(Reading time: 36 - 71 minutes)

“அடிப்பாவி..அப்பறம் எதுக்கு என்னை பார்த்ததுமே, என்னமோ நம்ம கல்யாணத்துல எக்கச்சக்க பிரச்சனைகள் இருக்கு மாதிரி சொன்ன நீ ?”

“ஹும்கும் ஏன் கேட்க மாட்டீங்க? என்னத்தான் அவங்க நமக்காக காத்திருந்தாலும், அவங்க பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசை இருக்காதா ? எனக்கு சீக்கிரம் ஒரு பாப்பாவுக்கு மம்மி ஆகணும்னு ஆசை இருக்காதா?”என்று கேட்டவள் தான் சொன்னதை நினைத்து தலையில் தட்டிக் கொண்டாள். “போச்சு.. இப்போ கண்டிப்பா வில்லங்கமா ஏதாச்சும் சொல்லுவானே!”

“ஓஹோ.. அப்போ முதல்ல சொன்ன காரணம் சும்மாத்தானா? பாப்பா வேணுமா என் செல்லத்துக்கு?”என்று கிறங்கிய குரலில் புகழ் கேட்க,

“அம்மா…இதோ வரேன்மா” என்று உரக்க சொல்லிவிட்டு,

“புகழ் அம்மாகூப்பிடுறாங்க..பாய்..”என்று ஆயிஷா ஃபோனை வைக்கும் நேரம்,

“ஹா ஹா வாலு.. வாய் மட்டும்தான் இவளுக்கு.”என்று அவன் வாய்விட்டு சிரிக்க, சுதாகரன் அந்த அறைக்குள் நுழைந்தார். சற்றுமுன் முகத்தில் படர்ந்த புன்னகையை மாற்றாமல் அவரைப் பார்த்தான் அவன்.

“வாங்க மாமா.. ஏன் இன்னும் தூங்காமல் இருக்கீங்க நீங்க?”

“என்ன வேணும் உனக்கு?”

“எனக்கென்ன வேணும்? எல்லாமே அத்தை செஞ்சு கொடுத்துட்டாங்களே.. இப்போத்தான் வயிறு நெம்ப சாப்பிட்டேன்”என்றான் அவன் இயல்பாக.

“ காமிடி பண்ணுறியா?”

“ச்ச..ச்ச..நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுறேன்.. “

“எதுக்கு இங்க வந்த நீ ? என்ன உன்  ப்ளான்?”

“ ஓ.. அதை கேட்குறீங்களா.. யாழீயோட கோபம் குறையுற வரைக்கும் இங்க இருக்கலாம்னு வந்தேன்.. அதுவும் இல்லாமல், தமிழுக்காக அவருடைய அம்மா அப்பாவை பார்த்துக்கவும் வந்தேன்..”

“நீ திரும்பி வர மாட்டனு தானே சொன்ன?”

“நீங்க கூடத்தான் தமிழ் யாழினியை கண்டிப்பா சேர்த்து வைப்பேன்னு சொன்னீங்க.. பட் பண்ணலயே!”

“சோ என்னை பழி வாங்க வந்துருக்கியாநீ?”

“இவ்வளவு நாள் ஆகியும் என் மேல உங்களுக்கு நம்பிக்கையோ நல்ல அபிப்ராயமோ வரலைல? பழி வாங்கனும்னு நினைச்சா, இங்க இருந்து போயிருக்கவே மாட்டேன். தமிழுக்கும் யாழினிக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடக்க ஏற்பாடு பண்ணதே நான்தான்.. நீங்க என்னை விலகி போக சொன்னப்போ, சட்டப்படி யாழினி தமிழொட மனைவிதான். அதை சாதகமா வெச்சுக்கிட்டு இங்கயே இருந்திருக்க தெரியாதா எனக்கு? இப்போகூட இதுதான் நடந்துச்சுனு யாழினிட்ட சொன்னா, அவ என்னை நம்ப மாட்டானு நினைக்கிறிங்களா?” புகழின் முகத்தில் ஒரு வித வெற்றி களிப்பு இருந்தது. அவன் நட்பின் மீது அவனுக்கிருந்த கர்வம் வெளிப்பட்டது.

“அதை நீ ஏன் பண்ணல ?அதுதான் என் கேள்வி!”

“நாமல்லாம் ஒரே குடும்பம்.. நீங்க ஏத்துக்கிட்டாலும் இல்லன்னாலும் அதுதான் உண்மை.. உங்க மனச தொட்டு சொல்லுங்க, நீங்க தமிழை மிஸ் பண்ணவெ இல்லைனு? அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வரனும், சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழனும்னு ஒரு ஆசை இல்லையா உங்களுக்கு?”

“..”

“ வேணாம் மாமா பழசெல்லாம் வெளில தெரிஞ்சா தேவை இல்லாத மனகசப்பு வரும். நான் எல்லாரும் ஒன்னு சேரனும்தான் ஆசைப்படுறேனே தவிர யாரும் யாருகிட்டயும் தலைகுனிஞ்சு நிக்கனும்னு ஆசைப்படல.. முடிஞ்சா உன் மனச மாத்திக்கிறது பத்தி தின்க் பண்ணுங்க.. என்மேலகொஞ்சமாச்சும் நம்பிக்கை வைங்க”என்றான் புகழ் தனிந்த குரலில். புகழ் இப்படி பேசுவான் என்று அவர் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. என்ன சொல்வது என்றே தெரியாமல் நின்றார் சுதாகரன்.

“நீங்க மிஸ்டர் சுதாகரன்.. நீங்க ஆசைப்பட்டது மட்டும்தான் எப்பவுமேநடக்கும் அப்படினு இல்லாமல், தமிழோட அப்பாவா யோசிச்சு பாருங்க. சின்ன வயசுல இருந்த தமிழ் பொத்தி பொத்தி வளர்த்த அப்பாவும் அவரோட பாசமும் எங்க போச்சு? இந்த வீராப்பு, வீண் கௌரவம் இதெல்லாம் எந்த விதத்துல உங்களுக்கு சந்தோஷத்தை தந்திச்சு?”

“..”

“கடைசியா யாரை ஹக் பண்ணீங்க? கடைசியா எப்போ வாய்விட்டு சிரிச்சீங்க? கடைசியா எப்போ குடும்பத்துக்காக ஷாப்பிங் பண்ணீங்க? கடைசியா எப்போ வாய்க்குள்ளேயே ஏதாச்சும் பாட்டை முணுமுணுத்து இருக்கீங்க? கண்ணாடியில போய் உங்களை பாருங்க மாமா.. உங்க முகத்துல வீராப்பு இருக்கு.. சந்தோஷம் இருக்கா? கண்ணுல ஜீவன் இருக்கா? நாளைக்கே தமிழுக்கு ஏதாவது ஆச்சுன்னா..”என்று புகழ் பேசும்போதே

“புகழ்!!” என்று அவனைத் தடுத்திருந்தார் சுதாகரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.