(Reading time: 26 - 51 minutes)
சிறுகதை - சாரங்க் - அசிந்த்ய குமார் சென் குப்தா (சு.கிருஷ்ணமூர்த்தி)

திருடுவார்கள். பால்காரன் பானையில் பால் எடுத்து வருவான். மூங்கில் உழக்கால் அளந்து தருவான். நசீம் கரைக்குப் போய் அதை வாங்கிக் கொண்டு படகிலேறுவான். படகிலிருந்து பணங்கொடுப்பதாகச் சொல்வான், கொடுக்காமல் ஏமாற்றி விடுவான். வயலிலிருந்து பிஞ்சு வெள்ளரிக்காய் கூடை கூடையாக விற்பனைக்கு வரும். அதை மீனோடு சேர்த்துச் சமைக்கலாம், அல்லது தனியாகப் பச்சையாகவே தின்னலாம். "நான் சாரங்கோட வேலைக்காரன். ஒன் காசைக் கொடுத் துடுவேன்," என்று சொல்லி நசீம் வெள்ளரிக்காய் வாங்கிக் கொண்டு படகில் ஏறிவிடுவான். ஆனால் காசு கொடுக்க மாட்டான்.

  

இவ்வளவு காலத்துக்குப்பின் சாரங்க் அவனுக்கு ஒரு அரைக்கை சட்டை கொடுத்தான். லுங்கி எப்போது கொடுப்பானோ?

  

ஒருநாள் நசீம் சாரங்கிடம் ஓரணா கேட்டுவிட்டான்

  

இதுவரை யாரும் துணிந்து சாரங்கிடம் காசு கேட்டதில்லை. சாரங்க் புருவத்தை உயர்த்திக்கொண்டு கேட்டான், "என்ன காசா?"

  

அசட்டுத் துணிச்சலில் ஒரு பயங்கரத் தவறு செய்துவிட்ட உணர்வு ஏற்பட்டது நசீமுக்கு. அவன் பயத்துடன் விழித்தான்.

  

"எதுக்கு காசு?"

  

"ஒரு மண் குடுவை டீ குடிக்க.."

  

உடனே ஒரு பலமான அறை விழுந்தது நசீமின் கன்னத்தில். அவன் நிலை குலைந்து கீழே விழுந்தான்.

  

சாரங்க் கர்ஜித்தான், "என்ன அதிகப் பிரசங்கித்தனம்! எங்கிட்டே பீடிக்குக் காசு கேக்கறானே..! பீடி வாங்கணுமாம், பீடி ..! இன்னொரு நாள் கள்ளு போத்தல் வாங்கணும்பான்..! இந்த மாதிரி திமிரு பண்ணினா ஆத்துக்குள்ளே தூக்கி எறிஞ்சிருவேன், ஆமா!"

  

அழுகையினூடே அம்மாவின் நினைவு வந்தது நசீமுக்கு. அவன் இருட்டில் தண்ணீரைத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.