Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதா - 5.0 out of 5 based on 2 votes

“அழகான கிராதகி” என அவளை மனதிற்குள் திட்டியவாறே தயாரானான் அவன்.

இருவரும் உணவகத்தில் சிறு சிறு சீண்டல்களுடன் வெகுதாமதமாக மதிய உணவினை முடித்தனர். அப்போதே நேரம் கிட்டத்தட்ட ஆறு மணியை நெருங்கியிருந்தது. மேற்கொண்டு அவர்களை ஈன்று வளர்த்தவர்களிடம் நிலவரத்தை சொல்லி எப்படி சம்மதம் வாங்குவது எனவும் தீர்மானித்துக்கொண்டனர்.

பின்னர் அவள் விருப்பத்தின் பேரில் விடுதியை நோக்கி பயணித்தவன் சீருந்தை மிக மெதுவாகவே கிட்டத்தட்ட உருட்டிக்கொண்டிருந்தான்.

“கர்ணா.. அந்த இருசக்கர வாகனம் கூட நம்மை முந்திச் செல்கிறது.. ஏன் இப்படி உருட்டிக்கொண்டிருக்கிறீர்கள்..? அன்றொரு நாள் நீங்களா மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் ஓட்டிச்சென்றது என எனக்கே சந்தேகம் வருகிறது….” என அலுத்துக்கொள்ள

“உயிரில்லாத என் வாகனத்திற்கு கூட என் மனது புரிகிறது… உயிரிருந்தும் புரிந்து கொள்ளாதவர்களிடம் பேசிப் பயனென்ன..?” என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு பதில் சொன்னான் அவன்.

அவனது பதிலில் குபீரென சிரித்தவள், “பேசாமல் ஒன்று செய்யுங்கள் கர்ணா.. உங்கள் வாகனத்தையே வாழ்க்கைத் துணையாக்கிக்கொண்டால் என்ன..? பிற்பாடு இந்தமாதிரி வருத்தப்பட தேவையில்லை அல்லவா..?” என்றாள் கேலிக்குரலில்.

அதே சமயம் கிட்டத்தட்ட விடுதியை நெருங்கியிருந்தனர் இருவரும்.

“அடிப்பாவி… கல் நெஞ்சக்காரி… கொஞ்சமாவது இரக்கம் காட்டுடி” என அவன் கெஞ்ச

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்படிப்பட்ட இரக்க சுபாவத்தினால்தான் ஐந்து வருடம் துறவி மாதிரி என்னை மறந்துவிட்டு வேலை வெட்டி என்று சுற்றிக்கொண்டிருந்தீர்களா..?” அவள் குரலில் உரிமை போட்டியிட்டது.

“அப்போதெல்லாம் எப்போதும் குழப்பமான மனநிலை.. நெருப்பு போல நீ இருந்தபோது நானெப்படி உன்னை நெருங்க முடியும்..? இப்போது அப்படியா..? ஒரு பூச்செண்டொன்றை அருகில் வைத்துக்கொண்டு அதன் வாசனையை நுகராமலிருக்க முடியுமா..?” என ஏக்கத்துடன் கூறினான் கர்ணா.

அவன் உதாரணம் இவளுக்கு வெட்கத்தைத் தருவிக்க, “பூச்செண்டை அதற்கு உரியவர்கள் உங்கள் கரங்களில் சேர்க்கும்போது வாசனையை நுகர்வதென்ன..? அதனை சொந்தம் கொண்டாடியே மகிழலாம்.. ஆனால் அதுவரை  பார்வைக்கு பூச்செண்டு போல தோன்றும் நெருப்பைவிட்டு சற்று விலகியே இருங்கள்” என தனக்குத் தானே வேலியிட எண்ணி அவனிடம் உரைத்தாள்.

