(Reading time: 29 - 58 minutes)

“ஹரி என்கிட்டே கூட சொல்லாம உள்ளுக்குள் வேதனையை சுமந்துட்டு இருக்கான் பாலா. அவன் எப்படி இருப்பான் தெரியுமா. கலகலப்பாய் ஒரு தெனாவட்டோடு கேர் ப்ரீயா. இன்னிக்கு என்னால அவன் சிரிப்பது கூட இல்லையாம். என்னால ஹரியை இப்படி விட முடியாது. இல்ல நம்மால ஹரியை இப்படி விட முடியாது இல்லையா பாலா. என் லைப்ல நான்  ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்களின் சொந்தக்காரர் நீங்க. ஆனால் நீங்க கடந்த காலமாகவே இருக்கேன்னு அங்கேயே தங்கிடீங்க. அங்கேயே நானும் உங்க கூடவே இருக்கலாம் தான். ஆனா ஹரியோட நிகழ்காலமும் எதிர்காலமும் பாழாகிடும் போல இருக்கே. எண்ணற்ற பயிற்சி மருத்துவர்களின் எதிர்காலமும், ஸ்வாதியின் வாழ்வும் அவனை சார்ந்து இருக்கே’ விழிகளில் நீருடன் மேஜையில் இருந்த ஸ்டேதேஸ்கோப்பை எடுத்தாள்.

“உங்களை காப்பாற்றாத இந்த ஸ்டெத்தேஸ்கோப் வேண்டாம்னு பூட்டி வச்சுட்டேன். எவ்வளவு சுயநலக்காரி நான். இது எத்தனையோ பாலாக்களை காப்பாற்ற பயன்படலாம்ன்னு நான் யோசிக்கலையே” ஒரு முடிவுடன் ஹர்ஷாவிற்கு மறுபடியும் போன் செய்தாள். இம்முறை அவனே எடுத்தான்.

“ஹரி, நான் அங்க வரேன். நான் உன் கூட வொர்க் பண்ணனும். அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா” அவள் இன்னும் ஏதேதோ கேட்க நினைத்தாள்.

“ஹனி” ஏதோ பல நாள் நா வறண்டு போயிருந்தவனுக்கு பருக அமிர்தம் கிடைத்தாற் போல ஒலித்தது அவன் குரல்.

டுத்த இருபதாவது நாள் அவன் அறுவை சிகிச்சை செய்ய அந்த அரங்கில் அனஸ்தீசியா பக்கம் சீனியர் கார்டியாக் அனஸ்தடிஸ்ட்டின் மேற்பார்வையில் அவள் அனஸ்தீசியா கொடுத்தாள்.

“மே ஐ ஸ்டார்ட்” என்று சம்பிரதாயமாக அவன் கேட்கவில்லை. ஸ்க்ரப் உடைகளில்  மாஸ்க் அணிந்திருந்த அவன் முகம் அவள் புறம் சற்றே திரும்ப இவள் இமை மூடி திறக்கவும் மளமளவென அவன் சர்ஜரி செய்தான்.

அவளுக்கு இதய அறுவை சிகிச்சையில் குறைந்த பயிற்சியே இருந்தது. இருப்பினும் அவனது ஒவ்வொரு அசைவையும் உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டாள்.

எப்போதும் அந்த அறுவை அரங்கம் சலசலப்பாகவே இருக்கும். ஆனால் அன்று பூர்வி தவழ விட்டிருந்த இசையோடு மானிடரின் பீப் சத்தம் சங்கமித்து ஒலிக்க, ஹர்ஷாவின் அடுத்த மூவிற்கு கணேஷும் அழாகாய் ஈடுகொடுக்க, ஹரிணி அனைத்தையும் சீராக ஒருங்கிணைக்க துரிதமாகவும் துல்லியமாகவும் ஆபேரஷன் நடைபெற்றது.

‘போர் சாம்பர்ஸ்’ சஹாப்தம் ஆரம்பமானது. (நமது இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. அதனை ஆங்கிலத்தில் ‘சாம்பர்ஸ் ஆப் தி ஹார்ட்’ என்பர்) 

ஹரிணி அங்கே வந்ததும் ஹர்ஷாவிடம் உடனடியாக தெரிந்த இந்த மாற்றத்தைக் கண்டு வியந்தான் கணேஷ் ராம்.

