(Reading time: 36 - 71 minutes)

தூக்கத்தில் அருகில் கைப்போட்ட ராகவன், அங்கு ஸ்வாரகா இல்லை என்றதும் விழித்துக் கொண்டான்.கையில் பாட்டிலுடன் நின்றவளைக் கண்டதும் அவனுக்கு சர்வமும் அடங்கி போனது!

“ஹேய் ஜிலேபி!” என்று அவன் அழைக்கவும், அவன் தன்னை அழைத்த விதத்தில் பாட்டிலைக் கீழே போட்டிருந்தாள் ஸ்வாரகா. அவளுக்குள் இருந்த பொறாமை தனது சக்தியின் வீரியத்தை வெகுவாய் குறைத்துக் கொண்டது. அதனால் அதீத கோபத்தில் இருந்தவள், இப்போது கண்ணீர் துளிகளினால் அதை கரைத்துக் கொண்டிருந்தாள்.

“போடா .. நான் ஒன்னும் உன் ஜிலேபி இல்லை! என்னை விட்டுட்டு போயிட்டல்ல நீ! நான் உனக்கு வேணாம் போ.. உன் அத்தைப் பொண்ணுக்கிட்ட போ!” என்றாள்

“அத்தைப்பொண்ணா?” என்றவன் நடந்ததை நினைத்துப் பார்த்தான். அன்பு குடிகொண்ட அவன் மனதில் இப்போது சந்தோஷம் மட்டும்தான் இருந்தது. அவளிடம் ஓடி வந்தவன், அவளைத் தன் கை வளைவில் நிறுத்திக் கொண்டு பேசினான்.

“ ஹேய் விடுடா என்னை”

“ முடியாது டீ.. என்ன பண்ணுவ?”

“பெரிய இவன் மாதிரி ரட்சனாவை தேடி போனீயே!”

“ஹா ஹா மக்கு ..! அதை நீ நம்பிட்டியா? ரட்சனா எனக்கு ஃபோனே பண்ணல.. உன்னை வெறுப்பேத்தலாம்னு நினைச்சுத்தான் அவ பேரை சொன்னேன்!”

“அப்படியா?” என்று விழிகளை விரித்தாள் ஸ்வாரகா. அவளது மூக்கை செல்லமாய் பிடித்து ஆட்டியவன்,

“ ஆமாடீ செல்லம்” என்றான்.

“ ஆனா நீ வெளில கிளம்பி போனீயே??”

“ஆமாம்! நீயோ செம்ம கோபத்துல இருந்த,, பக்கத்துல வேற நிறைய கண்ணாடி ஜாடிகள் இருந்துச்சு.. நீ தானே இன்னைக்கு மதியம் கொலையும் செய்வாள் பத்தினின்னு டைலாக் விட்ட? எனக்கும் உயிர் மேல ஆசை இருக்காதா? அதான் ஜூட் விட்டேன்” என்றான் அவன் இலகுவாய்.

“ அப்போ உனக்கு என்மேல கோபம் இல்லையா ராகவா?”

“இருந்துச்சு .. நிறையவே இருந்துச்சு.. பட் தனியா இருக்கும்போது யோசிச்சு பார்த்தேன்.. என் மேல ரொம்ப லவ் இருப்பதினால்தானே உனக்கு நான் ரட்சனாக்கிட்ட பேசினது பிடிக்கல? பொறாமையில் தானே நீ பொங்குன? அதை நினைச்சு பார்த்தப்போ சும்மா ஜிவ்வுனு இருந்துச்சு !”

“ என்னடா சொல்லுற?”

“ பின்ன என்னவாம் ?  எனக்குன்னு ஒருத்தியாய் நீயிருந்தும்.. நீ மட்டும்தான் எனக்குன்னு உனக்கே புரிஞ்சும், நீ பொறாமை படுறன்னா உனக்கு என்மேல எவ்வளோ லவ் இருக்கும்? அதுவும் யாமினி கல்யாணத்துல நீ மொறைச்சுக்கிட்டே லுக்கு விட்ட பாரு.. செம்ம அழகு டீ ஜிலேபி  நீ” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

தன்னுள் உறைந்திருக்கும் பொறாமை மொத்தமாய் மறைந்துவிடாததினால் மீண்டும் ஆரம்பித்தாள் ஸ்வாரகா.

