“pbs... நான் ஃபைவ் ஹவர்ஸா டிரைவ் செய்துட்டு இருக்கேன்...”
“அதெல்லாம் எனக்கு கவலை இல்லை... நீங்க சிகாகோவே போயிருந்தா கூட பரவாயில்லை... திரும்பி வரீங்க...”
“நான்...” என்று இழுத்தான் மனோஜ்.
“நான் சொன்னது காதுல விழுந்துச்சுல??? நீங்க வரலைனா, நானே எப்படி சிகாகோ வரதுன்னு பார்க்க வேண்டி இருக்கும்...”
“இல்லை இல்லை நானே வரேன்... அமுதா கூட இருந்தா உனக்கு ஈஸியா இருக்கும்னு நினைச்சேன் pbs...”
“நீங்க நினைச்சது தப்பில்லை... சரியா தான் யோசிச்சிருக்கீங்க... என் கிட்ட கேட்காதது தான் தப்பு... எனக்கு உங்கப் பக்கத்துல இருக்கனும் மனோஜ்... நீங்க எங்கேன்னு தெரியாம ஒரு அரை மணி நேரத்துலேயே என் பிபி எவ்வளவு எகிறிடுச்சு தெரியுமா? நீங்க என் பக்கத்துல இருக்குறது எனக்கு ரொம்ப முக்கியம் மனோஜ்!”
“சாரி டா...”
“சீக்கிரம் வாங்க...”
“pbs...”
“ஒழுங்கு மரியாதையா வரப் போறீங்களா, இல்லையா???” மஞ்சு குரலை உயர்த்தி கேட்க,
“சரி, வரேன், வரேன்...” என உடனே ஏற்றுக் கொண்டான் மனோஜ்...
“பார்த்து கேர்ஃபுல்லா காரை ஓட்டிட்டு வாங்க...”