ஒவ்வொரு நாளும் சர்ஜரிக்கு செல்வதே மிகவும் பிடித்தமாக இருந்தது. பூர்வியின் முயற்சியால் நோயாளிகளின் மனோநிலைகளும் மிக சீராக இருந்து வந்தன.

டாக்டர் ஹெச் எஸ் ஆர் டீம் கை வைத்தாலே சக்சஸ் என்று சொல்லும் அளவிற்கு அவர்களது கூட்டு முயற்சி நற்பெயர் பெற்றது.

ரம் மசாலா நீ ஒரு படிப்பஸ்ன்னு கேள்வி பட்டேன். பேசறதுக்கே காசு கேப்பியாம். இப்போ எப்படி லவுட் ஸ்பீக்கரா மாறிட்ட” ஒரு மாலைப் பொழுதில் அனைவரும் சற்று ஓய்வாக இருந்த வேளையில் கேட்டாள் பூர்வி.

“மோன் செர்ரி என்னை ஸ்வீட்டா ராம்ன்னு கூப்பிட்டதும் தான்” அவன் ஹரிணியைப் பார்த்து கண்ணடித்து சொல்ல, ஹர்ஷா அவனை உறுத்து ஒரு பார்வை பார்க்க ஹரிணியின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

“ஹஹ்ஹஹா உன் ஜம்பம் எல்லாம் அண்ணா முன்னாடி புஸ்ஸுன்னு போய்டும்” பூர்வி சிரிக்க ஹரிணியும் மெல்ல புன்னகைத்தாள்.

ஹரிணி பூர்வியின் வீட்டிலேயே அவளோடு தங்கியிருந்தாள். இருவரும் நிறைய பேசினார்கள். பூர்வி அவளது பெற்றோரின் இழப்பு, அதன் பின் ஏற்பட்ட மன  அழுத்தம், அதிலிருந்து தான் மீண்டு வந்தது என அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள்.

ஓய்வாக இருந்த நேரங்களில் வாழ்க்கையின் தத்துவம் குறித்த புத்தகங்களைப் படித்தாள் ஹரிணி. மனிதர்கள், அவர்கள் வாழ்க்கைப் பயணங்கள் இவற்றை எல்லாம் கவனித்தாள்.

இன்னொரு ஜீவனின் வலியை, வேதனையை, பிணியை நீக்கி அவர்கள் முகத்தில் நிம்மதியையும் சிரிப்பையும் வரவழைக்கும் வரம் தனக்குக் கிடைத்திருப்பது எப்படிபட்ட ஒரு பேறு என பரிபூரணமாக உணர்ந்தாள்.

ஹர்ஷா பூர்வி கணேஷ் ராம் மூவரும் ஹரிணியின் ஓர் அசைவிற்கே கட்டுப்பட்டனர். மூன்று வெவ்வேறு புள்ளிகளாக இருப்பவர்களை இணைக்கும் கோடாக செயல்பட்டாள்.  ப்ராஜ்க்ட்டுகள், ஜர்னல் கட்டுரைகள் என அனைத்தையும் ஒன்றாகவே செய்தனர்.

“எப்போதும் எல்லா ரிசர்ச் பேப்பரிலும் உங்க நால்வர் பேரும் சேர்ந்து தான் இருக்குமா” யாரோ கேட்டதற்கு “நாங்க போர் சாம்பர்ஸ் ஆப் தி ஹார்ட் போல. எங்களோட துறைகள் வேறு வேறாக இருந்தாலும் ஒரே துடிப்பில் செயல்படுவோம்” என்று பூர்வி பதிலளிக்க போர் சாம்பர்ஸ் என்றே இவர்களை மருத்துவ உலகம் செல்லமாக அழைத்தது.

ஹரிணி அங்கே இரண்டு வருட பெல்லோஷிப் சேர்ந்திருந்ததால் தனது ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீடித்திருந்தான் ஹர்ஷா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.