“ இருந்தாலும் நீ ரட்சனா முன்னாடி நடந்துகிட்ட விதம் தப்புத்தான் ராகவா!”

“ ஒத்துக்குறேன்டீ.. என் தப்புதான் .. என்னை மன்னிச்சிடு .. சரியா? இதோ இப்போவே அவ நம்பரை டிலீட் பண்ணுறேன்” என்றவன் சொன்னதை செய்தான். அவன் நம்பரை டிலீட் செய்தபோது மனைவியின் முகத்தில் தெரிந்த பாவங்களைக் கண்டு ரசித்தான் ராகவன்.

“ ஆயிரம்தான் இருந்தாலும், பொண்ணுங்க பொறாமை படுற அழகே தனிதான்!”என்று அவன் ஸ்வாரகாவை அணைத்துக்கொள்ள, முழுதாய் சமாதானம் ஆகாமல் திமிறினாள் ஸ்வாரகா.

“ செழியனைப் பற்றி…” என்று அவள் இழுக்க,

“அவன் கல்யாணத்துக்கு நாம போயி மொய் வெச்சுட்டு வரலாம். மத்தபடி அவனைப் பற்றி பற்றி நோ மோர் டாக்கிவ்” என்றவன் அவளது இதழ்களுக்கு பூட்டுப் போட்டான். ஊடலை வென்றிருந்த காதல், கூடலில் நெகிழ்ந்து நித்திரையில் ஆழ்ந்திட, இருவரின் மனதில் இருந்த அன்பும் பொறாமையும் வெளிவந்தன.

“ நல்ல உறவுக்கு நீ தான் முக்கியம் அன்பே!” என்று பொறாமை கூறிட

“ அந்த உறவின் பிணைப்பை உறுதியாக்கிட உன் உதவியும் அவசியம்” என்று அன்பு கூறிட,

பூமியின் ஒரு நாள் முடியப்போகும் அபாய அசரீரி இருவருக்கும் கேட்டிட, தாங்கள் பரிசோதித்த இரு ஜோடிகளையும் மீண்டும் வாழ்த்திவிட்டு தங்களது உலகத்திற்கு திரும்பின இரு உணர்வுகளும்.

முதல்நாள் நடந்த பரிசோதனையின் எந்த தடையமும் இல்லாமல், ராகவன்- ஸ்வாரகா, யாழமுதன்- யாமினி நால்வரும் தத்தம் இல்லற வாழ்க்கையை காதலுடன் தொடர்ந்தனர். அவர்களை வாழ்த்திவிட்டு நாமும் விடைப்பெருவோம்.

ஹாய் ப்ரண்ட்ஸ்! எந்த ஒரு உணர்வுமே ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும்போது பேரழகுதான். ஆனால் அனைத்து உணர்வுகளையும் அடக்கி வாழ்ந்திடும் அளவிற்கு நாம் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. தவறுகள், ஊடல்கள் ஏற்படுவது சகஜம் தான்! அதுவும் அன்பு இருக்கும் இடத்தில் எல்லாம் நிச்சயம் பொறாமை இருக்கும். ஆரோக்யமான பொறாமை உணர்வு அதீத மகிழ்ச்சியை தந்திடும். அதிகமாய் நேசியுங்கள், அளவாக பொறாமை படுங்கள்! காதலைச் சொல்வது போல, பொறாமையை பாதிக்காதப்படி வெளிப்படுத்தும் திறனும் சுவாரஸ்யமானது.! உங்களின் அன்பார்ந்த உறவுகள் உங்கள் கையில் சிறையாக இல்லாமல் சிறகு விரித்து பறந்து மீண்டும் உங்களிடம் வந்து சேர்ந்திட என் வாழ்த்துக்கள். பாய் பாய்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.