(Reading time: 57 - 113 minutes)

நாளைக்கு இருவரும் இப்படி அருகருகே இருக்க மாட்டோம் என்ற எண்ணமே இருவரையும் விலக விட வில்லை. அவளுடைய வெற்றிடையில் பதிந்த அவனுடைய கை  அங்கே இங்கே பயணித்து அவளை நிலை குழைய வைத்தது. அவளும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடைய அருகாமையை  மட்டும் அனுபவித்தாள்.

அந்த சரணாகதியே அவளுடைய மன நிலையை அவனுக்கு உணர்த்தி அவனை எல்லையை கடக்க விடாமல் செய்தது. ஒருவர் அணைப்பில் ஒருவர் அசையாமல் கிடந்தார்கள். அருகாமையை மட்டும் பொக்கிஷமாக சேர்த்து வைத்தார்கள். இருவரும் அன்று இரவு ஒரு பொட்டு  கூட தூங்க வில்லை. காலை நான்கு மணிக்கு அவர்கள் அறைக்தவை தட்டினாள் மங்களம்.

"எந்திச்சிட்டோம் அத்தை", என்று உள்ளே இருந்து மதி குரல் கொடுத்ததும் "சரி மா நான் டீ போடுறேன்", என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் மங்களம்.

எழுந்து குளித்து முடித்து துண்டை மட்டும் கட்டி கொண்டு வந்த சூர்யா அவனையே   ஆசையாக பார்த்து கொண்டிருந்த மதி அருகில் வந்து அவள் கன்னத்தை தொட்டான்.

"முதல் நாள் இந்த வீட்டுக்கு வந்தப்ப இப்படி தான வந்தான்? அதுக்கு பின்னாடி எல்லாமே பழகிருச்சு. அவன் எனக்குள்ளே புதைஞ்சு போய்ட்டான்", என்று நினைத்து கொண்டே அவனை பார்த்தாள்.

அவளுடைய பார்வையில் இருந்த காதலில் உருகியவன் "இந்த சேலையை  இப்ப கழட்டி  தா", என்றான். திகைப்பாக அவனை பார்த்தவள் "எதுக்கு அத்தான்?", என்று கேட்டாள்.

"எனக்கு வேணும் டி. நான் கொண்டு போக போறேன். அந்த ஊருக்கு உன்னோட நைட்டி  சுடிதாரை எடுத்துட்டு போக முடியுமா? அதனால நீ கட்டின சேலை வேணும். தினமும் நான் அதை மூடி தான் தூங்கணும்"

அவனுடைய அன்பில் நெகிழ்ந்தவள் " இது அழுக்கு அத்தான்", என்றாள்.

"அதனால தான் அது வேணும். கழட்டு"

"சரி நான் போய் கழட்டி எடுத்துட்டு வரேன்"

"ப்ளீஸ் டி, இங்கயே"

"ச்சி, போங்க"

"ப்ளீஸ் குட்டி மா"

"மாட்டேன், ப்ளீஸ்", என்று கெஞ்சி கொண்டிருந்த அவளை நெருங்கி இருந்தவன் அவளுடைய தோளில் கிடந்த சேலையை சரித்து விட்டான்.

அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தவளின்  வாயை தன் வாயால் அடைத்து அவளை மயக்கியவன் அந்த சேலையை அவள் இடுப்பில் இருந்து அவனே கழட்டி விட்டான்.

அவன் முன்னே அப்படி நிற்க கூச்ச  பட்டு  அவன் மார்பிலே முகத்தை புதைத்த படி நின்றாள் கலை. சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள் வெளியே மங்களத்தின் குரலில் தான் கலைந்தார்கள்.

பின் அவனிடம் இருந்து தப்பித்து  ஓடியவள் ஒரு நைட்டியை  எடுத்து  கொண்டு பாத்ரூம் சென்று விட்டாள்.

அவள் வெளியே வரும் போது அவன் கிளம்பி கொண்டிருந்தான். "இருங்க டீ எடுத்துட்டு வரேன்", என்று வெளியே வந்து மங்களத்திடம் இருந்து வாங்கி இருவருக்கும் சேர்த்து எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்.

டீ  குடித்ததும் அவன் எல்லாம் எடுத்து வைக்கட்டும் என்று நினைத்து மங்களத்துக்கு உதவி செய்ய சென்று விட்டாள்.

அதன் பின் அவன் கிளம்பும் நேரம் தங்கள் அறைக்குள் வந்தவள் அடுத்த நிமிடம் அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்தாள். துக்கத்தை மறைத்து இருவரும் சிரித்த படி இருந்தார்கள். தான் கொஞ்சம் வருத்த பட்டாலும்  கலை அழுவாள் என்பதால் அவன் சாதாரணமாக தன்னை காட்டி கொண்டான்.

கஷ்டத்தோடு  போற அவனை அழுது மேலும் கஷ்ட படுத்த வேண்டாம் என்று தன்னை கட்டு படுத்தி கொண்டாள் கலைமதி.

பின் நீண்ட பிரிவு முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தான். "காலைலைக்கு சப்பாத்தியும், மதியம் லெமன் சாதமும் வச்சிருக்கேன். நைட் வெளிய ஏதாவது வாங்கி சாப்பிடு சூர்யா", என்று கொடுத்தாள் மங்களம்.

"அம்மா", என்று மங்களத்தை அணைத்து கொண்டான் சூர்யா.

"டேய், உன் பொண்டாட்டியை இப்படி கட்டி பிடிச்சா கூட சரிங்களாம். எங்க கிட்ட ஒண்ணும் பாசத்தை புளிய வேண்டாம். பாரின் போனப்ப பாய் அப்பா, பாய் அம்மான்னு சொல்லிட்டு போனவன் இப்ப பொம்பளை பிள்ளை மாதிரி கண் கலங்கிட்டு இருக்க?", என்று கேட்டு அனைவரையும் சிறிது சிரிக்க வைத்தார் சிவ சுப்ரமணியம்.

"போங்கப்பா, அப்ப வேலை பாக்கணும்னு ஆர்வம். இப்ப அப்படியா? அம்மா அப்பாவை எப்படி பிரிஞ்சு இருக்கன்னு வருத்தம் தெரியுமா?", என்றான் சூர்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.