(Reading time: 57 - 113 minutes)

"ஹ்ம்ம் சூர்யா சொன்னான். சென்னை ஏர் போர்ட்டுக்கு அவன் தான் என்னை கூப்பிட வந்தான். அவனை பாத்துட்டு தான் ஊட்டிக்கு போனேன். அங்கே பெட்டியை போட்ட கையோட உன்னை பாக்க வந்துட்டேன் செல்ல குட்டி"

"ஹ்ம்ம் "

"சரி, நீ சென்னைல இருக்கணும்னு நினைக்கிறியா? இல்லை நாம பாரின்ல இருக்கலாமா? இப்ப சொன்னா தான் கல்யாணம் முடிஞ்ச கையோட நாம கிளம்பலாம். இல்லைன்னா சென்னைல ஜாப் பாக்குறேன்"

"எனக்கு இங்க வேண்டாம். பாரின்கே போகலாம். காயத்ரியும் கல்யாணம் முடிஞ்சு பாரின் கிளம்பிருவா. அவ கல்யாணம் அப்புறம் தான நம்ம கல்யாணம்? அவ பின்னாடியே நம்மாளும் போகலாம். உங்களுக்கும் அங்க இருக்க தான் பிடிக்கும்னு தெரியும். உங்களுக்கு புடிச்சது எனக்கும் ரொம்ப பிடிக்கும்"

"அப்ப ஓகே டி, உனக்கு பாஸ் போர்ட்  எடுக்கணும்"

"ஹ்ம்ம் என் கூடவே அம்மா அப்பாவுக்கும் எடுத்துறலாம். அவங்க எப்பவாது நம்மளை பாக்க வரணும்னு நினைக்கலாம்"

"கண்டிப்பா கவி. நாளைக்கே அதுக்கான ஏற்பாடு செஞ்சிரலாம். அடுத்த வாரத்துல இருந்து காயு கல்யாண வேலை ஆரம்பிக்கணும். அதான் இந்த வாரமே வந்தேன். இந்த கேப்ல பாஸ் போர்ட் வேலை முடிச்சிரலாம். சரி நீ எக்ஸாம் நல்ல பண்ணு. நான் ஊருக்கு கிளம்புறேன். நாளைக்கு மீட் பண்ணலாம் சரியா?"

"ஹ்ம்ம், சரி ஷியாம். அப்புறம் பாஸ்ப்போர்ட் அம்மா அப்பாவுக்கு தான் வாங்கணும். எனக்கு இருக்கு. காலேஜ் படிக்கும் போதே நானும் மதியும் அப்ளை பண்ணிட்டோம்"

"வாவ் அப்படியா? அப்ப வீசா மட்டும் ரெடி பண்ணா போதும். அத்தை மாமாக்கு மெதுவா பாஸ் போர்ட் எடுத்துக்கலாம். சரி டி. டேக் கேர்", என்று சொல்லி கொண்டே அவள் காலேஜில் அவளை இறக்கி விட்டான்.

"சரி ஷியாம், பாத்து போங்க", என்று சிரித்து கொண்டே அவனை வழி அனுப்பினாள் காவ்யா.

ஷியாம் வந்ததை கேட்ட மதியும் சந்தோச பட்டாள். அன்று பரிட்சையை முடித்து விட்டு "போன் பண்ணு டி. காயு கல்யாணத்துல மீட் பண்ணலாம்", என்று சொல்லி இரண்டு தோழிகளும் விடை பெற்றார்கள்.

வீட்டுக்கு வந்த மதி அனைத்து பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். 

அன்று இரவு எட்டு மணிக்கு மங்களம் அவளை வழி அனுப்பினாள். சிவ சுப்பிரமணியம் பஸ் ஏத்தி விட்டார்.

ஒரு வாரத்தில் பெரியவர்களும் திருநெல்வேலி வீட்டை காலி பண்ணி விட்டு தென்காசிக்கு கிளம்பி விடுவார்கள். 

பஸ் கிளம்பியதும் சூர்யாவை அழைத்து சொன்னாள் கலைமதி. "காலைல நான் உன்னை கூப்பிட வரேன்  கலை. . தூக்கம் வர வரைக்கும் பேசிட்டே இரு", என்று பேச ஆரம்பித்தான் சூர்யா.

காலையில்  சொன்னது போல் அவள் பஸ் வருவதுக்கு முன்னர் அவன் வண்டியோடு காத்திருந்தான்.

அவனை பார்த்ததும் "அத்தான்", என்று சந்தோசத்தோடு சிரித்தாள் கலைமதி.

களைத்து போய் வந்த அந்த நிலைமையிலும் அழகாக தெரிந்த மனைவியை ரசித்தவன் "கொல்ற டி, வா வீட்டுக்கு போகலாம்", என்று சொல்லி அவள் பைகளை வாங்கி கொண்டான்.

சென்னைக்கு கவுன்சிலிங் போது வந்தவள் அடுத்து இன்று தான் வருகிறாள். ஊரை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளை பைக் கண்ணாடி வழியாக 

பார்த்து கொண்டு வந்தான் சூர்யா. 

"செல்ல குட்டி இது தான் வீடு. வா. உனக்கு பிடிச்சிருக்கா?"

"சூப்பரா இருக்கு அத்தான். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு", என்று சொல்லி கொண்டே திரும்பியவள் அவன் கண்களில் தெரிந்த வேட்கையில் சிலிர்த்தாள்.

அருகில் நெருங்கியவனை மார்பில் கை வைத்து தள்ளி விட்டவள் "குளிச்சிட்டு வரேன்", என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

சிரித்து கொண்டே அங்கே அமர்ந்திருந்தான் சூர்யா.

குளித்து முடித்தவள் அவனை பார்த்து கொண்டே காபி போட சென்றாள்.

இருவருக்கும் காபி எடுத்து வந்தவள்  "நீங்க எப்ப ஆஃபீஸ் கிளம்பனும்?", என்று கேட்டாள்.

"நான் இன்னைக்கு லீவ் போட்டிருக்கேன்", என்று விஷமமாக சிரித்தான்.

"லீவா? எதுக்கு?", என்று உள்ளே போன குரலில் கேட்டாள் கலைமதி. அவள் மனதில் ஒரு படபடப்பு வந்திருந்தது. போனில் அவன் அடிக்கடி சொன்ன  "எப்ப நீ படிச்சு முடிச்சு என்கிட்டே வருவேன்னு இருக்கு டி", என்ற  வார்த்தை நினைவில் வந்தது.

"இன்னைக்கு......", என்று சொல்லி கொண்டே அவளை நெருங்கி அமர்ந்தான் சூர்யா.

"இன்னைக்கு என்ன?????"

"உனக்கு தெரியாதா????"

"போங்க அத்தான். ஆனா இன்னைக்கு எங்கயாவது வெளிய போகலாமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.