Malargal nanainthana paniyale - Tamil thodarkathai
Malargal nanainthana paniyale is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!
வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...
அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!
காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா, இல்லையா?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 16 - பிந்து வினோத்
துளசி நந்திதாவைப் பார்த்து முறைத்தாள். அதாவது முறைப்பது போல் பார்த்தபடி அவசரமாக என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்! உதய் தான் சொன்னான் என்று அவள் நந்திதாவிடம் சொல்ல முடியாதே...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 17 - பிந்து வினோத்
“ஹலோ நாகு, ஹலோ நந்திதா...!” என்றவனின் கண்கள் எப்போதும் போல் நந்திதாவை படம் பிடிக்க, அவளின் முகத்தில் இருந்த அதிர்ச்சி அவனிற்கு ஏதோ சரியில்லை என்பதை சொன்னது.
“என்ன ஆச்சு நந்திதா, ஏன் இப்படி ஷாக் ஆகி இருக்கீங்க?”
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 18 - பிந்து வினோத்
சந்தோஷத்துடன் நாகுவின் கையை பற்றிக் குலுக்கிய உதய், நந்திதா பக்கம் புன்னகை மட்டும் சிந்தி விட்டு அவளின் அந்த இயந்திர மூளையை பற்றி பேச தொடங்கினான்...
நந்திதாவிற்கு ‘சுருக்கென்று’ மனதினுள் தைத்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 19 - பிந்து வினோத்
சரி என்று தோன்றவும் நந்திதா சிறு தயக்கத்துடன் முன் இருக்கையில் அமர்ந்தாள்.
உதய் இது எதையும் கவனிக்காதவன் போல் கவனித்துக் கொண்டிருந்தான்...
நந்திதாவிடம் தோன்றி மறைந்த அந்த மெல்லிய தயக்கம் அவன் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 20 - பிந்து வினோத்
உதய்க்கு அது போல் எந்த தடுமாற்றமும் இல்லை... பல்லி மிட்டாய் கிடைக்காதா என்று ஏங்கியவனுக்கு கிடைத்த டைரி மில்க் சில்க் சாக்லேட் பார் போல் இமைக்காமல் நந்திதாவை பார்த்திருந்தான்... பார்த்துக் கொண்டே இருந்தான்...!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 21 - பிந்து வினோத்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான லக்கி சார்ம் இருக்குமே... ஒருவேளை அவளுடைய சார்ம் உதய் தானோ என்னவோ...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 22 - பிந்து வினோத்
“இந்த ஆனா ஆவன்னா எல்லாம் வேண்டாம்... என்கிட்டே வந்து இவளை லவ் பண்றேன், அவளை தான் கல்யாணம் செய்துப்பேன்னு எல்லாம் சொல்லலாம்னு கனவு காணாதே...”
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 23 - பிந்து வினோத்
“நீங்க ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கலைன்னு யோசிச்சிட்டு இருந்தேன்...” என உண்மையை போட்டு உடைத்தாள் நந்திதா.
உதயின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
“இவ்வளவு தானா? நான் ஏதோ பெரிய விஷயம்னு நினைச்சேன்...! நான் கூட இதே கேள்வியை உங்களை வச்சு யோசிச்சிருக்கேன்,” என்றான் அதே புன்னகை
... -
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 24 - பிந்து வினோத்
என்ன தான் நீங்க இரண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரென்ட்ஸா இருந்தாலும் என்னோட விஷயத்தை எல்லாம் நதி உங்க கிட்ட ஷேர் செய்தால் நல்லாவா இருக்கும்? எங்களுக்கு கொஞ்சம் ப்ரைவசி வேண்டாம்?
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 25 - பிந்து வினோத்
சற்று முன் கண்டது கனவு என்பதை நம்புவதே அவளுக்கு அப்போதும் கடினமாக இருந்தது.
ஆனாலும் எதனால் இப்படி ஒரு கனவு?
அதுவும் உதயுடன்?????
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 26 - பிந்து வினோத்
தன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மும்முரமாக மண்ணை தோண்டுவதாக காட்டிக் கொண்டிருந்த தோழியின் அருகே சென்று வேலையில் இணைந்துக் கொண்ட துளசி, நந்திதாவை ஒரு பார்வை பார்த்தபடி,
“இப்போ எல்லாம் காலம் ரொம்ப மாறி போச்சுல நந்து... வயசு எல்லாம் ஒரு பெரிய க்ரைட்டீரியாவாகவே இல்லை... முன்னாடி
... -
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 27 - பிந்து வினோத்
“இல்லை.... எனக்கு என்னவோ உனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுதுன்னு தோணுது...”
“ஓ, புதுசா ஜோசியம் வேற சொல்ல ஆரம்பிச்சுட்டீயா!!!! நடத்தும்மா நடத்து.... ஆமாம் அது ஏன் உனக்கு அப்படி தோணிச்சு???”
“அது என்னவோ தெரியலை நந்து... நீ உதய் கிட்ட பேசிட்டு இருந்தப்போ என்னவோ
... -
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 28 - பிந்து வினோத்
உதய் கேட்ட விதத்தில் ப்ரியாவின் முகத்தில் மீண்டும் புன்னகை உதயமானது!
“நீங்க எப்படி ஜென்டில்மேனா என் கிட்ட கமிட்டட்ன்னு சொன்னீங்க.... வேற எந்த காரணம் இருந்தாலும், என் மனசு புண் பட்டுறக் கூடாதுன்னும் கொஞ்சோண்டு நினைச்சீகள்ல.... அதே போல நானும் நினைச்சேன்,” என்றாள் அவள் கண்கள் மின்ன!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 29 - பிந்து வினோத்
துளசியின் உதட்டில் புன்னகை வந்தது! “என் சமையல் சாப்பிட உங்களுக்கு ஆசை???? இருக்கும் இருக்கும்... உங்களை பார்த்தாலே அப்படி தான்னு தெரியுதே.... ஏதோ ஷர்ட் போட்டுட்டு வந்தீங்களே சந்தோஷம்,” என்றாள் துளசி கேலியாக.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 30 - பிந்து வினோத்
“அடியே, அடங்கவே மாட்டீயா நீ? அவர் நம்ம ஜூனியர்!”
“ஹா ஹா ஹா...”
“ஒசிமம்!!! எதுக்கு இப்போ சிரிச்சு பயமுறுத்துற?”
“அந்த அவர்ர்ர்ர்ர்... ஜூனியராங்க???”
Page 2 of 4