(Reading time: 15 - 29 minutes)
Kaarigai
Kaarigai

வாத்தியார் சொன்னாரு. இந்த பொண்ணோட அக்கா இங்க தான் படிச்சுது. அது இப்போ பட்டணத்துல இருக்குனு. அவரு இந்த பக்கத்துல இருக்கற அந்த ஆஷ்ரமத்தோட பேரும் விலாசமும் தந்தாரு. அவிங்க இங்க அனுப்பி விட்டாங்க" அவருக்கு இந்த விலாசம் எப்படி கிடைத்தது என புரிந்தது பவித்ராவுக்கு.

அவளை அணைத்திருந்த உமாவை பார்த்தாள். தன்னுடைய கடந்த காலம் மின்னலாக அவள் மனதில் வந்து சென்றது. இவளின் பெற்றோர் தனக்கு செய்த பாவத்துக்கு அவர்களுக்கு கிடைத்தது சரியான தண்டனை தான் ஆனால் அவளால் சந்தோசப்பட முடியவில்லை. அதே போல இந்த சிறுபெண்ணை பார்க்கும் போது அவளையே பார்ப்பது போல இருந்தது. இதே போல அவள் கலங்கி திக்கு தெரியாமல் இரண்டும் கெட்டான் வயதில் நின்றது மனதில் வந்தது. அவளை ஒதுக்கி தள்ளவும் முடியவில்லை. மெல்ல அவளின் கையை உமாவின் முதுகில் ஆதரவாக வைத்தாள்.

"எப்படியோ தாயி. இந்த பொண்ணை உன் கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டேன். இனி நான் நிம்மதியா ஊருக்கு போயிடுவேன்" சொன்னவருக்கு நன்றி உரைத்தவள் தன் கையில் இருந்த சில நூறு ரூபாய் நோட்டுக்களை அவர் மறுத்தாலும் அவர் கையில் திணித்து அனுப்பினாள்.

இனி என்ன செய்வது? அவர்கள் ஹாஸ்டலில் இப்போது இருக்கும் அறையில்  இரண்டு நாட்களுக்கு மேல் இவளை தங்க வைக்க முடியாது. ஆஸ்ரமத்தில் தங்க வைத்தாலும் சரியாக வருமா? ஏதாவது செய்வோம் என்று எண்ணியவள் உமாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.

எப்போதும் வருவதை விட இன்று ரொம்பவே தாமதம் ஆகிவிட்டது அலுவலகம் வர. உமாவுக்கு காலை உணவை கொடுத்து அவளை சிறிது நேரம் உறங்க சொல்லிவிட்டு வந்தாள். அவள் அழுததை பார்க்க பாவமாக இருந்தது. எப்படியாவது பள்ளியில் சேர்த்து விடும்படி சொல்லி கெஞ்சியதை அவளால் காண சகிக்கவில்லை.

இங்கிருக்கும் பள்ளியில் சேர்க்கவேண்டும். அவளுக்கு தங்கும் இடம்? அது தான் இப்போது இருக்கும் பெரிய பிரச்சனை. தன் இருக்கையில் அமர்ந்த பின்னும் இதை எல்லாம் யோசித்து குழம்பி கொண்டிருந்தாள் பவித்ரா. அவள் இத்தனை நேரம் தாமதமாக வந்ததும் இல்லாமல் தன்னிடம் அதற்க்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் அவளின் இருக்கையில் அமர்ந்து எங்கோ கனவு கண்டு கொண்டிருப்பதை கண்ட சத்யாவுக்கு கோபம் தலைக்கேறியது.

அவளின் அருகே இருந்த தொலைபேசி அழைக்கவும் யோசனையில் இருந்து வெளியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.