(Reading time: 149 - 298 minutes)

உண்மையாகவே அவன் ஒரு சிறந்த வியாபாரி என்பதை இங்கு நிருபித்தான். சம்பந்தப்பட்ட மூவருக்கும் லாபம் கிடைக்கும் ஏற்பாடு அது என்று அவனுக்குத் தெரியும்.

“நீ தனவர்சினியை…” அவர் முடிக்கும் முன்,

“அது இப்போதைக்கு இல்லை.” ஒருவேளை அவன் வேறு ஒரு பெண்ணை மணப்பதாக இருந்தால், அவள் இதற்கு சம்மதிக்கலாமில்லையா என்று எண்ணினான். எனவே அவனுடைய ப்ரேக்-அப் பற்றி சொல்லவில்லை.

“சரி, நான் இதற்கு சம்மதிக்கிறேன். ஆனால், விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்தான் திருமணம் செய்து கொள்வேன். பிறகு மூன்று மாதங்கள் கழித்து  நீங்கள் திரும்ப வந்து விவாகரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.”

எவ்வளவு எளிதாக பேசுகிறாள்.. உண்மையில் அவளுக்கும் ஒரு பயம் இருந்தது, எதையாவது சொல்லி  நித்யனை திருமணம் செய்யச் சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சினாள். எனவே சத்யனின் ஆலோசனைக்கு அவசரமாக ஒப்புக் கொண்டாள்.

விஸ்வநாதன் ஏற்கனவே ஏகப்பட்ட விவாகரத்து வழக்குகளை பார்த்து இருந்ததால் அவரை விவாகரத்து என்ற சொல் பயமுறுத்தவில்லை.  உண்மையிலேயே இது நல்லதா கெட்டதா என்று தெரியவுமில்லை., இதை ஒரு வழிபோல நினைத்து ஒப்புக் கொண்டார். ஆனால், மற்றவர்களுக்கு இதுபற்றி தெரியக்கூடாது என்று சத்தியம் வாங்கினார்.. அதது நடக்கின்றபோது மற்றவர்கள் புரிந்து கொள்ளட்டும்.  ஆனால், மதுமதியின் எதிர்காலத்திற்கு ஒரு பாதுகாப்பை தர அவரால் முடியும்.

எனவே விஸ்வநாதன், சத்யன்-மதுமதி திருமணத்தை சட்டப்படி உண்மையாக்க ஏற்பாடுகளை தொடங்கினார். சீதாவிடம் தெரிவித்தபோது நம்பாத பார்வை பார்த்து,

“இதில் ஏதும் உள்விவகாரம் உள்ளதா, விஸ்வா?” என,.

“எனக்கு மதுமதியை வேறு எங்கேயும் அனுப்ப விருப்பமில்லை. எவ்வளவு பெரிய ஆபத்தை கடந்திருக்கிறாள். அந்த குழந்தை நம் பொறுப்பு என்று நினைக்கிறேன். அதற்காக சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிவந்தாலும் நான் எடுப்பேன். இந்த வீட்டின் மூத்தமருமகள் என்ற உரிமை அவளுக்கு கிடைக்கும்.  நம் மகள்போல் நினைத்து, அவளின் எதிர்காலம் பற்றி நாம் முடிவெடுக்கலாம்”

“அப்படியெனில், இது தற்காலிக தீர்வா…?”

“எனக்கு வேறு வழி தெரியவில்லை, சீதா. இந்தப்பக்கம் மதுமதியின் பாதுகாப்பு அந்தப்பக்கம்  நம் குடும்ப கௌரவம். இந்த யோசனையை சத்திதான் கூறினான். உனக்குத் தெரியுமல்லவா… அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறான் என்று… எனவே இது நிரந்தரம் இல்லை. அவன் இதை தெரிவித்தபின்தான் மதுவும் ஒப்புக் கொண்டாள். சிலவற்றை மறக்கவும் மாற்றவும்  அவளுக்கு காலம் அவகாசம் தரட்டும். இந்த முடிவின் பின் ஒரு நல்ல விசயம் உள்ளது. அது, மதுமதி நமக்கு  மருமகளாகி விடுவாள்..அவளுடய வழக்கின் ரகசியமும் காப்பாற்றப்படும். அவளின் எதிர்காலம் பற்றி நாம் திட்டமிடலாம். அவள் உரிமையுடன் இங்கிருக்கலாம். பிற்காலத்தில் அவள் விருப்பப்பட்டால், மாற்று வழியை அமைத்துக் கொடுக்கலாம். சத்தியும் இங்கிருக்கப்போகிறவன் அல்லவே.”

தலையை கையில் பிடித்துக் கொண்டு சீதா அமர்ந்துவிட்டார். “இது அந்தப் பெண்ணுக்கு நாம் காட்டப்போகும் வழியா இல்லை முடிவா?” .

மதுமதி தன் கடந்த காலம் பற்றி சீதாவிடம் கூறியது நினைவிற்கு வந்தது, மதுமதியால் இப்போது ஒரு தீர்மானம் எடுக்க முடியாததற்கும், இந்த தற்காலிக ஏற்பாட்டிற்கு அவள் ஒப்புக் கொண்டதன் காரணத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிலசமயம்  நோயாளி உயிர் பிழைக்க கத்தி வைப்பதுபோல் இந்த முடிவை எடுத்துதான் ஆகவேண்டும். உயிர் பிழைத்தலே வாழ்வதன் பொருள் என்பதை அவருடைய மருத்துவம் சொன்னது.

துபோன்று ஒரு ஏற்பாட்டிற்கு மதுமதி சம்மதித்தது இருக்கட்டும், அதையுமே தீர ஆலோசித்து செயல்படும் சத்யன் எப்படி இந்த யோசனையை முன் வைத்தான். மதுமதி தொடர்புடைய மூன்று மாத ஃப்ளாஷ்பேக் அவனுக்கும் இருக்கிறதல்லவா? ம்… லெட்ஸ் ஸீ!

மதுமதியின் இன்றைய நிலைக்கு காரணமான அந்த சம்பவம்  நினைவிற்கு வந்தது.   அது…..

 அன்று ஒரு குறுகலான சந்திற்குள் காரை திருப்பிவிட்டதன் பலனை முழுவதுமாக சத்யசந்திரன் அனுபவித்துக் கொண்டு இருந்தான். அது நகரின் முக்கிய கடைகள்  நிறைந்த வீதியாகும், வண்டியை ரிவர்ஸ் எடுக்க முடியவில்லை. எனவே சற்று தூரம் சிரமப்பட்டு அதே வீதியில் ஒட்டிச் சென்று பின் வலதுபக்கம் வடம்போக்கித் தெருவில் திருப்பினால் அவனுடைய சிறிய மாடல் போலோ கார் செல்வதற்கு வழி கிடைத்து விடும். அவன் எதிர்பார்த்தது போலவே வடம்போக்கித்தெருவில் ஆள் நடமாட்டம் குறைந்து இருந்தது  ஒரு சுதந்திர உணர்வுடன் மூச்செடுத்து அவன் காரை ஓட்ட ஆரம்பிக்கையில் முன்னால் சென்ற மாருதியின் இடதுபக்க கதவு திறந்தது. வீதியில் சென்று கொண்டிருந்த வெள்ளை வண்ண சுடிதார் அணிந்திருந்த பெண்ணை இழுத்து உள்ளே தள்ளிக் கொண்டு விரைந்தது.

;கிட் நாப்பிங்….’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.