(Reading time: 15 - 29 minutes)
Kaarigai
Kaarigai

இருக்கும் நிலையில் மீண்டும் அவன் முன் சென்று நிற்க இயலாது… வேறு வழி இல்லை எப்படியேனும் இன்று தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சீக்கிரம் முடித்து கொடுத்து விட்டு கிளம்பவேண்டியது தான்” என்று முடிவு செய்தவள் அதன் பின் லேப்டாப்பை விட்டு தலையை உயர்த்தவில்லை இரண்டொரு முறை தன் அறையின் கண்ணாடி வழியே வெளியே பார்த்தவன் அதன் பின் வேலையில் மூழ்கி போனான்.

எப்படியோ மதிய உணவை தியாகம் செய்து சரியாக ஆறு மணிக்கு அவள் வேலை எல்லாம் முடித்து விட்டாள். இடை விடாமல் வேலை செய்ததில் தலை விண்ணென்று தெறித்தது. பசி வேறு ஒரு புறம், உமா என்ன செய்து கொண்டிருப்பாளோ என்ற கவலை மறுபுறம். வேக வேகமாக லேப்டாப்பை அணைத்து உள்ளே எடுத்து வைத்தவள் தன் வண்டியின் சாவியை எடுத்து கொண்டு அவள் கேபினில் இருந்து வெளியே வரவும் தொலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.

"கம் டு மை ரூம் " மீண்டும் சத்யாவின் குரலை கேட்டவள் தன் பேகை அங்கு வைத்து விட்டு அவன் அறைக்குள் நுழைந்தாள். அவள் உள்ளே நுழையும் போது அவன் யாருடனோ காலில் இருந்தான். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு பின் காலை அணைத்தவன் அவள் புறம் திரும்பினான். இந்த ஐந்து நிமிடத்தில் அவள் அங்கிருந்த சுவர் கடிகாரத்தை ஒரு இருபது முறை பார்த்திருப்பாள். அதை அவன் கவனிக்க தவறவில்லை.

" சிட் பவித்ரா" - சத்யா

"இட்ஸ் ஓகே சார். எதுக்கு வர சொன்னிங்க" -பவித்ரா

"வேளச்சேரில இருக்கற நம்முடைய இன்னொரு பிரான்ச்க்கு போகணும். நாளைக்கு ஹெட் ஆபீஸ்ல இருந்து ஆடிட்டிங் வருவாங்க. இப்போ தான் இன்போர்மஷன் கிடைச்சுது. அங்க இருக்கற பைல்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு வந்துட்டா நாளைக்கு இன்ஸ்பெக்ஷன் ஈஸியா முடிஞ்சுடும் " -சத்யா

"அதுக்கு நான் என்ன பண்ணனும் " நேரம் செல்ல செல்ல அவளுக்கு இங்கே சீக்கிரம் செல்ல வேண்டுமே என்று தவிப்பாக இருந்தது.

"அதான் சொன்னேனே வேளச்சேரி பிரான்ச்க்கு போகணும்னு காது கேக்கலையா " அவளின் பார்வை அடிக்கடி கடிகாரத்தில் படிவதை கண்டவனுக்கு எரிச்சல் மிக, அவளிடம் கத்தினான் சத்யா.

“எனக்கு காது கேட்டுது சார். நீங்க போக போறீங்க அதுக்கு நான் என்ன பண்ணனும்னு தான் சார் கேட்டேன் " -பவித்ரா

"நீங்க என் கூட வேளச்சேரி பிரான்ச்க்கு வரீங்க" ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.