(Reading time: 149 - 298 minutes)

இது விஸ்வநாதன் எதிர்பார்த்ததுதான். வழக்கை ஏற்று நடத்தும் ஜட்ஜ் என்ற முறையிலும் இனி மதுமதி அவர் பொறுப்புதான். என்று நினைத்தார்.

பிறகு மதுமதியின் உடல்நிலை  தேறி சகஜமாக இரண்டு மாதங்களாகியது. மதுமதியை விஸ்வநாதன் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். 

அபிஷேக்கால் அவளை தாக்கிய நபர்களின் நோக்கத்தை இன்னும் தெரிந்து கொள்ள முடியவிலை. ஏனெனில், கிடைத்த அந்த ஒரு எதிரியும் கோமா நிலைக்கு சென்றுவிட்டான். தற்சமயம் விஸ்வநாதனின் பாதுகாப்பில் அவள் இருப்பதால், அபிஷேக் அவளைப் பற்றி கவலைப்படவில்லை.

மருத்துவமனையிலிருந்து அவளை அழைத்து தன் வீட்டிற்கு கொண்டு வ்ந்து விட்டார்.. அவளுடைய நிலையினைப் பற்றி விக்ரமிற்கும், பாஸ்கருக்கும் மட்டுமே தெரியும். ஆகவே மதுமதியை அவர்களுடைய வீட்டிற்கு ராதையின் அனுமதி பெற்றபின் அழைத்துக் கொள்ள முடிவு செய்தனர். அதுபற்றி அவளிடம் தெரிவிக்க தக்க சமயத்திற்காக காத்திருந்தனர்.

விஸ்வநாதனின் வீட்டினருடன் மதுமதிக்கு ஏற்கனவே பழக்கம் இருந்ததால், அங்கு இருப்பதில் அவளுக்கு சிரமம் இல்லை. அதிலும் அவருடைய இரண்டாவது மகன்  நித்யசந்திரனும், மகள் ரம்யசந்திராவும் அவளுக்கு சிறுவயதிலிருந்தே நண்பர்கள். உண்மையை சொல்லப் போனால், அவர்களுக்காக காரியம் சாதிக்க விஸ்வநாதனிடம் தூது செல்வதும் மதுதான்.   எனவே அங்கே அவள் சற்றும் தயக்கமின்றி தங்கினாள். சீதாம்மாவிற்கு அவள் உதவியாகவும் இருந்தாள். . அன்றிலிருந்து அவள் இங்கேதான் இருக்கிறாள்.

இப்போது அவளை இங்கே தொடர்ந்து வைத்திருப்பது சிக்கல்… வெளியே அனுப்புவதும் ஆபத்து… இதற்கு ஒரு சொல்யூஷன் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் இருந்தார்.

சத்யனின் விசிட் அவரை இந்த பிரச்சினை பற்றிய சிந்தனைக்கு ஒரு தீர்வு கொடுத்திருந்தது.

. மறுநாள் காலை அவரைத் தேடிக் கொண்டு சத்யசந்திரன் வந்தான். அவனிடம் பேசும்போது அவரையும் அறியாமல் மதுமதி குறித்த கவலையை தெரிவித்தார். அவளை அங்கே வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையினை விளக்கினார். நித்யன் இருக்கும் இடத்தில் அவளை வைத்துக் கொள்ளமுடியாது என்று கூறினார்.

அவர் எதிர்பார்த்தது, சத்யனுடன் அவளை  சிறிது நாட்களுக்கு அனுப்பி வைக்கலாமோ என்று கேட்க எண்ணினார். அதை அவனிடம் கேட்கவும் செய்தார்.

“டாட்… மதுமதியை என்னுடன் வைத்துக் கொள்வதும் தவறுதானே. அங்கு நான் மட்டும் தனியாக இருக்கிறேன். அவள் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளை வேறு யாருடனும் தங்க வைக்க முடியாது. நம் கண்ணெதிரிலேயே இருந்தாக வேண்டும். அவள் உங்களிடம் இருப்பதுதான் சேஃப்”

 “அவள் ஒப்புக் கொண்டால் அவளை மருமகளாக்கி இங்கேயே வைத்துக் கொள்வோம். என்றுதான் நானும் சீதாவும் நினைத்தோம்… அவள் அதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை” மது மறுத்ததை பற்றி கூறி புலம்பினார்.

அவர் பேசும்போதே சத்யனின் மனமும் ஒரு சிறிய கணக்கிற்கு விடையை தேர்வு செய்துவிட்டது. அவனுடைய பிரச்சினை தீரவும் வழிகிடைக்கும்.

“இப்போது என்ன பிரச்சினை அப்பா. மதுமதிக்கு காதல் தோல்வியால், திருமணம் செய்யகொள்ள விருப்பம் இல்லை. ஆனால் அவளை வேறு எங்கும் அனுப்பவும் முடியாது. ஏனெனில் அவள் உங்களுடைய பொறுப்பு. வீட்டிலும் வைத்துக் கொள்ள முடியாது ஏனெனில் திருமணம் ஆகாத பெண் வீட்டில் இருப்பது நல்லதல்ல. சரிதானே…” அவன் கேட்டது, அதேசமயம், அறையின் உள்ளே வந்து கொண்டிருந்த மதுமதியின் காதிலும் இது விழுந்தது.

“ம்… இந்த ஐடியா சரியா என்று பாருங்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், அவளை நான் திருமணம் செய்து கொள்கிறேன். உங்களுடைய மருமகள் என்ற உரிமையும் பாதுகாப்பும் கிடைக்குமல்லவா?.”. அவன் கேட்ட கேள்வி அவரை அதிர்ச்சியுற வைத்தது.

அவன் அவசர குடுக்கைபோல கூறினாலும், உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது, அவனுடைய ஐடியாவை ஏற்க மறுத்து… நித்யனை இதற்கு சம்மதிக்க வைத்துவிடுவாரோ என்று எண்ணினான்.

“இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அங்கிள், எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?” உள்ளே வந்த மதுமதி கோபமாக கூறினாள்.

“சரி, ஐ அண்டர்ஸ்டான்ட்… முதலில் திருமணம் செய்து கொள்வோம் பிறகு ஒரு மூன்று மாதங்கள் கழித்து இந்தத் திருமணம் வேண்டாம் என்று கூறிவிடு இதுபோன்ற ஒப்பந்த திருமணங்கள் அங்கே வெளிநாட்டில் சகஜம்” என்றான்.

“சத்யன், இது கலாச்சாரம் மிக்க நாடு இப்படியெல்லாம் பேசக்கூடாது. போலித் திருமணம் செய்வது தவறாகும்” விஸ்வநாதன் மறுத்தார்.

“எப்படி தவறாகும்… மிஸ்.மதுமதிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. உங்களுக்கு அவர்களை தனியேவிட மனமில்லை. ஏதோ உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சொல்கிறீர்கள். இங்கே உங்கள் கண்ணெதிரிலேயே இருக்க வேண்டும்.   இதில் கலாச்சாரம் என்ன செய்யும். எனக்கு ஒன்றும் இல்லை. நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு என்று நான் ஒன்றும் செய்ததில்லை. இதை உதவியாக செய்ய விரும்புகிறேன். அவ்வளவுதான்…” மூச்சுவிடாமல்  பேசி இருவரையும் சம்மதிக்க வைக்க முயற்சித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.