா இருந்தது, இப்போது எங்கோ வேறு யாருக்கோ சொந்தமாக உள்ளது, சரியா?"

 " சரிதான்!"

"நீங்களே சொன்னீங்க, அந்த வேலைக்காரி உங்களிடம் கேட்டிருந்தால், நீங்களே சந்தோஷமா அதை கொடுத்திருப்பீங்கன்னு...."

 " நிச்சயமா? எனக்கு எந்தப் பொருள்மீதும் நிரந்தரமான பற்றுதல் கிடையாது......."

 " பொய் சொல்றீங்க! நகையின்மீது உள்ள பற்றுதலினால்தானே, பைத்தியமா,....போயிடுத்தே, போயிடுத்தேன்னு புலம்பறீங்க?"

 " இல்லை, புலம்புவது நகைக்காக அல்ல, எனக்குச் சொந்தமான ஒரு பொருள் களவாடப்பட்டுவிட்டதே எனும் இழப்பு தரும் அதிர்ச்சியினாலே!"

 " தப்பா நினைக்கலேன்னா, ஒண்ணு சொல்லட்டுமா?"

 " மனம் விட்டுப் பேசும்போது, தப்பா நினைக்க என்ன இருக்கு?"

 " அந்தப் பொருள் ஆரம்பத்திலே, பூமிக்கடியில் வெறும் கரித்துகளாக இருந்தது, பிறகு கொஞ்சம் கொஞ்சமா வைரமா மாறித்து, பிறகு அதை வெட்டி எடுத்து யாரோ நகையா கடையிலே வைத்திருந்தாங்க, அதை உங்க பரம்பரையில் இருந்த முன்னோர்கள் யாரோ வாங்கி தலைமுறை தலைமுறையா மாறி மாறி வந்து கடைசியா உங்களிடம் வந்து, இப்போது எங்கேயோ இருக்கு, அதனாலே பொருளின்சொந்தக்காரன் மாறிக்கொண்டே இருக்கிறான், சரியா?"

 " சரிதான்"

 " இந்த மாறுதல் இயற்கையானது, இயல்பானது, இந்த உண்மையை ஒப்புக்கிறீங்களா?"

 " நிச்சயமாக!"

 " அப்படின்னா, உங்களை புலம்ப வைப்பது நகையல்ல, நம்பிக்கைத் துரோகமல்ல, நகையின் பணமதிப்பல்ல, ...."

 " வேறெது?"

 "'என்னுடையது'என்று பொருளின்மீது நீங்கள் செலுத்துகிற உடைமை உணர்ச்சி! இது மாறுவது இயல்பானது, இயற்கையானது! அதை சாதாரணமாக ஏற்காமல் உங்களை புலம்பவைப்பது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.