(Reading time: 36 - 71 minutes)

“மினிக்குட்டி” என்று அவன் பளிச்சென புன்னகைக்க நொடியும் தாமதிக்காமல் அவனை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் யாமினி. அவன் முகமெங்கும் முத்தமிட்டவள்,

“தேங்க்ஸ் அமுதன்.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச்.. நான் ரொம்ப லக்கி” என்று நெகிழ்ந்து அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள். மனம் நிறைந்திருந்தது யாழமுதனுக்கு! ஒரு பெண்ணின் மனதை வெல்வது அவ்வளவு சுலபமா? அன்பை மட்டுமே ஆயுதமாய் பயன்படுத்தி எதையும் வென்றிட முடியுமா? காலையில் அவள் முகத்தில் தெரிந்த வாட்டம் இப்போது தொலைந்தே போனதே!

யாமினியின் முகத்தை கைகளில் ஏந்தி ஆழ்ந்து நோக்கினான் அவன்! உண்மைத்தான்! என்னவள் மலரைப்போல மென்மையானவள். இவளை காப்பதும் காதலிப்பதும் என் பொறுப்பு! என்று தனக்குள் சொல்லி கொண்டவன் அவளை காதலுடன் அணைத்துக்கொண்டான். காதலில் இணைந்த இரு உள்ளங்களும், தங்களது அன்பெனும் தேடலில் தொலைந்து கலந்து நித்திரையில் ஆழ்ந்தனர். யாழமுதன்- யாமினி இருவரும் கண்ணுறங்கிய மறுநொடியே அன்பெனும் உணர்வு அவர்களிடமிருந்து வெளிவந்தது. தனது உலகத்தின் விதிப்படி, அது தன்னுடைய முழு ஆக்ரமிப்பை இனி இவர்களின் மீது பயன்படுத்த முடியாதுதான். எனினும், இன்று தன்னால் இணைக்கப்பட்ட இந்த ஜோடி எப்போதும் பிரியாது இணைந்திருக்க வேண்டும் என்று வாழ்த்தி ஆசிர்வதித்து விட்டு போனது அன்பு!

தே நேரம் தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் ஸ்வாரகா! மாலையில் வீட்டை விட்டு வெளியேறிய கணவன் இன்னமும் வீடு வந்து சேரவில்லை. அவனுக்கு ஃபோன் போடலாம் என்று நினைத்தவள் கடைசி நொடியில், “ நான் ஏன் அவன்கிட்ட பேசனும்? அவனோட அத்தை பெண்ணே அவனை பார்த்துப்பாள்” என்று விசும்பலுடன் கூறிக் கொண்டாள்.

ராகவனின் கார், சத்தம் கேட்டவுடன், விழிகளை இறுக மூடி படுத்துக் கொண்டாள் அவள். அவனிடம் மேற்கொண்டு பேசவும் வாதிடவும் அவளுக்கு சக்தியில்லை. பொதுவாகவே அதிகமாக கோபம் வந்து, அதை முழுமையாய் வெளிப்படுத்தவில்லை என்றால் அவளுக்கு அழுகை வந்துவிடும். அவன் முன் நின்று அழுவதா? என்று சுயகௌரவம் ஒருபுறம் எட்டிப் பார்க்க, உறங்குவது போல நடிக்க ஆரம்பித்தாள் ஸ்வாரகா.

அழுத்தமான காலடிகளுடன் அங்கு வந்தான் ராகவன். சில நொடிகள், ஸ்வாரகாவின் முன் நின்று அவளையே இமைக்காமல் பார்த்தான். மீண்டும் அன்று நடந்தவை எல்லாம் நினைவிலாடவும், ஆற்றாமையுடன் அவனும் உறங்க சென்றுவிட்டான். ஒருபுறம் அவள் உறங்கிவிட்டது போல நடிக்க, இன்னொரு புறம் உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தான் ராகவன். பூமியின் அன்றைய நாள் முடிவதற்கு இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருக்க முதலில் உறங்கி விட்டிருந்தான் ராகவன்.

அவன் மனதில் உறைந்திருந்த பொறாமையெனும் உணர்வு வெளிவந்திருந்தது. ஆனால் அது  முழுமைப்பெறவில்லை! காரணம், தனது மறுபாதி சக்தி ஸ்வாரகாவிடம் அல்லவா இருக்கிறது?  அவள் உறங்கினால்தான் அதனால் இங்கிருந்து விடுபட முடியும்!

அவளோ உறங்காமல் கட்டிலில் இருந்து எழுந்து கொண்டு ராகவனையே கண்ணீருடன் முறைத்தாள்.

“ என் மேல சந்தேகமா ராகவா உனக்கு ? என் மனசை பத்தி உனக்கு எந்த கவலையும் இல்லையா? கொஞ்சம் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் தூங்குறியே! ” என்று மீண்டும் மீண்டும் அதையே கேட்டவளுக்கு ஏதாவது செய்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

ஸ்வாரகா உறங்காமல் போனதே பொறாமையின் முதல் தோல்வி. இப்போது அவள் தன்னுயிருக்கு பாதகமாய் எதுவும் செய்தால், அது பொறாமைக்கு பெரிய பங்கத்தை அல்லவா விளைவிக்கும்?

ஓர் உணர்வு என்ற ரீதியில், பொறாமையினால் ஸ்வாரகாவின் சிந்தனையை கட்டுபடுத்த முடிந்ததே தவிர செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பொறாமையின் ஆட்சி அவள் மனதில் இருக்க, அந்த மனம் ஏற்படுத்தும் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு மூளை தான் செயல்களை உருவாக்கும். மூளையின் கட்டுப்பாடு தன்னிடம் இல்லாததால் தவித்து போனது பொறாமை எனும் உணர்வு.

“ இது இருமல் மருந்து ஜிலேபி.. இருமலுக்கு மட்டும்தான் குடிக்கனும்.. டேஸ்ட் நல்லா இருக்குனு அடிக்கடி குடிக்க கூடாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு .. சோ இனிமே நீ இதை அதிகம் குடிக்க கூடாது” என்று என்றோ ராகவன் சொன்னதை எண்ணிப் பார்த்தாள் ஸ்வாரகா. அவள் கையில் அதே மருந்து பாட்டில் இப்போது இருந்தது.

“ நான் வேணாம்ல உனக்கு ? உன் அத்தை பொண்ணை கட்டிக்கோ. உன் ஜிலேபி போறேன் போடா”என்று அவள் உளறும்போதே அன்பு அங்கு வந்திருந்தது. முழுசக்தி பெற்றிடாத பொறாமை, அன்பிடம் கெஞ்சியது.

“ அன்பே! வென்றது நீதான்! அதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு எவ்விதத்திலாவது உதவிடு! இந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திட்டால், நாம் நமது உலகுக்கு திரும்ப முடியாது!” என்று மன்றாடியது பொறாமை.

“ பொறாமையே, கவலையைக் கலைவாய்! என்னால் உனக்கு உதவிட முடியும்! மேலும், இதில் வெற்றி தோல்வி என்று எதுவுமே இல்லை! அழகான உறவுக்கு நீயும் அஸ்திவாரம் தான்! அதை நிரூபிக்கிறேன்” என்று கூறிய அன்பு தனது பாதி சக்தியை ராகவனின் மனதிற்குள் அனுப்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.