(Reading time: 36 - 71 minutes)

“ஓ.. அப்போ மாமா எத்தனை அவார்டு வாங்கி இருக்காரு? அப்பறமா விசாரிக்கிறேன்”என்றான்.அவளிடம் சரமாரியாக வாங்கிய அடிகளை முத்தங்களாக திருப்பி தந்தவன்,

“மூணு வருஷம் வெயிட் பண்ணிட்டோம்.. இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள்டா” என்று சமாதானப்படுத்தும் குரலில் சொன்னான் தமிழ். அவன் தன்னிடம் காட்டிய நெருக்கத்தில் தடுமாறியவள்,

“நீங்க ஒரு சிடுமூஞ்சி சாமியார்னு நினைச்சேன் ..ஆனா இவ்வளோ ரொமாண்டிக்கா சமாதானம் பண்ணுறீங்க..”என்றாள் கிண்டலாய்.

“அஹெம்..என்னமோ உனக்கு எதுவுமே பிடிக்காத மாதிரி சொல்லுற..” என்று அவன் முறுக்கி கொள்ள யாழினி சிரித்தாள்.

என்னத்துக்கு என்னை பார்க்குறேன்னு

அப்போ திட்டிப்புட்டி போனவ..” என்று தமிழ் எதிர்ப்பார்ப்புடன் பாடிட,

கட்டிக்கொள்ள உன்ன பார்க்குறேன்னே,

கூரைப்பட்டு எப்போ வாங்குவ?” என்று தொடர்ந்து பாடி அவனை தாவி அணைத்துக் கொண்டாள்.

“இந்த ஒரு பார்வையாலே தானே நானும் பாழானேன்..

பார்க்காத..பார்க்காத” என்று இருவருமே உல்லாசமாக பாடினார்கள்.

ருத்துவமனை!

இமைகளை பிரிக்க முடியாமல் படுத்திருந்தார் சுதாகரன். ஏதோ ஆழ்ந்த கனவில் இருப்பது போல உணர்ந்தார். “தமிழ்..தமிழ்..என்னை மன்னிப்பியா? மறுபடியும் அப்பான்னு கூப்பிடுவியா நீ?” என்று அரற்றிகொண்டிருப்பவரின் மூடிய இமைகளிலிருந்து கண்ணீர் சுரந்தது.

“அப்பா..” என்று அன்பொழுகும் குரலொன்று ஜீவனுக்குள் பாய்ந்து அன்பினைக் கிளர்ந்தது.மீண்டும் “அப்பா” என்ற குரலோடு மென்கரம் ஒன்று அவரது கண்ணீரை துடைக்க, தன்னை அப்பா என்று அழைத்தது ஒரு பெண்ணின் குரலாயிற்றே! என்ற ஆச்சர்யத்துடன் விழி திறந்தார் சுதாகரன். “யாழினி”என்று சின்ன முணுமுணுப்புடன் விழி திறந்தவர் எதிரில்நின்றவளைப் பார்த்து இன்னும் விழிகளை பெரிதாய் விரித்தார்.

“யாரிந்த பெண்? தவறாக உள்ளே நுழைஞ்சிட்டாளோ” என்று அவர் யோசிக்கும்போதே அவள் பட்டாசாக வெடித்தாள்.

“என்னப்பா,கண்ணு முழிக்க இவ்வளவு நேரமா? எல்லாரையும் பயமுறுத்திட்டீங்க போங்க.. இப்படியே படுத்திருந்தா தலை சுத்தும்..எந்திரிங்க” என்றவள் அவரை நிமிர்ந்து அமர வைத்தாள். பார்வையை அறையெங்கும் சுழல விட்டார் அவர்.

“அம்மாவை தேடுறீங்களா? அவங்க கேண்டின்ல இருப்பாங்க.. நீங்க முதல்ல முகத்தை கழுவிட்டு ப்ரஷ் பண்ணுங்க.. வாங்க..”என்றவள் சுதாகரை கைத்தாங்களாக எழுப்பி குளியலறைக்கு அனுப்பி வைத்தாள்.

“தலை சுத்துதாப்பா? இந்த பாலைகுடிங்க” என்றவள் அவரை பேசவே விடவில்லை..”சீக்கிரம் குடிங்க”என்று அதட்டல்போட்டவள்,

“இன்னைக்கு என்ன நியூஸ்னு பார்ப்போம்”என நாளிதழை புரட்டினாள். செய்திகள் அவருக்கும் கேட்கும்படி உரக்கபடித்தவள்,

“அப்பாடி..குடிச்சு முடிச்சாச்சா? ஒரு கப் பாலைகுடிக்க ஒரு மணி நேரமா? வெளில க்ளைமேட் செம்மய இருக்கு..மிஸ்டர் சூரியன் கண்ணு கூசுற அளவுக்கு பல் இளிக்கிறாரு.. வாங்க கொஞ்சம் காலார நடப்போம்” என்று அவரை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த பூங்காவில் நடக்க தொடங்கினாள்.

“என்னப்பா..பேசவே மாட்டுறீங்க?”

“நீ எங்கம்மா பேசவிட்ட?” என்று சுதாகரன் பாவமாக கேட்கவும், பக்கென சிரித்தாள். சுதாகரனைப் பற்றி அவள் கேள்விபட்டதிற்கு எதிர்மாறாக இருந்தார் அவர்இப்போது! அதை எண்ணி அவள் பெரிதாய் சிரித்து வைத்தாள். மிக உரிமையாக அவள் கையைப் பற்றிக் கொண்டவள்,

“சரிப்பா .. பேசுங்கப்பா..நான் கேட்குறேன்”என்று அவள் சொன்ன விதத்தில் கண் கலங்கினார் சுதாகரன். “அப்பா”இந்த அழைப்பினை இனி கேட்கவே போவதில்லையா? என்று அவர் மனம் ஏங்கி போனதை அவள் “அப்பா”என்று அழைக்கும்போதுதான் அவர் உணர்ந்தார்.

“யாரும்மா நீ?உன் பேரென்ன? என்னை தெரியுமா உனக்கு?”

“சுதாகரன் அப்பா தானே நீங்க? ரொம்ப நல்லாவே தெரியும்”என்றவள் தன்னைப் பற்றி கூற ஆரம்பித்தாள். அவளைப் பற்றி சொல்லசொல்ல அவர்முகத்தில் வியப்புகூடியது. ஒரு வழியாக தன்னைப் பற்றி அவள் சொல்லிமுடிக்க,

“பேபி, பேஷண்ட்னு கூட பார்க்காம மாமா காதுல ரத்தம் வர வைக்கிறியா?” என்று கேட்டப்படி அங்கு வந்தான் புகழ்.

“ஹலோ, உங்களுக்கு அவரு மாமான்னா எனக்கு அப்பா..தமிழ் எனக்கு அண்ணா..எனக்கில்லாத உரிமையா? என்னப்பா?”என்று அவள் கேட்க வியந்து போனார் சுதாகரன். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே புகழ் ஆயிஷாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.