(Reading time: 29 - 58 minutes)

என்ன செய்வான் அவன். அவனுக்கு என்ன தெரியும் சொத்து விவகாரமும் தொழில்கள் பற்றியும்.

ஒரு புறம் பாலாவின் மரணம் மறுபுறம் இப்படி ஒரு குடும்பச் சிக்கல் எல்லாம் சேர்த்து அவனைப் பெரிதும் புரட்டிப் போட்டிருந்தது.

ன்று எப்போதும் போல ஹர்ஷாவிடம் பேசலாம் என்று ஹரிணி அவனது பெர்சனல் மொபைலுக்கு போன் செய்தாள்.

இப்போதெல்லாம் ஹர்ஷாவுக்கு கணேஷ் அறுவை சிகிச்சைகளில் அசிஸ்ட் செய்வதால் அவனது போனை எடுத்துப் பேசும் வாய்ப்பு இல்லாமல் போனது.

ஆனால் அன்று சர்ஜரி முடிந்து ஹர்ஷா போனை மறந்து வைத்து விட்டு அவசரமாக ஒரு மீட்டிங் சென்றிருந்தான்.

ஹனி என்று திரையில் மின்ன கணேஷ் ராம் எடுத்துவிட்டிருந்தான். அவனது குரலை அடையாளம் கண்டுகொண்ட ஹரிணி ‘ராம்’ என்று சற்று உற்சாகமாக கூறவும் மிகவும் மகிழ்ந்து போனான் கணேஷ் ராம்.

“ஹர்ஷா இல்லையா ராம்”

“என்ன ஹரி இப்போ ஹர்ஷா ஆகிட்டார்” சற்றே கேலியோடு கூறினான். அன்று அவள் ஹரி ஹரி என்றதைக் கேட்டவன் தானே.

“மத்தவங்ககிட்ட நான் ஹரின்னு குறிப்பிடுவதில்லை. அன்னிக்கு ஒரு எமர்ஜன்சி அதான்” அவள் மெல்லியக் குரலில் சொன்னாள்.

“ஒஹ் நோ ப்ராப்ளம் ஹனி. என் முன்னாடி சொல்லலாம். நான் ஒன்னும் மத்தவங்க இல்லையே” அவன் கூற சற்றே சினம் கொண்டாள் ஹரிணி.

“என் பேர் தெரியாதா ராம்”

“ஹனின்னு தெரியும் பேரை நீயும் சொல்லலை. பாஸும் சொல்லலை. அந்த பூரி மசாலாவும் சொல்லலை”

“ஐ ஆம் ஹரிணி. இனி என்னை ஹனின்னு கூப்பிட வேண்டாமே” குரலில் ஒரு கட்டளை இருந்ததை கணேஷ் உணர்ந்தான்.

“என் மனசில உன்னை ஹனின்னே ரெஜிஸ்டர் செய்துட்டேனே. ஏன் தெரியுமா. யூ ஆர் சோ ஸ்வீட். அதுவும் என்னை ராம் ராம்ன்னு சொல்லும் போது” என்றவன் சிறிது நேரம் அமைதியானான்.

“ராம் ஆர் யூ தேர்” ஹரிணி அந்த மௌனத்தைக் கலைத்தாள்.

“எஸ் மோன் செர்ரி” என்றான் அவன் உற்சாகமாக.

“என்ன செர்ரி” இப்போது ஹரிணியின் குரலில் என்ன பையன் இவன் என்ற தொனி தான் நிறைந்திருந்தது.

“மோன் செர்ரி, நீயே கண்டுபிடிச்சுக்கோ. அப்புறம் பாஸ் கிட்டேயும் நீயே சொல்லிடு. வர வர அவர்கிட்ட எதுவும் பேசவே பயமாயிருக்கு”

“என்ன ராம் ஏன் என்னாச்சு. ஹர்ஷா நல்லா தானே இருக்கான்”

“அது யாருக்குத் தெரியும்” என்றவன் ஹர்ஷாவின் சிடுசிடுப்பு, அவனது கடுமை, அனைவரின்  அதிருப்தி என அனைத்தையும் அவளிடம் சொன்னான்.

“மோன் செர்ரி, உன்னால தான் பாஸ் இப்படி இருக்காரா. நீ அன்னிக்கு போன் செய்து அவர் இந்தியா போய் வந்த பின் தான் இப்படி இருக்கார். நீ தான் ரீசனா எங்க பாஸ் இப்படி இருக்க” அவளை சாடுவது போல அவன் கூறவும் திடுக்கிட்டாள் ஹரிணி.

பூர்வியிடம் போன்  செய்து கேட்ட போது அவளும் அதைத் தான் சொன்னாள்.

“அவ என்கிட்டே எதுவுமே கேட்டதில்ல பூர்வி. பாலாவை காப்பாத்துன்னு முதல் முறையா கேட்டா. என்னால அதை செய்ய முடியாம போச்சு. அவளுக்கு மெடிசன் தான் எல்லாம்.  எல்லாத்தையும் விட்டுட்டு தனியா யாரையும் கிட்ட சேர்க்காம தூண்டில் புழு போல துடிச்சிட்டு இருக்கா. நான் இப்போ அவள் கூட இருக்க முடியாம எதுவும் செய்ய முடியாம கை கட்டி நிற்கிறேன்” ஹர்ஷா இவ்வாறு சொன்னதாக பூர்வி சொல்லவும் ஏன் இதை தன்னிடம் முதலிலேயே சொல்லவில்லை எனக் கடிந்து கொண்டாள்.

மேலும் அவனது வீட்டிலும் பிரச்சனை என்று ஸ்வாதி சொன்னதாக பூர்வி சொல்ல ஸ்வாதிக்கும் போன் செய்து விசாரித்தாள்.

“உங்களை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்ன்னு ஷாஸா சொன்னார் விதுக்கா” ஸ்வாதி சொல்ல ஹரிணிக்கு இருப்பு கொள்ளவில்லை.

“நீ ஒரு பெரிய கார்டியாக் சர்ஜனா வரணும் ஹரி” அவள் கண்ட கனவை நனவாக்கிக் கொண்டிருப்பவன். இப்படி நிலை தடுமாறி போவதா. என்ன தான் அவன் சர்ஜரி போது எந்த விதத்திலும் டிஸ்டர்ப் ஆவதில்லை என்றாலும் ஒரு சிறந்த மருத்துவன் நோயைக் குணப்படுத்துபவன் மட்டும் அல்லவே. நோயாளியைக் குணப்படுத்துபவன் அல்லவா.. ஹர்ஷா இப்படி இயந்திரமாக போனதுக்கு தான் காரணமா. அவளால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பாலாகிருஷ்ணின் படத்தின் முன் வந்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.