En mel aasai illaiya - Tamil thodarkathai

En mel aasai illaiya is a Romance / Family genre story penned by Navya.

This is her first serial story in Chillzee.

  

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 31 - நவ்யா

    En mel aasai illaiya

    “சரி, அப்படியே இருக்கட்டும், அதுக்கு என்ன?”

    “எதுக்கு பொய் சொன்ன?

    “வேலையா இருந்தேன். அதைப் சொல்ல முடியாம ஆஃபிஸ்ன்னு சொல்லி இருப்பேன்.”

    “நீ என் கேர்ள் ஃப்ரென்ட் ஜானி! என் கிட்ட சொல்ல முடியாதா?”

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 32 - நவ்யா

    En mel aasai illaiya

    இதுக்காகவா ப்ரேக்-அப்?! சந்திரிகா மனசுக்குள் அலுத்துக் கொண்டாள்.

    இந்த மாதிரி காரணத்திற்காக எல்லாம் ப்ரேக்-அப் ஆக வேண்டும் என்றால் அவளும் அவள் கணவரும் ஆயிரம் என்ன லட்சக்கணக்கான தடவைகள் ப்ரேக்-அப் செய்திருக்க வேண்டும்!

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 33 - நவ்யா

    En mel aasai illaiya

    ஜனனியாக ஏதாவது சொல்கிறாளா பார்ப்போம் என்ற முடிவுடன், உமேஷ் சொன்னதைப் பற்றி வாயே திறக்காமல், வெறும் “ஜனனி,” என்றாள் சந்திரிகா.

    “ஆன்ட்டி, உமேஷ் வந்துட்டானான்னு கேட்குறதுக்காக கூப்பிட்டேன்.” ஜனனி தன் குரலை சாதாரணமாக காட்டிக் கொள்ள முயல்வது சந்திரிகாவிற்கும் புரிந்தது!

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 34 - நவ்யா

    En mel aasai illaiya

    உமேஷ் சோர்வுடன் வீட்டிற்கு வந்தான். ஜனனியுடன் பேசாமல், டெக்ஸ்ட் செய்யாமல் ஒரே ஒரு நாளை தள்ளுவதற்கு கடினமாக இருந்தது. நொடிக்கு ஒருத் தடவை ஜனனி மெசேஜ் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

    ஸ்பாம் கால்கள் வந்தால் கூட ஜனனியாக இருக்குமோ என்று தான் அவனுக்குத்

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 35 - நவ்யா

    En mel aasai illaiya

    “அப்போ அதை அவர் கிட்டேயே கேட்க வேண்டியது தானே?”

    “அங்கே தான் உம்மிஷ் பாய் ப்ராப்ளம்! காருண்யா அவங்களால முடிஞ்ச அளவு விபரம் எல்லாம் கலக்ட் செய்துட்டு கடைசில சந்தேகமும், குழப்பமுமா தர்மாவை கேள்வி கேட்டாங்க! தர்மா அதுக்கு கோபிச்சுக்கிட்டார். அந்த கோபம் தான் அவங்களோட இப்போதைய பிரிவுக்கு

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 36 - நவ்யா

    En mel aasai illaiya

    ஜனனி அன்று நன்றாக தூங்கினாள். உமேஷுடன் மீண்டும் பேசியது மனதை தெளிவாக்கி இருந்தது. அதுவே காருண்யா தர்மா உறவை சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையையும் அவளுக்கு கொடுத்திருந்தது.

    மறுநாள் காலையிலேயே சுறுசுறுப்பாக கிளம்பி, முதல் வேலையாக தர்மாவை சந்திக்க சென்றாள் ஜனனி.

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 37 - நவ்யா

    En mel aasai illaiya

    தர்மா விழித்த விழியைப் பார்த்து ஜனனி பயந்துப் போகவில்லை அதற்கு பதிலாக மனசுக்குள் சந்தோஷப்பட்டாள்.

    இப்போ தான் தர்மா சரியா யோசிக்குறார். குட் ஜாப் ஜனனி! தனக்கு தானே வர்ச்சுவலாக சிலாகித்தும் கொண்டாள்.

    இந்த குதூகலத்தை காண்பித்து கொள்ளாமல் நின்றதோடு, வாயையும் மூடிக் கொண்டு நின்றாள்.

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 38 - நவ்யா

    En mel aasai illaiya

    “ஜனனி, உங்களை இன்னைக்கு எதிர்பார்க்கலை!”

