திலகவதியோடு அதிக நேரம் செலவழித்தாள்.
"அம்மா. என்னை வளர்த்த மாதிரி என்னோட குழந்தையையும் வளர்ப்பீங்களா?"
அடிக்கடி திலகவதியிடம் அவள்தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.
"என்ன இப்படி கேட்டுட்டேடா செல்லம். என் பேரக் குழந்தையை நான் வளர்க்காமல் என்ன செய்யப்போறேன். அதற்கு நான் கொடுத்து வைத்திருக்கனும்டா செல்லம்." திகலவதிக்கு அவள் எதற்காக சொல்கிறாள் என்று புரியவில்லை. அதனால் அப்படி சொன்னாள்.
மகள் தன் முடிவைப் பற்றித் தெரிந்ததால்தான் அப்படி கேட்கிறாள் என்று தெரியாமல் மகளிடம் பிரியமுடன் சொன்னாள்.
"எனக்குப் பிறக்கப்போற குழந்தையை எப்படி பார்த்துக்குவே?" என்று இளங்கனியனிடமும் கேட்பாள்.
அவன் கண்களை விரித்துக் கொண்டு பிறக்கப்போகும் பாப்பாவை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்வான் என்று பரவசத்துடன் சொல்வதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அவன் பிறக்கப் போகும் குழந்தைக்கு தாய் மாமனாக மட்டுமல்லாமல் ஒரு சகோதரனாக நல்ல நண்பனாக இருப்பான் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஒவ்வொரு நாளும் தன் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பிரசவ நாளும் நெருங்கியது.
பேரக்குழந்தை பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியுடன்தான் அவர்கள் கண்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கண்மணி திலகவதியிடம் குழந்தையின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கண்களை மூடினாள்.
வீட்டில் உள்ளவர்களுக்கு கண்மணியின் மறைவு பேரிடியாய் இறங்கியது.
திலகவதிக்கு மகள் ஏன் தன் குழந்தையை வளர்ப்பதை பற்றி அடிக்கடி தன்னிடம் வலியுறுத்தினாள் என்று புரிந்தது.
பைத்தியக்காரி. முன்பே தன்னிடம் சொல்லியிருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாமே என்று வருந்தினாள். இப்போது அவளை சோகத்தில் மூழ்க விடாமல் பிறந்த குழந்தையின் பொறுப்பு இருந்தது.
ராமநாதன் இடிந்து போனான். இளவரசனின் போக்கு வேறு சரியில்லை. இப்போதெல்லாம் அவன் பெரியவர்களின் பேச்சையே கேட்பதில்லை. தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறான். அத்துடன் கண்மணியின் மறைவு வேறு.
Like RaSu's stories? Now you can read RaSu's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!