Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Pin It

காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசு

சென்னை மாநகரில் அந்த திருமண மண்டபம் களை கட்டியிருந்தது. மண்டபம் இருக்கும் பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. விலை உயர்ந்த வாகனங்கள் வரிசையாக வந்து நின்றன. அதிலிருந்து இறங்கிய மனிதர்களும் பகட்டாக இருந்தனர். அவர்கள் வாகனங்களை விட்டு மண்டபத்திற்கு செல்லும் வழியிலேயே கேமிராக்களின் வெளிச்சம் அவர்கள் மீது படர்ந்தது. இது ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல என்று அவர்கள் அவற்றை அலட்சியப்படுத்திய வண்ணம் நடந்தனர்.

திரைப்படங்களில் நாம் பார்க்கும் எல்லோருமே கிட்டத்தட்ட இப்போது இங்கே வந்து கொண்டிருக்கின்றனர்.

மண்டபத்தின் வாசலில் ரவிவர்மன் - கயல்விழி திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும்  வரவேற்றது பூக்கள் அலங்காரம்.

மண்டபத்தின் வாயிலில் பன்னீர் தெளிக்கும் இயந்திரம் குளுமையான பன்னீரை தெளித்துக் கொண்டிருக்க, அதன் குளுமையைத் தாண்டி வந்தவர்களை சந்தனம், குங்குமம், கல்கண்டு மற்றும் ரோஜா மலர்கள் கொடுத்து இனிய முகத்துடன் வரவேற்றனர் மணமக்களின் உறவினர்கள்.

அவர்களில் பலருக்கு திரைப்படத்தில் மட்டுமே காண நேர்ந்தவர்களை நேரில் கண்டுவிட்ட மகிழ்ச்சி. முதன்மையாக நின்று வரவேற்றது மணமகனின் பெற்றோர். அவர்கள் மனம் நிறைந்திருந்ததால் முகமும் மலர்ந்திருந்தது. அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

மகன் தங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டான் என்ற பெருமிதம் அவர்களிடம் இருந்தது. அவர்களை கிண்டலாக விமர்சித்த பலரும் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் அல்லவா மகன் அவர்களை அமர வைத்திருக்கிறான்.

அவன் அவ்வாறு செய்யவில்லை என்றாலும் அவர்கள் வருத்தப்பட்டிருக்கப் போவதில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் மகனது மகிழ்ச்சிதான் என்றுமே  அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. அதை உணர்ந்ததாலோ என்னவோ  அவன் அவர்களின் உயர்வையே தனது மகிழ்ச்சியாக்கிக் கொண்டான்.

வந்திருந்த திரைப்பட பிரபலங்கள் மணமக்களை வாழ்த்துவதற்கு மேடைக்குச் சென்றனர். அங்கே இன்முகத்தோடு நின்றிருந்தான் ரவிவர்மன். அருகே நின்றிருந்த கயல்விழி கலவையான உணர்வுகளோடு நின்றிருந்தாள். கழுத்தில் தாலி ஏறியிருந்ததையே அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. இன்று காலையில்தான் அவர்கள் குலதெய்வக் கோயிலில் ஊரார் முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்திருந்தது.

கிராமத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்தவளுக்கு இந்த ஒளி வெள்ளம் சூழ்ந்த நிலை மிரட்சியை உண்டாக்கியிருந்தது. அருகில் நின்றிருந்த ரவிவர்மன் அவள் கரத்தினைப் பற்றியிருந்தான். அதன்

About the Author

RaSu

RaSu's Popular stories in Chillzee KiMo

  • Nee thaan en santhoshamNee thaan en santhosham
  • Ennai edho seithuvittaaiEnnai edho seithuvittaai
  • Mounam etharkuMounam etharku
  • Nee illaatha vazhvu verumaiyadiNee illaatha vazhvu verumaiyadi
  • Rani MaharaniRani Maharani
  • Sinthai mayanguthadi unnaleSinthai mayanguthadi unnale
  • Tholainthu ponathu en ithayamadiTholainthu ponathu en ithayamadi
  • Yaaraval yaar avalo?Yaaraval yaar avalo?

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுAdharvJo 2020-02-14 16:17
wow that was cute and lovely story rasu ma'am 👏👏👏👏 as always liked your screen play (y) it is good to speak out n stay away from unwanted thoughts/confusions. Ravi oda parents avara support panura is really superb👌 and ravi avanga trust kaptruvadhu :cool: vino was cute add on to the story😍😍

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுராசு 2020-02-17 22:14
தொடர்ந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் நன்றி அதர்வ்.
Reply | Reply with quote | Quote
# காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுVinoudayan 2020-02-14 11:05
Super story sis :clap: azhagana characters (y)
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுராசு 2020-02-17 22:12
மிகவும் நன்றி வினோ.
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுThenmozhi 2020-02-14 08:32
short and cute romantic story Rasu (y) Cool.

happy valentine's day to you
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுரவை 2020-02-14 08:28
அன்புள்ள ராசு! தங்கள் சிறுகதையை முதன் முறையாக படித்து ரசித்து மகிழ்ந்தேன். எல்லா கேரக்டர்களையும் நல்லவர்களாகவே படைத்திருப்பது, மிகச் சிறப்பு! தங்கள் நல்ல மனதை காட்டுகிறது! வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுராசு 2020-02-17 22:09
தங்கள் கருத்துப் பதிவிடலைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி சார். தங்களது படைப்புகளைக் காணும்போது எழுதுவதற்கான உத்வேகம் கிடைக்கிறது. நன்றி சார்.
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுராசு 2020-02-17 22:10
மிகவும் நன்றி தேன்மொழி.
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுmadhumathi9 2020-02-14 06:33
:clap: arumaiyaana kathai mam (y) neega eppothum ezhuthum kathai pola arumai. :thnkx: 4 this story. :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - கடமைக்கு ஒரு கல்யாணம் - ராசுராசு 2020-02-17 20:57
மிக்க நன்றி மதுமதி.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top