    காருண்யா சாதாரணமாக பேசி சிரிக்க முயன்றாள். ஆனால், அவளின் அந்த முயற்சி படுத் தோல்வி அடைந்தது. 

    ஜனனிக்கு காருண்யாவைப் பார்க்க பாவமாக கூட இருந்தது.

    “என்ன காருண்யா நீங்க இப்படி இருக்கீங்க? தூங்குனீங்களா இல்லையா?”

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 39 - நவ்யா

    En mel aasai illaiya

    “உமேஷ் லவ் செய்றான் சுகுமார். ஜனனி அவன் முன்னாடி வந்தாளோ இல்லையோ, இவனுக்கு எல்லாம் வொர்க் அவுட் ஆகுது!”

    மீண்டும் அங்கிருந்தவர்கள் புது நியூஸிற்கும் வாழ்த்துக்கள் சொல்ல, உமேஷ் சங்கோஜத்துடன் நின்றான்.

    “என் ஹஸ்பன்ட் டீம்ல இருந்துட்டு லவ் செய்ய உங்களுக்கு டைம் கிடைச்சிருக்கது

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 40 - நவ்யா

    En mel aasai illaiya

    “விஸ்வநாதன் சார்! உங்களை நான் எக்ஸ்பெக்ட் செய்யவே இல்லை. உள்ளே வாங்க சார்!” என சொல்லி விஸ்வநாதனை மனமார வரவேற்றாள் ஜனனி. உண்மையில் அவளுக்குள் ஏமாற்றம் தோன்றி அலைகழித்தது!

    உமேஷின் வருகை ஜனனியை உற்சாகப் படுத்தி இருந்தது. அவனுடன் தனிமையில் சில மணி நேரங்கள் செலவிட விரும்பி இருந்தாள்.

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 41 - நவ்யா

    En mel aasai illaiya

    ஜனனி கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்பவளாக அமைதியாக இருந்தாள். அவளின் கோபத்தை உணர்ந்துக் கொள்ளாத உமேஷ் பேசிக் கொண்டே போனான்.

    "இன்னைக்கு இருக்க உலகம் அதிகமா போட்டி, பொறாமை இருக்க உலகம். இங்கே தொட்டதுக்கு எல்லாம் ரோஷம் வந்தா ஜெயிக்க முடியாது ஜானி. கெட்டியான தோல் இருந்து, எதுவா

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 42 - நவ்யா

    En mel aasai illaiya

    காருண்யா வந்ததும் தர்மா முதல் ஆளாக எழுந்து நின்றான். ஜனனியே அதற்குப் பிறகு தான் எழுந்திருக்க வேண்டுமா என்று யோசிக்கவே செய்தாள்.

    அந்த யோசனைக்கு அவசியம் ஏற்படாது காருண்யா ஜனனி பக்கத்தில் அமர்ந்தாள்.

    "தேங்க்ஸ் ஜனனி," என காருண்யா ஜனனியிடம் சொல்ல, தர்மா காருண்யாவைப் பார்த்துக் கொண்டே

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 43 - நவ்யா

    En mel aasai illaiya

    "ஜனனி, நீ இங்கே என்ன செய்ற?" விஸ்வநாதன் உருமுவதுப் போல ஜனனியை தன் வீட்டில் பார்த்ததும் கேட்டார்.

    ஜனனிக்கு அவரைச் சந்திக்க விருப்பம் இருக்கவில்லை. இப்போது எதிரே வந்து விட்டார், பேசாமல் போகவா முடியும்?

    முடிந்த அளவு அமைதியான குரலில், "காருண்யா மேடம் வரச் சொன்னாங்க சார்,"

    ...
  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 44 - நவ்யா

    En mel aasai illaiya

    "ஜனனி!"

    உமேஷின் குரலில் தெள்ளத் தெளிவாக ஆச்சர்யம் கலந்திருந்தது!

    "உமேஷ்!"

    அவன் அவளின் ஃபோன் அழைப்பை ஏற்றதை நம்ப இயலாமல் ஆச்சர்யத்துடன் அவன் பெயரைச் சொன்னாள் ஜனனி.

  • தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 45 - நவ்யா

    En mel aasai illaiya

    உமேஷ் அப்போதும் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சில வினாடிகள் ஜனனியை பார்த்துக் கொண்டிருந்தான்.

    ஜனனிக்கு தான் பொறுமை பறந்துப் போனது.

    "சொல்லுடா, உனக்கு என் மேல கோபம் இல்லையா?"

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.