(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

சந்தோஷமா இருக்கியா”

   

”அது ஒண்ணுதான் குறைச்சல் இங்க”

   

”ஏன்டா இப்படி எரிஞ்சி விழற ஏன் ஆபீஸ்ல என்னாச்சி”

   

”என்னென்னவோ நடக்குது எனக்கு இங்க நடக்கறது, எதுவும் சரியா படலைக்கா“

   

”டேய் உன் மாமா ஆபீசை நல்லபடியாதான் நடத்தறாரு அதை சந்தேகப்படாத, உன் ஸ்டைல்லயே எல்லா இடமும் இருக்கனும்னா எப்படி சொல்லு”

   

”இல்லைக்கா இது வேற விசயம் சரி உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் பதில் சொல்லு”

   

”கேளு”

   

”உனக்கு ரோஜாவை தெரியுமா”

   

”ரோஜாவா அது யாரு”

   

”நம்ம ஆபீஸ்ல க்ளர்க்கா வேலை செய்ற பொண்ணு”

   

”ஏன்டா ஆபீஸ்ல வேலை செய்றவங்களை பத்தி எனக்கென்னடா தெரியும்“

   

”இல்லைக்கா மாமா என்னிக்காவது அவளை பத்தி உன்கிட்ட பேசியிருக்காரான்னு கேட்கறேன்“

   

”இல்லையே இப்பத்தான் இந்த பேரை நீ சொல்லித்தான் நான் கேள்வியே படறேன்”

   

”சரிக்கா சரி”

   

”எதுக்குடா கேட்கற”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.