அழைப்பை துண்டித்துப் போனை கீழே வைத்தாள் மஞ்சு!
அமுதா எதிரே அமர்ந்து மஞ்சுவையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் பெரிய புன்னகை ஒன்று இருந்தது!!!
“உனக்கு என்ன இளிப்பு???” என்றாள் மஞ்சு அரை கோபத்துடன்!
“ஒருக் காலத்துல மனோஜை ஆஃபீஸ்ல பார்த்து பயந்து நடுங்கின நீ, இப்போ மனோஜை மிரட்டுறதைப் பார்த்து நான் சிரிக்காம என்ன செய்றது! மனைவினாலே கெத்து தான்!!! என்ன மஞ்சு???”
மஞ்சு சிரிக்கவில்லை!
“நீ மனோஜோட சேர்ந்து எனக்கு தெரியாம ப்ளான் போட்டு இருக்க???”
“ஹ்க்கும்... நீ பெரிய உலக மஹா அதிசயம் நான் உனக்கு தெரியாம ப்ளான் போடுறேன்!!! NPK மஞ்சு!”
மஞ்சுவின் இதழோரம் மெல்லிய புன்னகை உதயமானது!
“பாவம் தான் மனோஜ்... உனக்காக என்ன எல்லாம் செய்றார்... இப்போ எக்ஸ்ட்ராவா பத்து மணி நேர டிரைவ் வேற...!!! அவரை என்ன மிரட்டு மிரட்டுற நீ!!!”
“சும்மா அதையே சொல்லாதே அம்மு!! நீயும் வேணா சரா கிட்ட ட்ரை செய்துப் பாரு!!!”
“அவர் போனை கட் செய்து வச்சுட்டு வேலையைப் பார்ப்பார்... ஹுஹும்... போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டு வேலையைப் பார்ப்பார்... என் மேல அவருக்கு அவ்வளவு பயம்...” என்று சொல்லி அமுதா சிரிக்க...