(Reading time: 57 - 113 minutes)

"அம்மா அப்பாவையா இல்லை பொண்டாட்டியையா?"

"சும்மா இருங்க நீங்க. அவனை கிண்டல் பண்ணிக்கிட்டு. அப்புறம்  சூர்யா, என்கிட்ட வாரம் ஒரு தடவை பேசினாலும்  பரவால்ல. ஆனா மதிக்கு தினமும் போன்  பன்னிரு. ஒழுங்கா சாப்பிடு. லீவ்  கிடைச்சா வந்துட்டு போ", என்றாள் மங்களம்.

"சரி மா , நீங்களும் உடம்பை பாத்துக்கோங்க. அப்பா நீங்களும் தான். அப்புறம் ஊருக்கு போனா கலையை கூட்டிட்டு போக வேண்டாம் மா. அத்தை அவளை ஏதாவது சொல்லுவாங்க", என்றான் சூர்யா.

"சரி பா, அவ இனிமே என்னோட பொறுப்பு. நீ திரும்பி வரும் போது அவளை பத்திரமா உன்கிட்ட ஒப்படைப்பேன்  போதுமா?", என்று சிரித்தாள் மங்களம்.

கண்ணீருடன் அவன் தன் மீது காட்டும் அக்கறையை பார்த்து கொண்டிருந்தாள் கலைமதி. 

கண்களில் வலியுடன் உதட்டில் சிரிப்புடன் அவளிடம் போய் வருவதாய் தலை அசைத்தான் சூர்யா. சரி என்று மண்டையை ஆட்டினாள் கலைமதி.

பின் மறுபடியும் அம்மாவிடமும் மதியிடமும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான். அவனை ஸ்டேசனில் விட சிவ சுப்பிரமணியம் கிளம்பினார்.

முகத்தை தொங்க போட்டு கொண்டு திரிந்த மதியை மங்களம் தான் பல வேலைகள் கொடுத்து அவளை திசை திருப்ப பார்த்தாள். ஆனாலும் அவள் தெளியாததால் "ரூம்ல போய் அவன் கிட்ட போன்ல பேசு மதி", என்று சொல்லி அனுப்பினாள்.

அதன் பின் டிரைன்ல ஏறியாச்சா? சீட் எப்படி இருக்கு? கிளம்பிருச்சா? சாப்பிடலையா? என்று ஆரம்பித்து போன்  உரையாடல் தொடர்ந்தது.

பிரிந்து இருக்கும் காதலர்களுக்கு மட்டுமே போன் அருமை தெரியும்.

அதன் பின் இரண்டு நாள்களில் ஷியாமும் பாரின் கிளம்பி விட்டான். காவ்யா அவனுடைய பேகில் வைத்திருந்த கிஃப்ட்டை ஊட்டி சென்றவுடன்  எடுத்து  பார்த்த போதே அசந்து போனான். 

அதில் காவ்யாவின் சின்ன வயதில் இருந்து எடுத்த பல போட்டோக்களை வைத்திருந்தாள். ஒரு போட்டோவை வைத்தே காதலில் விழுந்தவன் இன்று அவளுடைய பல போட்டோகளை அள்ளி கொண்டு சென்றான்.

மதியும், சூர்யாவும் போனில் குடித்தனம் நடத்தினார்கள் என்றால் ஷியாமும், காவ்யாவும் மெயிலில் குடும்பம் நடத்தினார்கள்.

ஞாயிறு அன்று மட்டும் ஷியாம், காவ்யா வீட்டுக்கு போன்  செய்து பேசுவான். பெரியவர்களும் சிரித்து  கொண்டே அவளிடம் கொடுத்து விடுவார்கள்.

இப்படியே அவர்களின் காதலும் படிப்பும் தொடர்ந்தது. கடைசி செமஸ்டரில்  இருந்தார்கள் மதியும் காவ்யாவும்.

இடையில் சூர்யா இரண்டு முறை வந்து போனான். வரும் போது முகம் மலரும் மதி, போகும் போது சுருங்கி போவாள். அவளை பிரிய முடியாமல் சூர்யாவும் தவித்து தான் போனான்.

