(Reading time: 36 - 71 minutes)

“இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்த்தேன் புகழ்.. உங்க்கிட்ட ஃபோன் பேசி அதை கட் பண்ணுறதுக்கு முன்னாடியே அவரோட குரல் கேட்டுச்சு..நீங்க ரெண்டு பேரும் பேசினதைன் நான் கேட்டுட்டேன்” என்றுஆயிஷா சொல்ல புகழ் வாயடைத்து நின்றான்.

“அவர் மனசு மாறிடும் புகழ்.நீங்க பேச பேச அவர் எதையுமே ஆட்சேபிக்கல.. நான் அவரை பார்க்க வரவா?”

“நீயா? ம்ம்ம் வாயேன்” என்று அவன் அனுமதி அளித்தான். இங்கு வந்த ஆயிஷாவோ, சுதாகரனின் மனமாற்றத்திற்கு தன்னாலானதை செய்யத் தொடங்கினார். தூரத்தில் இருந்தே கணவரை கண்டுகொண்ட மனோன்மணியின் உள்ளத்தில் கோபம் லேசாக ஊற்றெடுத்தது. எனினும் அவரது உடல்நிலை,யாழினியின் வார்த்தைகள் இரண்டும் அவரை நிதானமடைய வைத்தது.

ருவாரம் கடந்திருந்தது. ஆயிஷா- புகழ் இருவரும் சுதாகரனை கவனமாக பார்த்துக் கொண்டார்கள். அன்பின் சுவையை உணர்ந்திருந்தார் சுதாகரன். உடல் அளவில் நன்றாக தேறியவர், தன்னருகில் அமர்ந்திருந்த ஆயிஷாவின் தலையை பாசமாய் வருடினார்.

“ஒருவேளை எனக்கு பொண்ணு இருந்திருந்தா, நான் யாழினியையும் அவளுடைய நட்பையம் கஷ்டப்படுத்திருக்க மாட்டேனோ?”என்று அவர் வாய்விட்டு கேட்ட கேள்வியில் மற்ற மூவரும் வாயடைத்து போனார்கள்.

“மாமா..!”என்று புகழ் அவரை தடுக்க முயல,

“ஏன் நீதான் எப்பவும் நல்லவனா இருக்கனுமா ? தப்பு பண்ணா அதை பேஸ் பண்ணனும்.. மனோ கிளம்பு.. “

“எங்க ?”

“நம்ம மருமகளை பார்க்க!” என்று அனைவரையும் வாயடைக்க செய்தவர முதல் ஆளாக காரில் அமர்ந்தார்.

டுத்த ஒரு மணி நேரத்தில், நிசப்தம் மட்டும் நிலவிய மோகனின் வீட்டில். நடந்ததை தன் வாயால் சொல்லியிருந்தார் சுதாகரன். வெறுப்பை உமிழும் விழிகள் தன்மீது படியும் என நினைத்து அவர் தலைக் குனிந்தே இருக்க, அனைவருமே அதற்கு எதிர்மாறாக அவரை பார்த்தனர்.

செய்த தவற்றை ஒப்பு கொள்ளும் தைரியம் அனைவருக்கும் வாய்ப்பதில்லையே ! அதுவும் புகழே தவறை மறைக்க வாய்ப்பளித்தும் அவர் நேர்மையாய் இருந்த விதம் அனைவரும் ஆறுதலாகியது. மனோன்மணியே மனம் இளகித்தான் போனார்.

“என்னை மன்னிச்சிரு யாழினிம்மா” என்று அவளது கைகளை அவர் பிடித்துக் கொள்ள பெரிதாக புன்னகைத்தாள் யாழினி.

“ஐயோபோதும் மாமா.. எத்தனை தடவை மன்னிப்பு கேட்பிங்க? குடும்பத்துல பிரச்சனைகள் வருவதும் சரியாகுறதும் சகஜம்..இங்க இருக்குற எல்லாருக்குமே என் மேல தனி பாசம் இருக்குனு தெரியும். அந்த நம்பிக்கையிலும், உரிமையிலும் சொல்லுறேன்..என் மேல சத்தியம்.. இனிமே இதபத்தி யாருமே பேசக்கூடாது..”என்று அவள் கூறிட தன்னவளை பெருமையாக பார்த்தான் தமிழ்.

புகழை கட்டியணைத்து அவனிடம் மன்னிப்பு கேட்டார் சுதாகரன். அவன் கைகளைப் பற்றி யாழினியின் கையோடு இணைத்தவர்,

“என் மருமகளை முழுமனசா உன் தோழியா ஒப்படைக்கிறேன்..உன் தோழியை ஊரறிய என் மருமகளாக கூட்டிட்டு போறேன்.. அதுமட்டுமில்லை, என்னை செல்லபொண்ணு ஆயிஷாவுக்கும், உனக்கும் அதே நாளில் கல்யாணம்.நான் ஆயிஷாவோட அம்மா அப்பாகிட்ட பேசுறேன்”என்று சொன்னார்.

“இந்த உலகத்துலேயே எனக்கு மட்டும்தான் மூணு அப்பா,மூணு அம்மா “ என்று ஆயிஷா நெகிழ, அவளை தோளோடு அணைத்த புகழ்,

“அப்போ நானு?நானும்தானே உனக்கு அப்பா, அம்மா மாதிரி, அப்போ நாலு அப்பா நாலு அம்மா” என்று சொன்னான் புகழ்.

அவன் தோளில் போட்டிருந்த கையை எடுத்துவிட்ட தமிழ்,

“டேய் மச்சான், கல்யாணத்துக்கு முன்னாடியே என் தங்க்ச்சிய இப்படி கட்டிப்பிடிக்க கூடாது” என்று குரலை கடினமாக வைத்துகொண்டு சொல்ல,

“ஐயோ சிடுமூஞ்சி இஸ் பேக் போல” என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டாள் யாழினி. அங்கிருந்து தப்பிக்கும் பொருட்டு, “நான் உடனே சுப்ரஜாம்மாவுக்கு கால் பண்ணி இந்த விஷயத்தை சொல்லுறேன்”என்று நழுவினாள்.

“தமிழ்” என்று நடுங்கும் குரலில் அழைத்தார் சுதாகரன்..என்னத்தான் இருவரும் அனைவரிடமும் சிரித்து பேசினாலும்,ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை. அதை உணர்ந்த பெற்றவரின் மனம் மகனின் அன்புக்காக ஏங்கி தவித்தது.

“ஷ்ஷ்.. என்னப்பா இப்படி அழுதுக்கிட்டு.. உங்களை ரொம்ப எதிர்த்து பேசிட்டேன்பா..என்னை மன்னிச்சிருங்க” என்று அவரை இறுக அணைத்துகொண்டான். அந்த இறுகிய அணைப்பே பலநூறு மன்னிப்புகளையும், சமாதானங்களையும் பகிர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.