(Reading time: 21 - 41 minutes)

சிறுகதை - அம்மாவின் கடிதம் - ரம்யா

வீட்டில எங்கும் அமௌதி சூழ ந்திருந்தது.ஆங்காங்கே முனகல் சத்தமின்றி வேறேதும கேட்கவில்லை. காற்றில் எங்கும ரோஜா வாசம்,இடிகொலின்வாசம்நிறைந்திருந்தது.சுவர் கடிகாரம் நிறுத்தப்பட்டிருந்தது.சுவாமி அறை மூடப்பட்டிருந்தது.நடு ஹாலில் ஒற்றை விளக்கு எரிந்துக்கொண்டிருக்க அதன் ஒளியில் ஜீவ ஒளி இழந்த ஒரு முகம்…நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தது.அவள் அப்படி உறங்கி வெகு காலமாயிற்று போலும்.அவள் காலடியில் கதறும் கணவன் என்ற குழந்தையின் மனமும் விசும்பலும் அவளுக்கு கேட்கவில்லை. உலகில் ஆயிரம் பிரிவுகள்.ஒவ்வொன்றும் ஒரு வலி.ஆனால் முதுமை காலத்தில் தனிமையில் கைக்கோர்த்து நாட்கள் நகர்த்தும் தம்பதிகளில் ஒருவரின் பிரிவு மிகப்பெரிய வலி.அதிலும் தாயாய் இருந்து கணவனை கவனித்த மனைவியை இழக்கும் இப்பெரியவரின் வலி உயிர்வலி.கனவா நிஜமா என்று புரியாமல் யாரிடம் கொட்டுவது புரியாமல் இனி இவள் இல்லை என்ற ஒற்றை உண்மை மட்டும் உயிர்சுட கண்ணீர் விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார் இராஜசேகர்.

ஊரே திரண்டு நின்றிருந்தது.

‘சுமங்கலியா போயிட்டா புண்யவதி’,’கிடக்கல போகல பூ பறிக்கிறது போல கடவுள் பறிச்சிட்டு போயிட்டார்.இதெல்லாம் கொடுப்பினை தான்’

‘அக்கம் பக்கம் மனுஷங்கள தன் ஜனமா பாசம் காட்டினா காமாட்சி..அதான் இப்படி ஒரு மரணம்.நமக்கு தான் இழப்பு’

‘அவரை குழந்தையா பார்த்துகிட்டா என்ன செய்யப்போறாரோ’

‘இராஜாவா இரண்டு புள்ள,சீமாட்டியா ஒரு பொண்ணு,பேரன் பேத்தின்னு ஒரு ஆல்மரமா தான் இருந்தாங்க.ஊரே அவங்க சிரிச்ச முகம் பார்த்து தான் விடியும்..ப்ப்ச்ச் காலன் யாரை விட்டான்’

‘உயிர்விடும் நேரம் பாவம் அவ மனசு பொண்ணு புள்ளைய தேடியிருக்கும்’

‘வெளிநாட்டிலிருந்து அப்படி எல்லாம் வரமுடியுமா.என்ன பண்ண மோகம் யாரௌவிட்டது.’

‘நேத்து சாயங்காலம் கூட இந்த குட்டி பசங்களோட விளையாடிண்டு இருந்தா..என்னடி இது இப்படி கும்மாளம் எழுபது வயசுக்காரியாட்டுமா இருக்கன்னு கேட்டதுக்கு,நாளைக்கு என்னவோ இப்ப இருக்கேன் சந்தோஷமா கழிக்கறேன்னா அப்பவே அவளுக்கு என்னவோ தெரிஞ்சிருக்கு’

‘ஒண்ணுமே இல்லையாமே.விடியற்காலம் வாசல் கோலம் போட எழுந்தாளாம்.சுவாமி அறை திறந துவிட்டுட்டு இப்படி நாற்காலியில உட்கார்ந்திருக்கா.அவர் எழுந்துவந்து பார்த்தபோது அவரௌ பார்த்து சிரிச்சாளாம் என்னவோ மாதிரி இருக்காளேன்னு கிட்டபோயி தொட்டு பார்த்திருக்கார்.அவர் கையை அணைச்சிகிட்டு போறேன் ன்னு தலையாட்டினாளாம்.அப்படியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.