(Reading time: 29 - 58 minutes)

“உன் மேரேஜ்க்கு என்னால வர முடியாது முரளி. ஹர்ஷாவும் வர முடியாதுன்னு தான் நினைக்கிறேன். பி இன் டச்” என்றவள் அவர்களை வழியனுப்பி வைத்தாள்.

மாதங்கள் உருண்டோடின. ஹரிணி எங்கேயும் வேலைக்குச் செல்லாமல் அந்த வீட்டிலேயே சிறை இருந்தாள்.

அவள் எப்போது சாப்பிடுகிறாள், எப்போது உறங்குகிறாள் என்று யாருக்குமே தெரியவில்லை.அனைவரிடமும் பேசும் போது தான் நன்றாக இருப்பதாக கூறி சமாளித்து விடுவாள்.

அப்போது தான் தாரா மறுபடியும் ஹரிணியைத் தேடி வந்தாள். அவளது மகளுக்கு இரண்டாம் ஆண்டு பிறந்த நாள் விழா.

“ஒரு ஹோம்ல அங்குள்ள குழந்தைகளோடு கொண்டாடலாம்னு இருக்கோம்” ஹரிணியை அழைத்தாள்.

ஹோம் என்றதுமே ஹரிணி நெகிழ்ந்தாள். தானும் இப்படி ஒரு ஹோமில் தான் இருந்திருப்போம் அல்லவா என்று எண்ணியவள் வருகிறேன் என்று சம்மதம் தெரிவித்தாள்.

அந்த ஹோமில் தான் எத்தனை குழந்தைகள். அம்மா, அப்பா, உறவுகள், குடும்பம் என்றால் என்ன என்று தெரியாமல் போனாலும் மகிழ்ச்சியோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நன்றியோடு கொண்டாடினார்கள்.

ஏனோ ஒரு வித அமைதி பிறந்தது ஹரிணியின் மனதில்.

அடிக்கடி அங்கு சென்று தன்னால் முடிந்த பணிவிடைகளை செய்தாள். ஆனால் மறந்தும் கூட தான் மருத்துவர் என்று அங்கு கூறவில்லை. அங்கு தான் மலர்விழி அறிமுகம் ஆனாள்.

“சின்ன வயசில் இருந்தே அம்மா அப்பா இங்கே கூட்டிட்டு வருவாங்க. அப்புறம் நானே அடிக்கடி இங்க வர ஆரம்பிச்சேன். அப்புறம் இங்கேயே வாலண்டியரா ஆகிட்டேன். இங்க குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறேன். அதுக்காகவே டீச்சர் டிரைனிங் படிச்சேன்” மலர்விழி சொல்லவும் அவளை வியந்து பார்த்திருந்தாள் ஹரிணி.

நல்ல வசதியான குடும்பத்துப் பெண். சுகபோகங்களை அனுபவிக்கும் ஆசைகள் இல்லாமல் நாள் முழுவதும் இக்குழந்தைகளின் சேவையில் நிறைவைக் காண்கிறாளே. சிலாகித்தது அவள் மனம்.

அப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அடுத்தடுத்ததாக மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் நிச்சயமாக  அந்நிகழ்வுகளில் எல்லாம் ஒரு பற்றற்ற நிலையிலேயே பங்கேற்றாள்.

ணேஷ் ராம் இதய அறுவை சிகிச்சையில் பயிற்சி சர்ஜனாக ஹர்ஷாவின் கீழ் சேர்ந்திருந்தான்.

“பாலா மாமா இஸ் நோ மோர்” பூர்வி கணேஷின் தோள்களில் சாய்ந்து அழுததில் அந்த பாலா  மாமா யார் என்று தெரியாவிடினும் ஹர்ஷாவிற்கும்  ஹனிக்கும் ஏதோ நெருங்கிய சொந்தம் என்று அனுமானித்துக் கொண்டான்.

மேற்கொண்டு அவர்கள் அதைப் பற்றி விவாதம் செய்யவில்லை.

ஆனால் எப்போதும் ஒரு புன்னகையோடு ஒரு துடிப்போடு வலம் வரும் ஹர்ஷாவில் ஜீவன் இல்லாமல் ஒரு வித இயந்திரத் தன்மை குடிகொண்டதை கணேஷ் நன்றாகவே உணர்ந்தான்.

ஹர்ஷா எப்போதும் சற்று கடுமையாக தான் இருப்பான் என்ற போதிலும் அது நோயாளிகளின் நலன் பேணுவதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதில் தான் இருக்கும்.

ஆனால் இப்போது எடுத்ததற்கெல்லாம் சிடுசிடுத்தான்.

“டாக்டர் ஹெச்எஸ்ஆருக்கு என்னாச்சு. அவர் சர்ஜரில ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆனா முன்ன மாதிரி இல்லையே. ஹி ஹாஸ் பிகம் சோ அரகன்ட்” என்று வெளிப்படையாகவே அவன் உடன் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் முணுமுணுப்பதை கணேஷ் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

ஹர்ஷாவின் இப்போதைய நெருக்கடியான சூழ்நிலை அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன் ஹரிணிக்கும் கூட அவன் அதை தெரிவிக்கவில்லை. .

அவனது பெரியப்பா, தற்போதைய ராஜா, அரசியலில் ஈடுபட ஆர்வம் கொண்டு மிகுந்த பொருளை அதில் தொலைத்து விட்டதை தொடர்ந்து அவர்களது தொழில்கள் பலவும் சாய்ந்து விட்டிருந்தது. தொழில் ரீதியாக ஸ்வாதியின் தந்தையிடம் பல கோடி ரூபாய் கடனாக பெற்று அதைத் திருப்பி தர முடியாத நிலையில் இருவருக்கும் வார்த்தை தடித்து பெரிய விரிசல் ஏற்பட்டிருந்தது.

“பாபாஸா (அப்பா)  பூபாஸாவை (அத்தை கணவர்) கடுமையா பேசிட்டாங்க. அதுவும் ஜீஜாஸா  (அக்காவின் கணவர்) எல்லாம் வந்திருந்த போது எல்லோர் முன்னாடியும் வாக்குவாதம் ஆகிருச்சு. பூபாஸா தலை குனிச்சு போய்ட்டார்” ஸ்வாதிகா சொல்ல அதைக் கேட்ட ஹர்ஷா மிகவும் கலங்கிப் போனான்.

என்ன இருந்தாலும் அவனது பெரியப்பா ஆயிற்றே. அவன் தானே அவருக்கும் மகனாவான். இப்போதைக்கு அங்கே செல்ல முடியாதபடி அவனது ஒப்பந்தம் கட்டி வைத்திருந்தது.

“என் பாபா என்னை வேறு எங்கேனும் கல்யாணம் செய்ய போர்ஸ் செய்வாங்களோன்னு நினச்சேன். ஆனா அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொல்லிட்டார். இருந்தாலும் பூபாஸா பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுக்காம மேரேஜ்க்கு சம்மதிக்க மாட்டார். எனக்கே மனசாகல. என்ன செய்றது ஷாஸா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.