(Reading time: 29 - 58 minutes)

“ஊரில பிரச்சனையா இருக்கே ஹரி”

“நான் போய் மட்டும் என்ன செய்வேன். எனக்கு எதுவும் புரியாது. பெரியப்பா இன்னும் ஏதோ கட்சி கூட்டங்களுக்கு எல்லாம் போறாராம். ஜீஜாஸா ரெண்டு பேரும் பாலிடிக்ஸ்ல இறங்கி இருக்காங்களாம். இப்போதைக்கு பிஸ்னஸ் மட்டுமே பாதிச்சிருக்கு. மற்றபடி எல்லாத்தையும் என் தாதாஸா (தாத்தா) பாதுகாப்பு செய்துட்டு  தான் போயிருக்கார். அம்மா கிட்ட பேசினேன். என்ன ரொம்ப தாம் தூம் செலவுகள் எல்லாம் செய்ய மாட்டாங்க அண்ட் எங்க மேரேஜ் தான் இப்போதைக்கு நடக்காது. அது பார்த்துக்கலாம்டா”

“ஸ்வாதி என்ன சொல்றா”

“அவளோட விதுக்காவை நல்லா பார்த்துக்கணுமாம். நேரத்திற்கு சாப்பிட வைக்கணுமாம்  தூங்க வைக்கணுமாம்” சொல்லிவிட்டு மெல்ல சிரித்தான்.

ஸ்வாதிகாவின் கள்ளம் கபடமற்ற அன்பில் நிறைவாக புன்னகைத்தாள் ஹரிணி.

இவர்களின் நாட்கள் இப்படியே செல்ல, ஒரு வாரயிறுதில் ஹர்ஷா மட்டும் ஒரு கலந்தாய்வுக்காக நியூயார்க் சென்றிருந்தான்.

ஹோட்டல் மாரியட்டில் நடந்த கான்பரன்சில் கலந்து கொண்டு அங்கே லாபியில் சுற்றிக் கொண்டிருந்தான்.

“ஹலோ பிரின்ஸ்” பரிச்சயமான அக்குரலில் திரும்பியவன் ஆர்சியை அங்கு கண்டு மிகவும் மகிழ்ந்து போனான்.

“இட்ஸ் எ சர்ப்ரைஸ்” ஹர்ஷா அவனோடு கைகுலுக்க பலமாக தானும் குலுக்கினான்.

நல விசாரிப்புகளுக்குப் பின் தான் அங்கே ஒரு பிஸ்னஸ் மீட்டுக்காக வந்ததை சொன்னான் ஆர்சி.

அவன் மனதோரத்தில் ஹரியின் ஹனி எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள ஆவல் பிறந்தது.  இருக்குமே அவளது திருமணம் முடிந்து ஓராண்டுக்கு மேல் இருக்குமே. நேரடியாக கேட்பது நாகரீகம் இல்லை எனக் கருதியவன் அந்த எண்ணத்தைப் பின்னுக்கு தள்ளினான்.

ஆர்சி பிஸ்னஸ் மீட் என்று சொன்னதும் தான் ஹர்ஷாவிற்கு நியாபகம் வந்தது. ஆர்சியிடம் தனது குடும்பத் தொழில் அதில் சிக்கல் எல்லாவற்றையும் கூறினான். இதில் ஏதேனும் செய்ய முடியுமா எனக் கேட்டான்.

“பிரின்ஸ், இது தானே என்னோட வேலையே. நீங்க கவலைய விடுங்க. இதயங்களை மட்டும் துடிக்க செய்யுங்க. நான் மற்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்.  நானே பர்சனலாக போய் பார்க்கிறேன்” என்றவனிடம் ஸ்வாதிகாவை தொடர்பு கொள்ளுமாறு தகவல்களை அளித்தான்.

“வாங்க பிரின்ஸ் லஞ்ச் சேர்ந்தே சாப்பிடலாம், உங்களுக்கு ஒன்றும் வேற ப்ளான்ஸ் இல்லையே” என்று கேட்டவன் அவனை அழைத்துக் கொண்டு டைம்ஸ் ஸ்கொயர் அருகில் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.

“இங்க சாப்பாடு பிரமாதமாக இருக்கும் பிரின்ஸ். யு வில் லவ் இட்” என்றவன் அவனே அங்கிருந்த சிறந்த உணவு வகைகளை ஆர்டர் செய்தான்.  

அதே சமயம் பூர்வியின் வீட்டில் கணேஷும் பூர்வியும் சமைக்கிறேன் என்று சண்டையடித்துக் கொண்டிருந்தனர்

அவர்கள் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையடித்துக் கொண்டும் ஹரிணியிடம் பஞ்சாயத்து வைத்துக் கொண்டும் இருந்தாலும் அன்போடும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பாசத்தோடும் இருந்தனர்.

“கரம் மசாலா, மூளையில் மசாலாவே இல்ல, உன்னை வச்சு எப்படி தான் அண்ணா சாமாளிக்கிறாரோ. இப்போ மசாலாவை எதுக்கு போட்ட” பூர்வி கரண்டியாலே அவனை மிரட்டினாள்.

“பூரி மசாலா, எனக்கும் சமைக்க தெரியும். என் அம்மாக்கு எல்லாம் நான் ஹெல்ப் செய்வேன். என்னவோ நீ தான் சமையல் ராணி மாதிரி சீன் போடாதே” பதிலுக்கு அவன் வாக்குவாதம் செய்தான்.

“இதோ சுமித்ராம்மாக்கு போனை போட்டு கேட்கறேன். உனக்கெல்லாம் ஹாட் வாட்டர் வைக்க கூட நான் தான் சொல்லிக் கொடுத்தேன். நியாபகம் இருக்கட்டும்”

“அது இந்த கெட்டில் புது மாடலா இருந்தது” சமாளிக்க முனைந்தான்.

இவர்கள் சண்டையை ரசித்தவாறே ஹரிணி போனை எடுத்து  ஹர்ஷாவின் நம்பரை அழுத்த பிசி என்று வந்தது. அதே சமயம் ஹர்ஷாவும் அவளுக்குத் தான் முயற்சித்துக் கொண்டிருந்தான்.

பூர்வியும் கணேஷும் மேஜை மீது உணவு வகைகளை எல்லாம் பரப்பி வைத்து அமர ஹரிணி  மீண்டும் முயற்சிக்க பிசி என்றே வந்தது. அப்போது  பூர்வியின் மொபைல் பாடியது.

“சொல்லுங்கண்ணா”

“யாரு ஹரியா அவனுக்கு தானே நான் ட்ரை செய்து கொண்டிருக்கேன்” என்றவாறே   பூர்வியிடம் மொபைலுக்காக கையை நீட்டினாள்.

“உன் அக்கா அங்க இருக்காளா. போன் போட்டா பிஸின்னு வருது” என்று அவன்.

பூர்வி ஹரிணியிடம் போனைக் கொடுக்க இருவரும் மாறி மாறி கால் செய்தது குறித்து சிறிது நேரம் விவாதம் செய்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.