சீருந்தை நிறுத்தியவன் அவள் விழிகளில் தனது விழிகளைச் சங்கமித்து “தூரத்திலிருந்து பார்க்கக்கூடவா அனுமதியில்லை..?” என ஆழ்ந்த குரலில் வினவ

அவன் குரலின் காந்தமா..? அவன் பார்வையின் காதலா..? அல்லது பிரிவின் தாக்கமா..? எதுவோ ஒன்று அவளைச் செலுத்தியது. அவனே எதிர்பாராத வண்ணம், அவனை நெருங்கியவள் அவனுடைய கழுத்து வளைவில் தனது கைகளை மாலையாக்கி அணைத்து அவனது கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலை தடுமாறியவன் “சிபி…” என காதலுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் முகம் பார்க்க முயற்சிக்க இயல்பான நாணத்தால் அவன் விழி பார்க்க முடியாதவள் அவனிடமிருந்து விலகி விடுதிக்குள் நுழைந்தாள்.

அவனுக்கு சற்று ஏமாற்றமே..! அடுத்த நிமிடத்தில் அவனுக்கு அழைப்பு தன்னவளிடமிருந்து.

“கர்ணா.. சாலையில் கவனம் பதித்து பத்திரமாக வீடு போய்ச் சேருங்கள்.. சென்றவுடன் எனக்கு தகவல் சொல்லுங்கள்” என தாய்க்கு நிகரான அன்புடன் தன்னவன் நலம் தேடினாள்.

அவளது அன்பில் திளைத்தவன் திரைப்படப்பாடலை முனுமுனுத்தவாறே மகிழ்ச்சியுடன் தனது இல்லம் நோக்கிப் புறப்பட்டான்.

மறுநாள் எப்போதும் போல சூரியன் தன்னவளைக்காண காலைப்பொழுதிலேயே வர ஒருவாறு உறக்கம் களைந்து எழுந்தாள் சிபி. உறக்கத்தில் கனவுகள் விட்டுவிட்டுச் சென்ற முத்திரையாக புன்னகையை ஏந்தியிருந்தது அவள் இதழ்கள்.

விரைவாக குளித்துக் கிளம்பியவள் கர்ணாவை தொலைபேசியில் அழைத்து, “கர்ணா.. நான் அபி வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.. இனி அவள் திருமணம் முடிந்துதான் வருவேன்.. உங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறாள் தானே!.. திருமணத்தன்று தாமதிக்காமல் வந்து விடுங்கள்” என தகவல் சொன்னாள்.

உறக்கம் கலையாத குரலில், “சரி மகாராணியாரே… என்னையும் அவ்வப்போது ஞாபகம் வைத்துக்கொள்.. நேரத்திற்கு நேரம் தவறாமல் சாப்பிடு.. அபி அபி என அன்பில் கரைந்து காணாமல் போய் விடாதே..” என்றான் கேலியுடன்.

அவன் கேலியில் தெரிந்த அன்பு மனதை வருட, “சரி மகாராஜா.. நான் நேரம் கிடைத்தால் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்… இப்போது நீங்கள் உங்கள் நித்ராதேவியின் அன்பில் கட்டுண்டு உறங்குங்கள்” என அதே தொனியில் பதில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

About the Author

Sanyogita

On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாAbiMahesh 2019-04-09 21:24
Nice update Mam.. Poetic way of narrating the Story is very nice :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:46
நன்றி அபிமகேஷ் ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாsaaru 2019-04-08 13:25
Nice update dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:47
நன்றி சாரு ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாAdharvJo 2019-04-07 14:48
:dance: super cool epis ma'am :clap: :clap: rombha rombha pleasant ana journey very poetic :hatsoff: Sibi and karna oda indha bonding simply soulful loved it :dance: Karna oda maturity and thought process wow :hatsoff:

kalam!! Appadi ena plan panikittu irukkun therindhu kola waiting :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:48
நன்றி ஆதர்வ்ஜோ ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாmadhumathi9 2019-04-07 13:28
:clap: nice epi. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:49
நன்றி மதுமதி ஜி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாRanju 2019-04-07 12:52
Superb episode.... Aduthu enna nadakum endru aavalaaga ullathu.. sanyogitha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..! – 16 - சந்யோகிதாசந்யோகிதா 2019-04-17 13:49
நன்றி ரஞ்சி :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top