(Reading time: 57 - 113 minutes)

"சும்மா சொன்னேன் டி. நேத்து சரியா தூங்கிருக்க மாட்ட. நல்லா படுத்து தூங்கு. எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு. நாளைக்கு தான் லீவ்"

"ஹ்ம்ம் சரி காலைல ஏதாவது டிபன் செய்றேன்"

"ஹ்ம்ம், மதியத்துக்கு நீ அப்புறமா செஞ்சிக்கோ. எனக்கு டிபன் மட்டும் போதும். எல்லாமே கிச்சன்ல வாங்கி வச்சிருக்கேன்"

"சரி அத்தான்", என்று சொல்லி விட்டு எழுந்து சென்றவள் இருவருக்கும் சமைத்து விட்டு அவனுடன் அமர்ந்து சாப்பிட்டாள். பின் அவனை அனுப்பி விட்டு படுத்து தூங்கியே போனாள்.

நான்கு மணிக்கு அவன் வந்து காலிங் பெல் அடிக்கும் போது தான் எழுந்து கதவை திறந்தாள்.

"ஒண்ணும் சாப்பிடலையா டி?"

"நல்ல தூக்கம்  அத்தான். நல்லா  தூங்கிட்டேன்"

"சரி குளிச்சிட்டு கிளம்பு. வடபழநி கோயிலுக்கு போய்ட்டு வெளிய சாப்பிட்டுட்டு வரலாம்", என்று சொல்லி அவளை கிளம்ப வைத்து அவனும் கிளம்பினான்.

ஆறரைக்கு கோயிலுக்கு  வந்தவர்கள் முருக பெருமானை வணங்கி விட்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு விருப்ப பட்டதை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

இப்போது முழுமையான காதல் போதையில் அவளை அனுகினான் சூர்யா. அவனுடைய நெருக்கத்தில் அவள் அடி வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

இத்தனை நாள் காத்திருப்புக்கு பின்னர் கிடைத்த இந்த சந்தர்ப்பம் சூர்யாவின் உணர்வுகளை விழித்தெழ வைத்தது. அவன் கண்களை காண முடியாமல் வெட்கத்தில் சிவந்தாள் மதி.

அவள் முகத்தில் இருந்த வெட்கம் அவனுடைய உணர்வுக்கு தூபம் போட்டது போல இருந்தது. மெதுவாக அவளை நெருங்கியவன் அவள் இடையில் கை கொடுத்து இழுத்தான்.

அவன் கையில் இருந்து விலகி ஓடியவள் ஜன்னல் கம்பிகளில் முகத்தை புதைத்து நின்றாள். அவள் பின்னே வந்து நின்றவன் அவள் முதுகில் தன் உதடுகளை பதித்தான். அந்த தொடுகையில் சிலிர்த்தவள் கண்களை இறுக்கி மூடி கொண்டாள்.

அவள் தலையில் இருந்த மல்லிகை பூவின் வாசனை அவன் நாசியில் நுழைந்து அவனை மேலும் போதை கொள்ள வைத்தது.

மெதுவாக அவள் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பியவன் மூடி இருந்த அவளுடைய இமைகளின் மேல் முத்தத்தை பதித்தான்.

பின் அவளுடைய நெற்றி, கன்னம் என்று அவன் உதடுகள் பயணித்தது. தன்னுடைய நெஞ்சில் சாய்ந்திருந்தவளை கைகளில் அள்ளி கொண்டவன் அப்படியே படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான். மூடி இருந்த கண்களை திறக்க கூட தோன்றாமல் மெய் மறந்து இருந்தாள் கலைமதி.

"கலை, இன்னைக்கு உன்னை பொண்டாட்டியா பாக்கட்டுமா டி?", என்று அவள் காதில் முணுமுணுத்தான். அவள் கைகள் அவனுடைய முதுகில் அழுந்தி படிந்து அதற்கு  சம்மதம்   சொன்னது.

அந்த ஒப்புதலில் இது வரை காத்திருந்த பொறுமை பறக்க வன்மையாக அவளை ஆக்கிரமித்தான். அவனுடைய எல்லை கடக்கும் செயலை தடுக்கவும் முடியாமல் தாங்கவும் முடியாமல் துடித்தாள் மதி. இது வரை புரியாத அனைத்தையும் புரிய வைத்தான் சூர்யா. முன்னர் அவன் பேசிய பேச்சு அனைத்துக்கும் இப்போது அவளுக்கு விடை கிடைத்தது.

அன்றைய இரவை தூங்கா இரவாக்கி அவளை மீண்டும் மீண்டும் நாடினான் சூர்யா. விடிந்த பின்னர் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த படி தூங்கவே ஆரம்பித்தார்கள். 

அதன் பின்னர் வந்த நாட்கள் இருவருக்கும் தேனிலவாகவே இருந்தது. அந்தரங்கமான அவனுடைய பேச்சுக்களை கேட்டு சிலிர்த்து சிவந்து அவனுடன் ஒன்றினாள் மதி.

அதன் பின் காயத்ரியின் கல்யாணத்துக்கு சென்றார்கள். காயத்ரி கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் கழித்து ஷியாம் காவ்யா கல்யாணம் நிச்சயம் செய்ய பட்டிருந்தது.

காயத்ரி கல்யாணத்துக்கு சென்ற கலையும், சூர்யாவும் ஷியாம் காவ்யா திருமணம் முடிந்த பிறகு திரும்பி வரலாம் என்று நினைத்து ஊட்டியில் தங்கள் தேனிலாவை கொண்டாடினார்கள்.

கல்யாணத்துக்கு முந்தைய நாள் காவ்யாவை பெண்ணழைத்து கொண்டு ஊட்டிக்கு சென்றார்கள்.

காவ்யா கல்யாணம் அன்று மதி அவளை அலங்கரித்து கொண்டு இருந்தாள். பூரிப்பாக அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் காவ்யா. இன்றைய கல்யாண நாள் அவளுடைய கனவு. அதனால் ஒவ்வொரு நிகழ்வையும் அழகான பொக்கிஷமாக அவளுடைய மனதுக்குள் சேகரித்து வைத்தாள்.

அழகு சிலை என அழைத்து வர பட்டவளை வாயை திறந்து பார்த்து கொண்டிருந்தான் ஷியாம். அவனை சூர்யா தான் அடக்கினான் "வாயை மூடு டா, எல்லாரும் பாக்குறாங்க", என்று சொல்லி.

அருகில் வந்து  அமர்ந்தவளின் காதில் "நகை கடை விளம்பரத்துக்காடி வந்திருக்க? நைட் ரூமுக்கு வரும் போது தாலி கயிறை தவிர ஒண்ணுமே தொந்தரவா இருக்க கூடாது. சொல்லிட்டேன்", என்று முணுமுணுத்து அவளை வெட்க பட வைத்தான்.

வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள் காவ்யா.

அதன் பின் தாலியை கட்டியதும், மணமக்களை சூர்யாவும் மதியும் ஓட்டி கொண்டிருந்தார்கள். புது பெண்ணான காயத்ரியும் அவளுடைய கணவன் கிஷோரும் இந்த கலகலப்பில் கலந்து கொண்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.