(Reading time: 36 - 71 minutes)

புகழிடம் பேசிவிட்டிருந்த சுதாகரன் ஒவ்வொரு நாளுமே யாழினி வீட்டினர் மூலமாக இந்த திருமணம் நிறுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்க, ஒரு வாரத்திற்குபின் புகழ் ஒரேடியாக செல்வதாக சொன்ன முடிவு அவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கு பின்னால், நடந்த ஒவ்வொரு சம்பவமும் அவருக்கு சாதகமாகத்தான் அமைந்தது தமிழின் பிடிவாதத்தை தவிர.

இதற்கிடையில் தமிழுக்கும் – யாழினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தி சுதாகரனின் நண்பருக்கு தெரிய வந்தது.

ச்ச.. நிச்சயம் முடிஞ்சா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரினு தெரியாதா சுதா எனக்கு? எந்த தைரியத்துல என் பொண்ணை தமிழுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா வாக்கு கொடுத்த நீ? உன் பையன் மனசுல வேற பொண்ணு இருந்தா, என் பொண்ணு எப்படிடா சந்தோஷமா வாழுவா? என் பொண்ணு உனக்கும் பொண்ணு மாதிரி இல்லையா? அவ லைஃப் பத்தி நினைச்சியா? ச்ச..நீயெல்லாம் ஒரு நண்பன்” என்று வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அவர் சென்றிருக்க, அன்றுதான் தமிழும் தங்களுக்கு பதிவு திருமணம் நடந்த்தை பற்றி சொன்னான்.

தான் போட்ட திட்டம் நடக்கவில்லை, எத்தனை முயற்சித்தும் வெற்றியில்லை. எனில் தமிழுக்கு யாழினிதான் துணைவி என்பது இறைவனின் முடிவோ என்று சுதாகரின் ஒரு மனம் சொல்லத்தான் செய்தது.மறு மனமோ, தனது திட்டங்கள் அனைத்துமே தூள் தூளாகியதற்கு அனைவருமே காரணம் என்ற கோபத்தில் கொதித்தது. அந்த கோபமே தமிழ் தங்களை பிரிந்து போகும்போது அவனைத் தடுக்கவிடாமல் செய்தது.

ன்னங்க.. என்னங்க?” நடந்தவற்றை கண்மூடியபடி நினைத்து பார்த்தவரை உலுக்கினார் மனோன்மணி.

“ஆங்..ம்ம்?”

“மணி என்ன தெரியுமா? ஏன் சாப்பிடாமல் கொள்ளாமல் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”என்று சுதாகரின் நெற்றியில்கை வைத்தார் மனோன்மணி. அவர் கையை அப்படியே பிடித்துக் கொண்டார் சுதாகரன்.

“இந்த அன்பிற்கு தகுதி இல்லாத ஒரு வாழ்க்கைய நான் வாழுறேன்னு உன்கிட்ட எப்படி சொல்லுவேன் மனோ? அந்த பையன்.. அவன் எதுக்கு வந்தான்? உன்னையும் என்கிட்ட இருந்துபிரிச்சிடுவானா?” முதன்முறையாக செய்த தப்பு அவரை ஐயம் கொள்ளவைத்தது.

இதுநாள் வரையில் தான் செய்த தவறுகளை நினைத்து பார்க்கும் தருணங்கள் சுதாகரனுக்கு அமையவில்லை. என்ன நடந்திருந்தாலும் பெத்த அம்மா அப்பாவை விட்டுட்டு மனைவிதான் பெருசுனு போயிருக்க கூடாது என்று தமிழ் மீது உண்டாகிய கோபத்திற்கு தூபம் போட்டே தனது குற்ற உணர்ச்சியை மறைத்து வைத்திருந்தார் அவர். ஒவ்வொரு முறையும் தமிழுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நீண்டுகொண்டே போக தன் கோபம் சரியானதுதான் என்று அவரே நம்ப தொடங்கிவிட்டார். தனது கரங்கள் கரைப்படியாதவை என்று அவரே சொல்லிக் கொண்டே வேளையில் புகழ் வந்து நிற்க, புதைத்து வைத்த குற்ற உணர்ச்சி அனைத்துமே விஷ்வரூபம் எடுத்தது.

“எ..எங்க உன் விருந்தாளி?”

“புகழ் இன்னும் வீட்டுக்கு வரல..நீங்க சாப்பிட வாங்க.. உடம்பு சரி இல்லன்னா, சாப்ட்டுட்டு தூங்குங்க”என்றார் மனோன்மணி.

“ம்ம்” என்றவர் மனைவி சொன்னது போலவே செய்ய, மனோன்மணியின் உள்ளத்தில் பாரம் கூடியது.

“தமிழ் யூகிச்சது சரிதான். இந்த மனுஷந்தான் ஏதோ பண்ணிருக்காரு.. அதான் தலைகுனிஞ்சு இருக்கார்” என்று மனதிற்குள்ளே பேசியவருக்கு “ஐயோ”என இருந்தது.

ன்றிரவு!

இரவு உணவை முடித்துவிட்டு ஆயிஷாவுடன் பேசிக் கொண்டிருந்தான் புகழ்.

“நாளைக்கு நான் வீட்டுக்குவந்து பேசுறேன் ஆயிஷாபேபி.. மாமாவும் அத்தையும் என்மேல ரொம்பவும் கோபமா இருக்காங்களா?”

“ஹும்கும்.. அப்படியே கோபப்பட்டுட்டாலும்! நீங்க போனதுக்கு அப்பறம் ஒரு தடவை வேணும்னே கல்யாண பேச்சை எடுத்தாங்க. நான் அப்போவே நம்ம காதலைப் பத்தி சொல்லிட்டேன்..”

“வாவ்..தைரியமான பொண்ணுதான்..”

“ஏன் என் தைரியம் என்னனு இப்போத்தான் உங்களுக்கு தெரியுமா?”

“ஹீ ஹீ.. சரி ..அத்தை மாமா என்ன சொன்னாங்க? அதை சொல்லு!”

“பெருசா எந்த ரியக்ஷனும் கொடுக்கல.. புகழுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு முன்னாடியே எங்களுக்கு தெரியும்மா.. அதை உன் வாயால கேட்கனும்னு தான் இப்படி கல்யாண பேச்சை எடுத்தோம்னு சொல்லிட்டாங்க..”

“அட பாருடா.. “

“அது மட்டுமில்லை.. புகழ் அப்படி சும்மா விட்டுட்டு போற ஆளே இல்லை. உன்னை விட்டுட்டு அவரால இருக்க முடியாது. இருந்தும் அவர் விலகி இருக்கார்னா கண்டிப்பா காரணம் இருக்கும். வெயிட் பண்ணுவோம்னு சொன்னாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.