(Reading time: 36 - 71 minutes)

உனக்குள் அலைப்பாய்கிறதோ காதல்?

சபிக்கிறேன் நேரத்தை, இன்றென்ன மந்தமோ?

என் அவசரத்தை கண்டு நகை சிந்துமோ?

இதோ வந்ததே சுபவேளை,

நங்கை கழுத்தில் திருமாங்கல்யம் மாலையென!

திலகமிட்டு நீ சிரிக்கின்றாய்,

உலகம் மறந்து வியக்கின்றேன்!

என்னுயிரின் உயிரே,

பிரகாசத்தின் உச்சமே,

இதழில் தவழும் தமிழே,

துயர் தீர்க்க வந்தாயோ?

இருள் சூழ்ந்த இவள் மனதில்

பௌர்ணமியை கவிழ்த்தாயோ?

முகம் பார்த்து அகம் சேர்ந்தவளை

முகவரி ஆக்கி கொண்டாயோ,

இனி இவளின் அகவரி சொல்லும்

இவளே உன் அகவரியென!

“இப்போ சந்தோஷமா?” முகமலர்ந்து கேட்டான் தமிழ். அதை ஆமோதிப்பது போல தலை அசைத்தாள் யாழினி. சுதாகரன்- மனோன்மணி,மோகன் மூவரும் மனம் குளிர அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர் இருவரும்.

புகழும் ஆயிஷாவும் இருவரையும் அணைத்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

“போதும் மச்சான்.. அதான் கல்யாணம் முடிஞ்சுச்சுல? இப்போ ரெண்டு பேரும் எங்கள் கல்யாணத்துக்கு வேலையை கவனிங்க”என்று புகழ் சொல்ல,

“டேய் மாப்பிள்ளைய லட்சணமா கொஞ்சமாச்சும் வெட்கப்படுடா!” என்றான் தமிழ்.

“யாரு அதை நீங்க சொல்லுறீங்களா? இவ்வளவு பேரு இருக்குறத கண்டுக்காம முத்தா கொடுத்துட்டு பேச்சை பாரு”என்றதுமே சிரிப்பலை பொங்கியது.

“ராஜ்கிரண் மாதிரி இருக்குற நீங்களே இவ்வளோ காதல் பொழியுறீங்க.. நானெல்லாம் பொறக்கும்போதே ஜெமினி கணேசன் ..சும்மா இருப்பேனா?” என்று புகழ் கேட்க,

 “என்ன சோலையம்மா இவன் இப்படி வாயடிக்கிறான்? இவனை எங்கிருந்து புடிச்ச?” என்று யாழினியைப் பார்த்து கேட்டான் தமிழ்.

“சோலையம்மாவா?”

“நான் ராஜ்கிரண்னா நீதானே சோலையம்மா..”

“அய்யோ தாங்கமுடியலப்பா..” என்று யாழினி கை வைத்துக்கொள்ள, உண்மையான அக்கறையில், தமிழும் புகழும் அவளை நெருங்கி வந்தனர்.

“தலை வலிக்கிதா?” என்று இருவருமே கோரசாய் கேட்க, அனைவரும் அவர்களின் அன்பில் நெகிழ்ந்து போயினர் அனைவரும். ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் ஆருயிர் கணவன் இருவரின் அன்பினில் விழிகள் பனிக்க நின்றிருந்தாள் யாழினி. நட்பினை புரிந்துகொள்ளும் கணவனும், தோழியின் நல்வாழ்வை முன்னிறுத்தும் நண்பனும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை தன் இஷ்ட தெய்வம் முருகனிடம் வைத்தாள் யாழினி. வேல்முருகனின் திருவிளையாடல் இத்துடன் முடிந்ததென்ற களிப்பில் நாமும் சுபம் சொல்லிடலாமா? டாட்டா..

ஹாய் ப்ரண்ட்ஸ் ! “தமிழுக்கு புகழ் என்று பேர்” 2016 இல் நான் தொடங்கிய நாவல். சில பல காரணங்களினால், அதிக நேரம் தேவைப்பட்டது இத்தொடரை முடிப்பதற்கு. இத்தொடர் எனக்கு நிறைய விதங்களில் ஸ்பெஷ்லா அமைஞ்சது.

முதல் விஷயம், இதுவரைக்கும் என்னுடைய கதைகளில் “ரியல் இன்ஸ்பிரேஷன்”னு யாருடைய சாயலாவது இருக்கும். ஆனா இந்த கதையை பொறுத்தவரைக்கும் தமிழ் மற்றும் புகழ் ரெண்டு பேருமே நான் சந்திக்காதவர்கள். இப்படி இருப்பாங்களானும் தெரியல.. ஆனா கமல் சார் ஸ்டைல்ல” இப்படி இருந்தால் நல்லா இருக்குமே”னு தோன்றிய கதாப்பத்திரங்கள்.

