(Reading time: 36 - 71 minutes)

“இப்போ வருவத்தானேப்பா நம்ம வீட்டுக்கு? யாழினியை முறைப்படி கூட்டிட்டு வந்து உன் கையில ஒப்படைக்கிறேன்” என்றதும் சரியென தலையசைத்தான் தமிழ். அதன்பின் கலகலப்பான பேச்சுக்கள் சிரிப்பென நேரம் கடந்திட, யாழினி முகம் லேசாய் வாடியிருந்தது. அனைவரும் கிளம்பும்வேளையில், “இருங்கப்பா வரேன்”என்று விட்டு யாழினியின் அறைக்கு சென்றான் தமிழ்.

யா” யாழினி என்று அவள் பெயரை உரைக்கும் முன் அவனை இறுக்கமாய் அணைத்து கேவினாள் யாழினி.

“ஷ்ஷ்..என்னடா இது?”

“ ஐ மிஸ் யூப்பா..”

“ம்ம்.. நானும்தான்..”’

“நல்ல நாள் எல்லாம் பாத்துதான் கல்யாணம் பண்ணிக்கனுமா?”

“இப்பவே தாலிய கட்டி கூட்டிட்டு போகலாம்ல?”என்று அவள் கேவ, அவள் காதலில் வேகத்தை உணர்ந்தான் தமிழ்.மனமெல்லாம் சந்தோஷம் பரவியது.

“லூசுபொண்ணு..மிஞ்சி மிஞ்சி போனாஒரு வாரம்.. புகழ்கூடவும் மாமா கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணு.. ஓடிரும்டா கண்ணு..”

“நைட் நான் எப்படி தூங்குவேன்பா?”

“என் ஷர்ட் இருக்குல?அப்பறமென்ன? நைட்டு நான் பாடி தூங்க வைக்கிறேன்”

“அப்போ நீங்கரெடியா இருக்கீங்க? கொஞ்சம்கூடசோகமில்லையா?”

அவளை இரக்கமே இல்லாதவன் போல முறைத்தான் தமிழ்.

“ஆமா நான் அப்படித்தான்.. நீ டீயூப்லைட்டா இருந்தால் நான் ஒன்னும் பண்ண முடியாது போடீ”என்று அவன் முறுக்கி கொள்ள,

“நான் டியூப்லைட்னா நீங்க பல்பு.. போங்க போங்க.. நான் என் நண்பன்கிட்ட நிறைய பேசனும்” என்று அவனை அனுப்பி வைத்தாள் யாழினி.

“இவளை சமாளிக்க நான் படுற பாடு இருக்கே ..கடவுளே!” என்று பெருமூச்சுடன் கிளம்பினான் தமிழ்.

தினம் என்னை முத்தமிட்டு எழுப்பும் சூரியனை

இன்று நான் முத்தமிட்டு எழுப்புகிறேன்,

இதுவரை கடந்த நாட்கள்,

இன்றே இனியநாளோ?

இமைகளுக்குள் பட்டாம்பூச்சிகள்,

கூட்டமிட்டு என்னத்தான் பேசுகின்றனவோ?

எப்போதும் துடிக்கும் இதயம் இன்று,

தன் இருப்பை இன்றே சத்தமிட்டு காட்டுகின்றதோ?

என் இதழோரம் உதிக்கும் புன்னகை,

அதன் ஆதியும் அந்தமும் நீதானோ?

குளிர்நீரில் சிலிர்க்கும் தேகத்தில்,

பூக்கின்ற பூக்களின் காவலன் நீயோ?

கண்ணாடியின்முன் நிற்கின்றேன்

என் பிம்பத்தில் தெரிபவள் உன் பாதியோ?

என் ஒப்பனைகள் எல்லாமே உன்

ஒப்பற்ற பார்வை தாக்குதலில் மிளிராதோ?

என் தேகம் சுற்றும் புடவை நம்

திருமண வைபவத்தை எடுத்துரைக்காதோ?

எதிரில் நிற்கும் தந்தையும் தோழனும்

என் மையலை உணர்ந்திடுவார்களோ?

பிறந்தவீட்டை பிரியும் துயரை,

உன்னக வீடு துடைத்திடுமோ?

செவியை குளிர்விக்கும் மேளதாளங்கள்

என் இதயத்துடிப்பின் ஓசையை மிஞ்சிடுமோ?

இதுவரை நீ பார்த்து ரசித்தவள் தானே

விழிகளால் அளவெடுப்பது முறையோ?

இனி அவ்விழிகளே என் உணர்வுகள்

அவிழ்ந்திடும் சிறையோ?

உன்னுடன் சங்கமிக்கத் தவிக்கும்

விழிகளையும் விரல்களையும் மிரட்டுவதும் யாரோ?

இதோ நிமிர்கிறேன்,

கொஞ்சம் கண்ணீர் நிறைய காதல்!

எதை முதலில் உணர்கின்றாய்?

சபை அச்சமின்றி என் நெற்றிச்சுட்டியை அழுத்தம்

உன் முத்தம், என்னுள் யுத்தமாகிடுமோ?

வெட்கி நான் தலைகுனிய,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.