“அந்த போனை எடுத்துக் கொடு அம்மு!” என்றாள்!
“மஞ்சு... டென்ஷன் ஆகாதே... இது உன் நல்லதுக்கு தான்...”
“எனக்கு ஒரு டென்ஷனும் கிடையாது... நீ போனைக் கொடு...”
உண்மையாகவே மஞ்சுவின் குரலில் கோபமோ, பதற்றமோ தெரியவில்லை! யோசனையுடன் போனை எடுத்துக் கொடுத்தாள் அமுதா!
போன் கையில் வந்ததும் படபட என எண்களை தட்டினாள் மஞ்சு!
போனை காதில் வைத்த மஞ்சு, அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“எங்கே இருக்கீங்க மனோஜ்?” என்றாள்!
அவள் குரலில் இப்போதும் எந்த பதற்றமும் இல்லை! கோபமும் இல்லை... வேகம் மட்டுமே இருந்தது!!!
“pbs.... நான்...”
“நீங்க திக்கித் திணற வேண்டாம்... அம்மு சொன்னா... நீங்க கிளம்பி எவ்வளவு நேரம் ஆச்சு???”
“அஞ்சு மணி நேரம் போல இருக்கும் pbs... நீ ரொம்ப டையர்டா தூங்கிட்டு இருந்த...”
“மனோஜ், அடுத்த டர்ன்ல காரை திருப்பிட்டு வாங்க...”
“pbs??”
“நான் சொன்னது கேட்டுச்சு தானே??? காரை திருப்பிட்டு சீக்கிரம் திரும்ப விர்ஜினியா வந்து சேருங்க...”