ரெண்டாவது விஷயம், நான் குறைவான முன்னனி கதாப்பாத்திரங்கள் வைத்து எழுதிய தொடர்கதை இதுதான். பொதுவா அதிக கதாப்பாத்திரங்களை வெச்சு எழுதுறது கஷ்டம்னு சொல்லுவாங்க.. ஆனா எனக்கு குறைவான கதாப்பத்திரங்களை வெச்சு எழுதுறதுதான் கஷ்டமாகவே இருந்தது.

இது எல்லாத்தையும் விட,இந்த நாவல் எனக்கு சிறப்பாக அமைஞ்சதுக்கு காரணம், “ஊக்கம்” தான்! சில பெர்சனல் காரணங்களினால் கதையை எழுத நான் ரொம்பவே சிரமப்பட்டப்போ எனக்கு பல பேரு “இடைவிடாத ஊக்கம்” கொடுத்தாங்க. குறிப்பிட்டு சொல்லனும்னா, என் அன்பு தோழிகள் மது ஹனி, வளர்மதி, எட்வீனா, வசுமதி என் செல்ல அத்தம்மா ரோஹினி ஸ்ரீ மற்றும் அன்பு சகோதரிகள் நித்து, வத்சு அக்கா..

ஒவ்வொருமுறையும் எனக்கு தனியாக மெசேஜ் அனுப்பி, கதையை நான் எழுதனும்,என்னால் முடியும்னு தொடர்ச்சியாக ஊக்கம் கொடுத்து, அது சரியான வெளிப்பாடு கொடுத்ததானு ஆரம்பித்தில் இருந்தே சொன்னார்கள்.

இதை தவிர்த்து கதைப்படித்து ஊக்கமளித்த தோழிகள் கீர்த்தனா, தேன்மொழி, நந்தினி, அர்னவ், மதுமதி, தேவி, சஜு (யாரையாவது மிஸ் பண்ணிருந்தா சாரி) அனைவருக்கும் நன்றி. ஒரு வரி வாசகம் என்றாலும் அது எனக்கு நிறையவே நம்பிக்கையை தந்தது.

பட் இதையெல்லாம் தாண்டி ஒரு ஆணிவேர்னா அது சில்சீதான்! சில்சீ அட்மின்ஸ் கு ரொம்ப கடன்பட்ட உணர்வு. “அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்” சொல்லுவாங்க.. இந்த வருஷம் எனக்கு ரொம்ப சவாலாக இருந்துச்சு. எழுதுறது எனக்கு சரிப்பட்டு வராதுனு கூட நினைச்சிருக்கேன். ஆனா, என்னுடைய ஒவ்வொரு ஈமெயிலுக்கும் பதில் கொடுத்து,அப்பப்போ சஜஸ்ஷன்ஸ் கொடுத்து தூக்கி விட்டாங்க.. அன்னியன் விக்ரம் சார் மாதிரி, திடீர்னு ஒரே ஆர்வமா எதையாச்சும் அனுப்புவேன்’ ஆரம்பிப்பேன், அன்போடு வரவேற்பு கொடுப்பாங்க.. அப்பறம் திடீர்னு காணாமல் போயிருவேன் வெயிட் பண்ணுவாங்க..

ஒரு விஷயம் முடிக்காமலே இன்னொனு ஆரம்பிக்கிறோமேனு எனக்கு தயக்கம் இருக்கும்.. ஆனா அவங்க அதை ஒரு தடவை கூட சுட்டிக்காட்டினதே இல்லை..இந்த தொடரே நான் “வீக்லி”அனுப்பவானு யோசிச்சப்போ அனுப்புங்க..கொஞ்சமா இருந்தாலும் பரவாயில்லைனு சொல்லி கூடவே இருந்தாங்க.. அதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.

“நட்புக்குள் இருக்கும் காதலையும்

காதலில் இருக்கும் நட்பையும்” இத்தொடரின் மூலம் சொல்லனும்னு ஆசைப்பட்டேன்..சொல்லி இருக்கேன்னு நம்புறேன். இந்த நிறைவு எல்லாருக்கும் நிறைவை தந்திருக்கும்னு நம்பறேன். ஒரு மாறுதல் இருக்கட்டுமேனு தான் “சில வருடங்களுக்கு பிறகு”னு காட்சிகள் எழுதல.

இந்த வருடம் ஒருவழியாக முடியுது 2018 எனக்கும் உங்க எல்லாருக்குமே அமர்க்களமாக இருக்கனும்னு வாழ்த்துக்களோடு டாட்டா சொல்லிறேன்.. நெக்ஸ்ட் வீக் (3 MUSKETEERS) வருவாங்க.. அவங்க யாரு?என்ன தொடர்னு சீக்கிரமே சொல்லுறேன்.. ஹாப்பி நியூ யெர்.. டாட்டா..

சுபம்!

Episode # 25

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.