(Reading time: 36 - 71 minutes)

“அவரு சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன்” என்று மனோன்மணி கை கூப்பிட அவரை உடனே தடுத்தாள் யாழினி.

“ப்ளீஸ் அத்தை.. நீங்க மன்னிப்பு கேட்க வேணாம்..ஆனா மாமாவை மன்னிச்சிருங்க.. அவர்மேல கோபத்தை காட்டாதீங்க”

“அது என்னால முடியாது யாழினி..”

“அத்தை…”

“முடியவே முடியாது..”

“நான் ராசி இல்லாதவளா அத்தை?”

“யாழினி?”என்று அனைவருமே ஆட்சேபிக்க,

“ஆமா,முதல்ல அவரும் மாமாவும் பேசிக்காம இருந்தாங்க.. இப்போ நீங்க மாமாகிட்ட கோபமா இருக்கீங்க.. நம்ம குடும்பத்துல என்னால ஒத்துமையே வராதா?”என்று யாழினி பாவமாக கேட்க தோழியின் சாதூர்யத்தை மனதிற்குள்மெச்சினான் புகழ்.

“அசடு.. இப்படியெல்லாம் ஏன் பேசுற? உனக்காக நான் மாறமுயற்சி பண்ணுறேன். போதுமா?”.

“ம்ம்ம்.. தேங்க்ஸ் அத்தை..”

கடிகாரத்தை பார்த்தான் தமிழ்.

“அப்பா எப்போ வேணும்னாலும் முழிச்சிடுவாரு..யாழினி, மாமா, நாம கிளம்பலாம்”என்றான் தமிழ்.

“என்னடா கண்ணா சொல்லுற?” என்று மனோன்மணிமிரட்சியாக கேட்க,

“நான் வர மாட்டேன்”என்று அடம் பிடித்தாள் யாழினி. அவளது பாவனையில் சிரிப்பு வந்தாலும் அதை மறைத்துக் கொண்டான் தமிழ்.

“சொன்னா கேட்கனும்.. அடம்புடிக்க கூடாது..கிளம்பு நீ”என்றான் தமிழ். எல்லாரும் அவனையே கோரசாக முறைக்க,

“இது பாருங்க, மனசு மாறியது நாமத்தான்.. அப்பா இல்லை..அவரும் மாறினதும் கண்டிப்பா வரலாம்.. நான் சொன்னா சொன்னதுதான்.. யாழினியை அவரே மருமகளாக ஏத்துகிட்டாத்தான் நான் அவருடைய மகனாக வருவேன்..இதுல எந்த மாற்றமுமில்லை..புகழ் கூடவே இரு!”என்றுவிட்டு தன் தாயையும் சமாதானம் செய்துவிட்டு யாழினி,மோகனுடன் கிளம்பினான் தமிழ்.

காரில் அவனை முறைத்துகொண்டே அமர்ந்திருந்தாள் யாழினி. அருகில் மோகன் இருப்பதால் அவள் எதையும் பேசாமல் இருக்கிறாள் என்பதை தமிழும் உணராமல் இல்லை. அதற்காக மோகனுக்கு மானசீகமாக நன்றி நல்கினான் அவன்.

வீட்டை அடைந்துவுடன் கார் கதவை அறைந்து சாத்திவிட்டு தன் அறைக்கு ஓடினாள் யாழினி. நமட்டு சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்தான் தமிழ். அறைக் கதவையும் அவள் அறைந்து சாத்திட முயல கடைசி நொடியில் அறைக்குள் மின்னலென புகுந்தான் தமிழ். யாழினி கோபமாக கத்த முயல அவளை பின்னாலிருந்து இறுக அணைத்துக் கொண்டான் தமிழ். தன் மூச்சுக் காற்றினை அவள்மேல்படரவிட்டு தாடையை தோளோடு அழுத்தி அவன் நின்ற விதத்தில் விக்கித்து நின்றாள் யாழினி.

யாழினியை தமிழ் கட்டியணைப்பது புதிதல்ல.. எப்போதுமே அவன் அணைப்பில் காதல், பாதுகாப்பு உணர்வு அனைத்துமே கலந்திருக்கும். இன்றோ அவன் சற்று அதிகமாகவே இழைந்து அணைத்திருப்பது போல உணர்ந்தவளுக்கு பேச்சு நின்று போனது.அவன் முகத்தில் வெற்றிக் களிப்பு பொங்கியது.

“கோபமா சோடாபுட்டி?” என்று அவன் ராகம் பாட, அவள் “ம்ம்” என்றாள். தன் அணைப்பை இன்னும் இறுக்கியவன்,

“இப்பவும் கோபமா சோடாபுட்டி” என்று கேட்க, அவனது செய்கையில் நெளிந்து வெட்கப்பட்டாள்யாழினி.

“விடுங்க தமிழ்..”

“ம்ம்ஹ்ம்ம்.. விடுறதுக்கா உன்னை துரத்தி துரத்தி காதலிச்சு கட்டிக்கிட்டேன்..”

“என்னது நீங்க துரத்துனீங்களா? ஹலோ நான்தான் உங்கள துரத்தினேன்..”

“அப்படியா எனக்கு ஒன்னும் அப்படி ஞாபகமில்லையே” என்றபடி மீசையை அவள் கன்னத்தில் குறுகுறுப்பு மூட்ட,”ஐயோ.. நீங்க சரியே இல்லை.. விடுங்க”என்று அவனைக் கிள்ளித் தள்ளிவிட்டு ஓடினாள் யாழினி.கொஞ்ச நேரம் அவளை பிடிக்க முடியாதவன் போலவே தமிழ் அவள் பின்னே ஓடி, மீண்டும் அவளை சிறைப்பிடித்தான்..

“இப்போ சொல்லு நான்தானே உன்னை துரத்தி பிடிச்சேன்?” என்று அவன் கண்சிமிட்ட அவன் மார்பில் குத்தினாள் யாழினி.

“சரியான அறுந்தவாலுப்பா நீங்க..அத்தை எப்படித்தான் உங்களை வளர்த்தாங்களோ..”

“அதுவா, நான் வேலைக்கு போயிட்டு வந்ததும் என்னை கூண்டுக்குள்ள பூட்டி வெச்சுருவாங்க..அப்படித்தான் என்னை வளர்த்தாங்க”என்று சிரிக்காமல் அவன் சொன்ன விதத்தில் கற்பனை செய்து பார்த்தவளுக்கு சிரிப்பு பொங்கியது.

“ஆனாலும், அத்தை பெரிய தியாகி தெரியுமா?உங்கள மாதிரி வாலுப்பையனை வளர்த்துவிட்டுருக்காங்களே,.. அதுக்காகவே அவங்களுக்கு அவார்டே கொடுக்கலாம்” என்று யாழினி சொல்ல, தமிழ் மீண்டும் தீவிரமான பாவனையுடன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.