இந்த இடைவெளியில் மற்றும் இரண்டு விசயங்கள் நடந்தது. ஒன்று கலைமதியின் தங்கை தேன்மொழி, கூட படிக்கும் ஒருவனை விரும்பி காலேஜ் ஹாஸ்டலில் இருந்து அவனுடன் ஓடி போனது. அது பெரிய பிரச்சனையாகி  போனது.

அதன் பின் அவர்களை போலீஸ் கண்டு பிடித்து, காலேஜில் மன்னிப்பு கேட்டு, படிப்புக்காக அவர்களும் மன்னித்து விட்டார்கள்.

ஆனால் அனைவரும் வள்ளியை தான் பேசி தீர்த்து விட்டார்கள். "அந்த கலைமதியை எப்படி கொடுமை செஞ்ச? அதான் உன் மக இப்படி குடும்பத்தை சந்தி சிரிக்க வச்சிட்டா. நீ கொடுத்த செல்லம் தான் காரணம்", என்று அவர்கள் கேட்ட கேள்வியில் கூனி குறுகி போன வள்ளிக்கு ஒழுக்கமாக இருந்த மதியை நினைத்து பெருமையாகவும், தான் நடந்து கொண்டது கீழ்த்னமான செயல் என்றும் புரிந்து போனது.

ஒரு முறை கலைமதியை பார்க்க அவளே வந்தாள். அவளை பார்த்து அதிர்ந்த மதியை, வள்ளி கேட்ட மன்னிப்பு பிரம்மிக்க வைத்தது.

அப்பாவியான மதியும் "பெரியவங்க நீங்க. என்கிட்டே  எல்லாம் மன்னிப்பு கேக்கலாமா? அதை விடுங்க சித்தி", என்று பேச்சை மாற்றி  விட்டாள். அதை மதி, சூர்யாவிடம் சொன்ன போது "ஒருநாளும் உன்னை மாதிரி நல்லவளா  என்னால இருக்க முடியாது கலை. உன்னோட கண்ணீரை அன்னைக்கு பாத்தது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. இனி அவங்களை பத்தி என்கிட்ட பேசாதே", என்று சொல்லி விட்டான்.

மற்றொரு விசயம் ஷியாமின் சித்தி விசாலாட்சி, மோகனிடம்  காயத்ரிக்கு ஒரு வரன் பாத்திருப்பதாக  சொன்னாள். மாப்பிள்ளை யார் என்று விசாரித்த மோகன் அவள் சொன்னதை கேட்டு கொதித்து போனார்.  ஏனென்றால் ஒரு பொறுக்கியை பார்த்து வைத்திருந்தாள் விசாலம். 

அவளை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார். "என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்க  நீ யாரு? உன்னை நான் கேட்டேனா? என்ன மொத்த சொத்தையும் அமுக்கலாம்னு பாக்குறியா? நீ இப்படி செய்வேன்னு  தெரிஞ்சு தான் சொத்தை மூணு பிள்ளைங்க  பேருக்கும்  பிரிச்சு எழுதிட்டேன். ஒழுங்கா வீட்டுல சாப்பாட்டை தின்னுட்டு  கிடக்கலைன்னா உன் பேர்ல எழுதி வச்சிருக்க இந்த வீட்டையும் உனக்கு இல்லாம  செஞ்சிடுவேன். அப்புறம்  என் பையன் ஷியாம், காயத்ரிக்கு  நல்ல மாப்பிள்ளையா பாத்துட்டான். மாப்பிள்ளை ஷியாம் கூட தான் வேலை செய்றார். காயத்ரி படிச்சு முடிச்ச உடனே அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு பாரின்க்கு  அனுப்பிருவேன்.  நாங்க அந்த பையனையும் பாத்துட்டோம். காயத்ரியும் இதுக்கு சம்மதம் சொல்லிட்டா. அப்புறம்  ஷியாமுக்கும் பொண்ணு பாத்தாச்சு. உன்னோட பையன் விசயத்துல மட்டும் நீ தலையிட்டா  போதும். அதுவும் நான் எதுக்கு அவனை   உன்கிட்ட விடுறேன்னா, உன் பையன் விசயத்துல நீ எந்த தப்பும் செய்ய மாட்ட பாரு? அதனால தான். புரிஞ்சதா?", என்று அவர் போட்ட போடில் கப் சீப் என்று அமைதியாகி விட்டாள் விசாலம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.